என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    மாமல்லபுரம் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பவழக்காரன் சத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் லட்சுமணபதி வயது.23, தனது நண்பர் செல்வகுமாருடன் நேற்று பூஞ்சேரி டோல்கேட் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்பகுதில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பைக்கை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து பைக் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது., இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமணபதி உயிரிழந்தார்.

    உடன் சென்ற செல்வகுமார் காயத்துடன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார். மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பனைமர தொழிலை பாதுகாக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இடைக்கழிநாடு பேரூராட்சியில் மரமேறி வடிவேல் சென்று வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் இடைக்கழிநாடு பேரூராட்சி அமைந்துள்ளது. 

    பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதுமே பனை, தென்னை, முந்திரி உள்ளிட்ட மரப் பயிர்கள் அதிக அளவில் காணப்படுகிறது இப்பகுதியில் பனைத் தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர் குறிப்பாக இப்பகுதியில் செயல்பட்டுவந்த கூட்டுறவு பதநீர் சாலை தற்போது செயல்படாமல் முடங்கியுள்ளது இப்பகுதியில் உள்ள மரப்பயிர்களையும் பனைத் தொழிலை பாதுகாக்க வேண்டும் .நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளரும் பனைத்தொழில் செய்துவரும் டி.கே.முத்து போட்டியிடுகிறார். 

    இச்சூழ்நிலையில் பனை தொழிலை பாதுகாக்க வலியுறுத்தும் விதமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.கே.முத்து மரமேறும் தொழிலாளியாகவே சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வாசுதேவன் க.புருஷோத்தமன் வட்டச்செயலாளர் எஸ்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    வண்டலூர் அருகே ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்தது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் ராஜி. ஆட்டோ டிரைவர். இவர் வண்டலூர் மேம்பாலம் ரிங் ரோட்டில் ஆட்டோ ஓட்டிச்சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வாலாஜாபாதிற்கு செல்ல வழி கேட்டார்.

    திடீரென அந்த வாலிபர் ஆட்டோ டிரைவர் ராஜியின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    17 நாட்களுக்குப் பின்பு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது.
    தாம்பரம்:

    வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 75 பேருக்கு கொரோனா தொற்று கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.

    இதனைதொடர்ந்து விலங்குகளின் பாதுகாப்பை கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 17-ந்தேதி முதல் 31ந் தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டது.

    மேலும் பூங்காவில் உள்ள 17 வயது ஆன சிறுத்தை ஒன்று உடல்நலக்குறைவால் இறந்தது. இதைத்தொடர்ந்து பூங்காவில் உள்ள சிங்கம், புலி, சிறுத்தை உள்பட 21 பூனை இனங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் 11 சிங்கங்கள், 6 புலிகள், 4 சிறுத்தைகள் ஆகிய விலங்குகளுக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.

    இதைத் தொடர்ந்து வண்டலூர் பூங்கா இன்று (3-ந்தேதி) முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை வண்டலூர் பூங்கா திறக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உடல்வெப்ப பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் பின்னரே சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    பார்வையாளர்கள் திறந்த வெளியில் உள்ள விலங்குகளை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். காணவே அனுமதிக்கப்பட்டனர். உள் அரங்கில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளைக் காண அனுமதி மறுக்கப்பட்டது. 17 நாட்களுக்குப் பின்பு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது.

    மாமல்லபுரம் அருகே கடன் தொல்லையால் மனவேதனை அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த மணமை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). கல்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். 3 மாதமாக தவணை தொகை கட்டாததால் பைனான்ஸ் நிறுவனத்தினர் சதீஷ் குமாருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் சதீஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் 70 வார்டுகளில் 67 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 இடங்கள் கூட்டணிக் கட்சியான புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இவற்றில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 12 வார்டுகள் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 58 இடங்களில் தி.மு.க. நேரடியாக போட்டியிடுகிறது.

    தி.மு.க. சார்பில் 56-வது வார்டுக்கு பெருங்களத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர் போட்டியிடுகிறார். அதேபோல் 57-வது வார்டில் அவருடைய மனைவி கமலா சேகர் போட்டியிடுகிறார்.

    கமலா ஏற்கனவே கடந்த முறை கவுன்சிலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 56-வது வார்டில் போட்டியிடும் சேகர் ஏற்கனவே 1996 முதல் 2016-ம் ஆண்டு வரை பெருங்களத்தூர் பேரூராட்சி தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் 70 வார்டுகளில் 67 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 இடங்கள் கூட்டணிக் கட்சியான புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. பட்டியலில் பல்லாவரம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் தன்சிங்கின் மனைவி தனம் தன்சிங் 13-வது வார்டில் போட்டியிடுகிறார். அதே போல் இவரது மகன் ஜெயபிரகாஷ் 22-வது வார்டில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே பல்லாவரம் நகராட்சி துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
    செங்கல்பட்டு:

    தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.02.2022 அன்று  நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. 

