என் மலர்
செங்கல்பட்டு
நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 455 காசுகளாக இருந்து வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக அதிகரித்துள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- சென்னை-490, ஐதராபாத்-443, விஜயவாடா-465, மைசூரு-465, மும்பை-509, பெங்களூரு-465, கறிக்கோழி கிலோ ரூ.83-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.90 ஆக உயர்ந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கனமழைக்கு பிறகு நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு அவர்கள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்து பொழுதை கழித்தனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இந்த புராதன சின்னங்களை காண நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்வதுண்டு.
இந்திய அளவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் 2-வது இடமாக மாமல்லபுரம் திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாமல் அங்குள்ள புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மழையால் கடந்த சில நாட்களாக பயணிகள் வரத்து இல்லாமல் இருந்து. இந்தநிலையில் தற்போது மழை நின்றதாலும் நேற்று வார விடுமுறை தினம் என்பதாலும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பயணிகள் வரத்து நேற்று அதிகம் இருந்தால் அவர்களை நம்பி வாழ்வாதாரம் நடத்தும் சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ, கார் டிரைவர்கள், நடைபாதை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுடன் தற்போது தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்குக்கு பிறகு திறக்கப்பட்ட புராதன சின்னங்களை காண தொடக்கத்தில் பயணிகள் குறைவான அளவிலேயே மாமல்லபுரம் வந்தனர்.
தற்போது பருவ மழைகாலம் முடிந்தபிறகு வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு போன்ற இரு தினங்களில் இன்னும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காலை 7, 8, 9 மணிக்கு வரும் பார்வையாளர்கள் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட தொல்லியல் புராதன சின்னங்கள் திறக்கும் வரை அங்கேயே சில மணி நேரம் வரை காத்திருந்து புராதன சின்னங்களை கண்டுகளிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
அதேபோல் மாலை 3, 4 மணிக்கு வரும் பயணிகள் 5 மணிக்கு புராதன சின்னங்கள் மூடப்படும் நிலையில் அவசர, அவசரமாக கண்டு களித்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. குறுகிய நேரத்தில் அனைத்து புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாத ஏமாற்றத்துடன் பயணிகள் பலர் வீடு திரும்புவதை காண முடிகிறது. எனவே சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க கூடுதல் நேரம் திறந்து பார்வையாளர்களின் குறைகளை போக்க தொல்லியல் துறை முன் வரவேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
பிரபுவுடனான எனது திரை உலக பயணம் இனிமையான பயணம். சந்தோசமும், மகிழ்ச்சியும் நிறைந்தது. தமிழில் அறிமுகமாகி ரஜினி, கமல், கார்த்திக், சத்யராஜ் என்று பல பிரபலங்களுடன் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறேன். பெரும்பாலும் எல்லா படங்களும் பேர் சொல்லும் படங்களாகத் தான் அமைந்தன. ஆனாலும் நானும் பிரபுசாரும் ஜோடியாக நடித்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.
நானும் கொஞ்சம் குண்டாக இருப்பேன். பிரபு சாரும் அப்படித்தான் இருப்பார். இருவரது கன்னங்களும் புசு புசுவென்று இருக்கும். அதனால் ஜோடி பொருத்தம் கச்சிதமாக இருந்தது. ரசிகர்களை கவர்ந்தது. எப்படி சிவாஜி சார்-பத்மினி அம்மா, ஜெமினி சார்- சாவித்திரி அம்மா, கமல்- ஸ்ரீதேவி என்று ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடி அமைந்ததோ அதே வரிசையில் எங்களையும் ரசிகர்களுக்கு பிடித்து போய் இருக்கிறது.
சின்னத்தம்பி மட்டு மல்லாமல், கிழக்குகரை, பாண்டித்துரை, நாளைய செய்தி, மறவன், உத்தமராசா, தர்மசீலன் என்று பல படங்களில் பிரபுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறேன். சின்னதம்பி படப்பிடிப்பில் கோபிசெட்டிபாளையத்தில் வாசுசார், பிரபு, நான் எல்லோரும் ஒரே ஓட்டலில் தான் தங்கி இருந்தோம். வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் மூன்று பேரும் சேர்ந்தே போவோம்.
