என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    படப்பை அருகே செல்போன் பறித்த 2 பேர் கைது

    படப்பை அருகே செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுமோ (வயது 35). இவர் படப்பையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள காட்ரம்பாக்கம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 4-ந்தேதியன்று காட்ராம்பாக்கம் பாக்கியம் நகரில் செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுமோவிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். போலீஸ் விசாரணையில், செல்போனை பறித்து சென்றவர்கள் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மேவலுர் குப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.
    Next Story
    ×