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்  மதுராந்தகத்தை அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள 14-வது வார்டு உறுப்பினர் பதவியை அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு ரூ.24 லட்சத்துக்கு ஏலம் விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்காடு அம்மன் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 500-க்கும் மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிறகு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அந்த மனுவில், இடைக்கழிநாடு பேரூராட்சியில் நடைபெறவுள்ள தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும், வார்டு மறுவரையறை செய்த பின்னரே தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதை மீறி தேர்தல் நடைபெற்றால் தேர்தல் புறக்கணிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

    தலைமையகத்துக்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்து பொது மக்களை அலைக்கழிக்கக் கூடாது. ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு கமி‌ஷனர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை:

    தாம்பரம் போலீஸ் கமி‌ஷனராக இருக்கும் ரவி, சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதிலும், பொது மக்களின் குறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

    இந்தநிலையில் தனது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளிக்க வந்தால் உடனடியாக புகார்களை பெற்று உரிய ரசீது வழங்க வேண்டும். அதுபோன்று செயல்படாமல் பொது மக்களை அலைக்கழித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    காவல் நிலையத்தில் உள்ள அனைவரையும் கூண்டோடு மாற்றிவிடுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கமி‌ஷனர் ரவி அதில் கூறி இருப்பதாவது:-

    பள்ளிக்கரணையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறீர்கள். இதுபோன்று செயல்பட்டால் அனைவரையும் கூண்டோடு மாற்றிவிடுவேன். பொது மக்களின் நண்பர்களாகவே காவலர்கள் இருக்க வேண்டும். ஏன் அது போன்று செயல்படாமல் இருக்கிறீர்கள்? சைபர் கிரைம் தொடர்பாக புகார் வந்தாலும் அதற்கும் சி.எஸ்.ஆர். ரசீது வழங்க வேண்டும். தலைமையகத்துக்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்து பொது மக்களை அலைக்கழிக்கக் கூடாது. ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு கமி‌ஷனர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    திருக்கழுக்குன்றத்தில் காரில் கடத்திய ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 10 மூட்டை குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் போலீசார் திருக்கழுக்குன்றம்- கொத்திமங்கலம் பைபாஸ் சாலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 10 மூட்டை குட்கா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து காரில் இருந்த ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    தாம்பரம் மாநகராட்சி- சென்னை தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை. நந்திவரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பேரூராட்சிகள்- ஜே.ஆர்.கே. பள்ளி, காட்டாங் கொளத்தூர்.


    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகள், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, நந்திவரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், மதுராந்தகம் நகராட்சிகளுக்கும், மாமல்லபுரம், திருப்போரூர், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், இடைக் கழிநாடு பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவாகும் வாக்குகள் 13 மையங்களில் எண்ணப்படுகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:-

    தாம்பரம் மாநகராட்சி- சென்னை தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை. நந்திவரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பேரூராட்சிகள்- ஜே.ஆர்.கே. பள்ளி, காட்டாங் கொளத்தூர்.

    செங்கல்பட்டு நகராட்சி- செயின்ட்ஜோசப் பள்ளி, செங்கல்பட்டு.

    மதுராந்தகம் நகராட்சி- சவ்பக்மல் சவுகார் மகளிர் பள்ளி, மதுராந்தகம்.

    அச்சிறுப்பாக்கம், கருங்குழி பேரூராட்சி- செயின்ட் ஜோசப் பள்ளி, அச்சிறுப்பாக்கம்.

    இடைக்காழிநாடு பேரூராட்சி-அரசு மேல்நிலைப் பள்ளி, கடப்பாக்கம்.

    மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகள்-அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்கழுக்குன்றம்.

    காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் வாஜாலாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகள்- அண்ணா பல்கலைக் கழகம், பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம். குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகள்-மாதா என்ஜினீயரிங் கல்லூரி, குன்றத்தூர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 13,547 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,430 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 694 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 524 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,623 ஆக உயர்ந்துள்ளது. 13,547 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆயிரத்து 667 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 86 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சைப் பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,287 ஆக உயர்ந்துள்ளது. 4,182 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    செங்கல்பட்டு அருகே கார் விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    செங்கல்பட்டு:

    சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் நாரோதம் ரெட்டி. இவரது மனைவி பாரதி ரெட்டி. இவர்களது மகன் ஸ்ரீமவர்ஷன் (வயது 28). டாக்டர். இந்த நிலையில் ஸ்ரீமவர்ஷனும் அவரது தாய் பாரதி ரெட்டியும் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பழவேலி அருகே வந்து கொண்டிருந்த போது மற்றொரு காரை முந்த முயன்றுள்ளனர். திடீரென எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீமவர்ஷன் மற்றும் அவரது தாய் பாரதி ரெட்டியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×