அந்த படம் மட்டுமல்ல வாசு சார் டைரக்ஷனில் நான் நடித்த எல்லா படங்களிலும் படப்பிடிப்பு நடந்த எல்லா இடங்களிலும் இதே கதை தான். வாசுசார் டைரக்ஷனில் நான் நடித்த படங்கள் வெற்றி பெற்றதற்கு இன்னும் பல காரணங்கள் உண்டு. அவர் டைரக்டராக, நான் நடிகையாக இருந்தாலும் அவர் என்னை நன்றாக வேலை வாங்கினார். நான் அவரை காப்பியடித்ததால் தான் அவ்வளவு அழகாக காட்சிகள் அமைந்தது என்பதுதான் உண்மை. காப்பியடிக்க கூடாது என்பார்கள். ஆனாலும் அவரிடம் நான் காப்பியடித்ததை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.
காட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? அந்த காட்சியில் நடிகர்-நடிகை எப்படி நடிக்க வேண்டும்? என்று வாசுசார் மனதில் ஒரு வடிவம் கொடுத்து வைத்திருப்பார். அதைத்தான் நடிக்கும் போது எதிர்பார்ப்பார். ஆனால் நான் எதையும் முன் கூட்டியே பிளான் பண்ண மாட்டேன். டைரக்டரின் எண்ணத்தை புரிந்து கொள்வேன். அவர் காட்சிகளை அவ்வளவு தத்ரூபமாக நடித்து காட்டி விளக்குவார். அதை காப்பியடிக்க பயிற்சி தேவையில்லையே? அப்படியே காப்பியடித்து விடுவேன்.
தொடர்ந்து இரவு, பகலாக படப்பிடிப்புகள் நடக்கும். கொஞ்சம் கூட சோர்வு தெரியாமல் நடிக்க வேண்டும். உடல் எப்படி கேட்கும்? களைப்பு, மன அழுத்தம், உடல் சோர்வு எல்லாமுமாக சேர்ந்து கொண்டது. எனக்கு வலிப்பு வரும். அது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அன்று அப்படித்தான் படப்பிடிப்பு தளத்தில் வலிப்பு வந்தது. மயங்கி சாய்ந்துவிட்டேன். படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்து போனார்கள்.
ஓடி வந்து பார்த்த வாசு சார் நான் கிடந்த கோலத்தை பார்த்து துடித்து போனார். தனது குழந்தையை போல் தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். நான் கண்விழிக்கும் வரையில் அவர் கண்ணில் அப்படி ஒரு சோகம். தனது மகளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் எந்த நிலையில் இருந்திருப்பாரோ அதேபோல் அழுது இருக்கிறார்.
அழுது அழுது அவரது கண்கள் வீங்கி போனது. ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று தூங்க வைத்துவிட்டுத் தான் அவர் அறைக்கு சென்றார். வலிப்புக்காக சாப்பிடும் மாத்திரை வீரியம் மிக்கது. கடுமையான தூக்கம் வரும். கண்விழித்த பிறகும் உடல் சோர்வால் எழுந்து நடமாடகூட முடியாது.
மறுநாள் ஷூட்டிங் இருந்தது. என் அறைக்கு வந்தவர் என்னை தொந்தரவு செய்து விடக்கூடாது என்பதற்காக ஆண்டியை அழைத்து ‘எப்படி இருக்கிறாள்? நன்றாக தூங்கினாளா? மெதுவாக எழுந்து வரட்டும’ என்று சொல்லி இருக்கிறார். அதற்குள் நான் ஷூட்டிங் செல்வதற்கு தயாராகி விட்டேன். அதை பார்த்ததும், ‘ரொம்ப ரிஸ்க் எடுக்காதே’ என்று ஆலோசனை கூறி சென்றார்.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். எண் கண்களில் தூக்கம் சொக்கியது. அதை பார்த்ததும மதியம் வரை சும்மா இருக்க வைத்து விட்டு அதன்பிறகு ஷாட் எடுத்தார்கள். ஆனாலும் ஒவ்வொரு ஷாட்டிலும் ‘எப்படிம்மா இருக்கே? கஷ்டமா இருக்கா? என்று கேட்டுக் கொண்டே இருப்பார். அந்த பரிவு, என் மீது வைத்திருந்த பாசம் தான் அவருடன் டைரக்டர் என்ற எல்லையையும் தாண்டி தந்தையிடம் குழந்தை சண்டை போடுவது, அடம் பிடிப்பது போல் என்னை அடம் பிடிக்கவும் வைத்தது.
