என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி கீழக்கரணை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 37 வயது ஆண், ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கிளாம்பாக்கம் செல்லியம்மன் நகர் பகுதியில் வசிக்கும் 60 வயது மூதாட்டி, காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி விரிவு பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுவன், காரணைப்புதுச்சேரி பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் உள்பட நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 6 பேரும், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டடு உள்ளனர்.

    இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,988 ஆனது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. இவர்களில் 788 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை 15 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை சர்ச் வீதியை சேர்ந்த ஒருவர், திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். 4 நாட்களுக்கு முன் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரது தாய், மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு பரிசோதனை செய்ததில் 4 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனது. 4 பேரும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,386 ஆனது. இவர்களில் 732 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 14 பேர் உயிரிழந்தனர். 640 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை குளக்கரை தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 வயது ஆண், 35 வயது பெண் மற்றும் 22 வயது பெண், 9 வயது சிறுவன் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த குடும்பத்தில் ஏற்கனவே ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் மணிமங்கலம் கருணீகர் தெருவை சேர்ந்த 50 வயது ஆணுக்கு கொரொனா தொற்று உறுதியானது.

    இவர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 534 ஆனது. இவர்களில் 321 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேர் உயிரிழந்தனர். 208 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×