என் மலர்
செய்திகள்

விபத்து பலி
தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பல் டாக்டர் பலி
தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பல் டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலையை சேர்ந்தவர் சரவணன் (வயது 31). பல் டாக்டரான இவர், மேற்கு தாம்பரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கிளனிக்குகள் வைத்து நடத்தி வந்தார்.
நேற்றுமுன்தினம் இவர், அம்பத்தூரில் உள்ள கிளனிக்கிற்கு சென்று விட்டு அதே பகுதியில் உள்ள தனது நண்பரையும் பார்த்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில் தாம்பரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த பல் டாக்டர் சரவணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