சின்னதம்பி படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினோம். படம் வெளியானது. பல ஊர்களில் நூறு, இரு நூறு நாட்கள் ஓடி மிகப் பெரிய சாதனை படைத்தது. அந்த நாட்களில் பிரபுவுடன் ஏற் பட்ட நெருக்கம் காரண மாக நாங்கள் எல் லோரும் அன்னை இல்லத்துக்கு அடிக்கடி செல்வோம். அவர் எல்லோருக்கும் விருந்து கொடுப்பார். எப்போது சென்றாலும் அன்னை இல்லத்து வரவேற்பு மிகப்பிரமாதமாக இருக்கும். குடும்பத்தினர் ஒவ்வொரு வரும் அப்படி கவனிப்பார்கள்.
அவர் வீட்டு விருந்து என்றால் சொல்ல வேண்டியதில்லை. அன்னை இல்லத்து விருந்து சாப்பிட்ட ஒவ் வொருவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். இன்று நான் 21 வயது, 19 வயது மகள் களுக்கு தாயாகி விட்டேன். பிரபுசாரும் பேரன், பேத்தி பார்த்து விட்டார்.
எல்லோரது வாழ்க்கை யிலும் ஏதா வது அழகிய தருணம் இருக்கும். அதேபோல்தான் எனது வாழ்க்கையிலும் பிரபு சாருடன் பழகிய தரு ணங்கள் அழகிய தருணங்கள் என்பேன்.
நாங்கள் இருவரும் குடும்பம், குழந்தைகள் என்றாகிவிட்ட பிறகும் என் கணவர் படத்தில் அவர் நடித்து இருக்கிறார். குடும்ப உறவினர்கள் போல் எங்கள் நட்பு இரு குடும்பங்களுக்கு இடையேயும் இப்போதும் தொடர்கிறது. ஒரு நாள் சென் னையில் நடந்த படப்பிடிப்பு தளத்தில் அப்படி ஒரு சண்டை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. டைரக்டருடன் நான் சண்டை போட்டதால் கோபத்தில் அவர் எழுந்து வீட்டுக்கே சென்றுவிட்டார். படப்பிடிப்பு நடக்குமா? என்று கதாநாயகனே கலங்கிப்போனார். அதன்பிறகு என்னதான் நடந்தது?

கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளில் மழை நின்று 2 நாட்கள் ஆகியும் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விட்டுவிட்டு பெய்த கனமழையின் காரணமாக நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் மகாலட்சுமி நகர், அமுதம் காலனி, உதயசூரியன் நகர், ஜெயலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழை வெள்ளம் தேங்கியது. கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் உள்ள நிலையில் ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக தேங்கி நிற்கும் மழை நீர் இன்னும் வடியாமல் அப்படியே 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கனமழை பெய்யும் போது எங்கள் பகுதியில் தொடர்ந்து வீடுகளில் மழை நீர் புகுவதும், வீடுகளை சுற்றி மற்றும் சாலைகளில் மழைநீர் 2 அடி உயரத்துக்கு மேல் தேங்கி நிற்பதும் வாடிக்கையாகிவிட்டது. மழை பெய்யும் போது மட்டும் அதிகாரிகள் வந்து உங்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று கூறி விட்டு செல்வார்கள். பின்னர் அடுத்த ஆண்டு மீண்டும் வந்து இதே விஷயத்தை கூறுவார்கள். ஆனால் இதுவரைக்கும் இந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் எடுக்காமல் மெத்தனப்போக்கை மட்டுமே காட்டி வருகின்றனர்.
இதேபோல ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.நகர், ஜெகதீஷ் நகர், செல்வராஜ் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை விட்ட நிலையிலும் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டு மழை பெய்யும் போதும் இதே நிலைமை நீடிக்கிறது என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஊரப்பாக்கம் பகுதியில் மழைநீர் வீடுகளை சுற்றி தேங்காமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் உள்ள நகர் பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கி நிற்பதை காணமுடிகிறது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த வரதராஜபுரம் பகுதி முழுவதும் மழை வெள்ளம் அதிக அளவில் தேங்கியது. இதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமலும் வீட்டிலேயே முடங்கினர். மழை நின்று 2 நாட்கள் ஆன பின்னரும் வெள்ளம் வடிந்தபாடில்லை என பொதுமக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். பரத்வாஜ் நகர், ராயப்பா நகர், பி.டி.சி. குடியிருப்பு, அஷ்டலஷ்மி நகர் கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் முழுமையாக வெள்ளம் வடியாமல் உள்ளது. மழை வெள்ளம் தேங்காமல் இருக்க தீர்வு காணவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மதுமிதா
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக மதுமிதா வெளியேற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வெகுளித்தனமான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து வந்த மதுமிதா, திடீரென வெளியேற்றப்பட்டுள்ளது பிக்பாஸ் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மாயமான பெயிண்டரை கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த வளையக்கரணை பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் கடந்த 2-ந்தேதி இரவு 7 மணியளவில் துணி எடுப்பதற்காக சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள கடைக்கு சென்றார்.
