என் மலர்
உள்ளூர் செய்திகள்

பனைமரம் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல்
பனைமரம் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல்
பனைமர தொழிலை பாதுகாக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இடைக்கழிநாடு பேரூராட்சியில் மரமேறி வடிவேல் சென்று வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் இடைக்கழிநாடு பேரூராட்சி அமைந்துள்ளது.
பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதுமே பனை, தென்னை, முந்திரி உள்ளிட்ட மரப் பயிர்கள் அதிக அளவில் காணப்படுகிறது இப்பகுதியில் பனைத் தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர் குறிப்பாக இப்பகுதியில் செயல்பட்டுவந்த கூட்டுறவு பதநீர் சாலை தற்போது செயல்படாமல் முடங்கியுள்ளது இப்பகுதியில் உள்ள மரப்பயிர்களையும் பனைத் தொழிலை பாதுகாக்க வேண்டும் .நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளரும் பனைத்தொழில் செய்துவரும் டி.கே.முத்து போட்டியிடுகிறார்.
இச்சூழ்நிலையில் பனை தொழிலை பாதுகாக்க வலியுறுத்தும் விதமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.கே.முத்து மரமேறும் தொழிலாளியாகவே சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வாசுதேவன் க.புருஷோத்தமன் வட்டச்செயலாளர் எஸ்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story