இந்த நிலையில் பார்த்தசாரதியின் செல்போனில் இருந்து அவரது மனைவி தனலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு ஒரு வீடியோ காட்சி வந்தது. அதில் பார்த்தசாரதி மது போதையில் அமர்ந்து இருப்பதை போன்று வந்தது. அதன் பின்னர் பார்த்தசாரதி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை காணவில்லை.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி தனலட்சுமியின் செல்போனுக்கு அவரது கணவர் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்களுடைய கணவர் சாலை விபத்து ஏற்பட்டு இங்கே கிடக்கிறார். உடனடியாக வந்து அவரை மீட்டு செல்லுங்கள் என்று கூறி விட்டு துண்டித்து விட்டார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தனலட்சுமி அங்கே சிதறிகிடந்த பார்த்தசாரதியின் செல்போன் மற்றும் துணிகளை எடுத்துள்ளார். மேலும் தனது கணவரை தேடி பார்த்தபோது அவரை காணவில்லை.
இதனால் பயந்து போன தனலட்சுமி பாலூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். ஒரு வாரமாகியும் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து நேற்று பொதுமக்கள் சிங்கப்பெருமாள் கோவில்-ஒரகடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆலங்குளம் அருகே ஆடுகளை திருடியது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களின் கூட்டாளிகள் சிலரை தேடி வருகின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பகுதியில் அடிக்கடி ஆடுகள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. சமீபத்தில் ஆலங்குளத்தை சேர்ந்த ராஜசேகரன், மாறாந்தையை சேர்ந்த சங்கர், காத்தபுரத்தைச் சேர்ந்த அருண் ஆகியோர் தங்கள் ஆடுகளை காணவில்லை என்று ஆலங்குளம் போலீசில் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் ஆடுகளை கடத்திச் சென்று வெளியூரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி புதூரை சேர்ந்த மகராஜன் (31), சுப்பு ராஜா (26), கருவநல்லூரை சேர்ந்த வேல்முருகன் (19), கண்டியபேரி சுரேஷ் (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களது கூட்டாளிகள் சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 76 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 76 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 358-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 979 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,513 பேர் உயிரிழந்துள்ளனர். 866 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 168-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 592 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,258 பேர் உயிரிழந்துள்ளனர். 318 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியன், முதல்வன் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை மனிஷா கொய்ராலா, இந்த பயணம் கடினமானது என்று சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
தமிழில் இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா, சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நோயிலிருந்து குணமடைந்தார்.

இந்நிலையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தான் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட சில படங்களை நடிகை மனிஷா கொய்ராலா பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேலும் அவர் தனது சமூக வலைத் தள பக்கத்தில், 'இந்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில், புற்றுநோயின் கடினமான பயணத்தை கடந்து செல்லும் அனைவருக்கும் நான் வாழ்த்துகூற விரும்புகிறேன். இந்த பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர். அதற்கு துணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் பரப்ப வேண்டும் மற்றும் நம்பிக்கை நிறைந்த அனைத்து கதைகளையும் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். நாம் நமக்கும் உலகிற்கும் கருணை காட்டுவோம். அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
வண்டலூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 34) நேற்று முன்தினம் தீபாவளியன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’அண்ணாத்த’ திரைப்படம் இரண்டு நாளில் எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்தது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
'தர்பார்' படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படம் கடந்த 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

அண்ணன் தங்கை பாசத்தை கொண்ட ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில், அண்ணாத்த படம் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க வெளியான முதல் நாளில் 70 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 42 கோடி ரூபாயும், மொத்தம் இதுவரை 112 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் வெளியிட மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் பெற்றுக்கொண்டார். இதில் அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.