என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே தனது தம்பியின் திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது மொபட் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி. இவருடைய மனைவி சாந்தி(வயது 31). இவர், தனது தம்பியின் திருமணத்திற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கவும், நகைகள் வாங்குவதற்காகவும் சிறுகளத்தூரில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு மொபட்டில் சென்றார். அவருடன் பவுனம்மாள் என்பவர் சென்றார்.
இலையூர் புறவழிச்சாலை அருகே சென்றபோது எதிரே ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் அடிபட்டு சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பவுனம்மாள் காயமடைந்தார்.
இதையடுத்து பவுனம்மாள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் நாகல்குழி கிராமத்தை சேர்ந்த இளையராஜாவை(30) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கொள்ளிடம் பாலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியினை மாவட்ட கலெக்டர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கொள்ளிடம் பாலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியினை மாவட்ட கலெக்டர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அவர் தெரிவித்ததாவது:-
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது கோட்டாட்சியர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் முககவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக முகாம்களில் தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு அனைத்து அத்தியாவசிய தேவைகளும் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அவர்களையும் மருத்துவ குழுவின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட எல்லையில் 10 சோதனை சாவடிகளும், மாவட்டத்திற்குள்ளான பகுதிகளில் 12 சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வழியாக செல்லும் வாகனங்களை காவல்துறையினர், மருத்துவக்குழுவினர் மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் வாகனங்களை சோதனை செய்து அதில் வருபவர்களுக்கு ஏதேனும் நோய் தொற்று குறித்த அறிகுறிகள் உள்ளதா? என மருத்துவக்குழு பரிசோதனை செய்த பின்னரே அவர்கள் மாவட்டத்திற்குள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து அரியலூர் மாவட்ட எல்லை வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களில் செல்பவர்கள் முறையான இ-பாஸ் பெற்று வருகிறார்களா? என்று உறுதி செய்த பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், அரியலூர் மாவட்டத்திற்கு வருபவர்களில் யாருக்காவது நோய் தொற்று குறித்து அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு வெளியூர்களிலிருந்து யாராவது உரிய அனுமதி பெறாமல் வந்திருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது கோட்டாட்சியர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு குறித்தும் நேற்று கயர்லாபாத் போலீசார் சார்பில் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்தலின்படி, விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாகவும், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்தும் நேற்று கயர்லாபாத் போலீசார் சார்பில் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமை தாங்கி, காட்டுப்பிரிங்கியம் அருகிலுள்ள பெரிய நாகலூர் சுண்ணாம்புக்கல் சுரங்க பகுதியில் உள்ள கனரக வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் டிரைவர்கள் தங்களது ஓட்டுனர் உரிமங்களை சரிவர பராமரிக்க வேண்டும். உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனைகள் பெற்று சிகிச்சை பெற வேண்டும். கண் பரிசோதனை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும். கனரக வாகன டிரைவர்கள் பணி முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பணியிடங்களிலும், வாகனங்களிலும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பணியிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் டிரைவர்கள் அனைவரும் இன்ஸ்பெக்டர் முன்பு சாலை விதிகளை மதிப்போம். அதிவேகமாக செல்லமாட்டோம். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கமாட்டோம். அதி வேகமாக சென்று முந்திச்செல்ல மாட்டோம். வாகனங்களை முறையாக பராமரிப்போம். பணியின் போது சோர்வு களைப்பு ஏற்படும் பட்சத்தில் முறையான ஓய்வுக்குப்பிறகு வாகனங்களை இயக்குவோம். அனைவரும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவோம் என டிரைவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
வாழைக்குறிச்சி உள்ளிட்ட 11 ஊராட்சி ஒன்றியங்களின் ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உதயநத்தம் திருபுரந்தான், சாத்தம்பாடி, கடம்பூர், தென்கச்சிப்பெருமாள்நத்தம், வாழைக்குறிச்சி உள்ளிட்ட 11 ஊராட்சி ஒன்றியங்களின் ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், தங்களது ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் சாலைபாலம், தடுப்பணைகள் உள்ளிட்ட மத்திய அரசின் கீழ் செய்யப்படும் பணிகளை அதிகாரிகள் துணையுடன் ஆளும் கட்சியினர் மேற்கொள்கின்றனர். இந்த பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தகவல் அளிப்பதில்லை. இதுபோன்று குடிமராமத்து பணிகளில் ஏரி, குளம், வரத்து வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் குழு அமைத்து ஊராட்சி மன்ற ஒப்புதலை பெற்று பணிகளை செய்ய வேண்டும் என்ற சட்ட விதிகளையும் புறக்கணித்து ஆளும் கட்சியினர் ஊராட்சி மன்ற ஒப்புதலை பெறாமலேயே பணிகளை செய்து வருகின்றனர். பஞ்சாயத்துராஜ் சட்ட விதிகளை மீறி ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக அதிகாரிகளும் செயல்படுகின்றனர்.
இதில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தெரிவித்து, கிராம சபை அங்கீகாரம் பெற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்திரவிடவேண்டும் என்று கூறியுள்ளனர்.
11 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆளும் கட்சியினர் மீது புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருபுரந்தான் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவிக்காமல் பணிகளை மேற்கொள்ளுவது தொடர்ந்தால், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் இணைந்து அரியலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள அண்ணாசிலை அருகில் பஞ்சாயத்துராஜ் சட்டத்தை காக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

ஜெயங்கொண்டம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
ஜெயங்கொண்டம்:
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், நடுவலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகம் பெரும் பகுதிகளான, ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, வாரியங்காவல், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, பரணம், தா.பழூர், சிலால், வானதிரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிப்பெருமாள்நத்தம், நாயகனைப்பிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, முட்டுவாஞ்சேரி, கோட்டியால் சுத்தமல்லி வெண்மான்கொண்டன், தத்தனூர், த.மேலூர், இடையாறு, நாச்சியார்பேட்டை பகுதிகள் மற்றும் துணை மின் நிலையங்களின் அருகில் உள்ள கிராம பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கடத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவரது மகள் அஞ்சு(வயது 20). இவருக்கும், கடலூர் மாவட்டம், பெண்ணாடம் புங்கனூர் ஏரி கரை தெருவை சேர்ந்த அருள் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அருள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் அஞ்சு தனது தாய் வீடான கொடுக்கூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அஞ்சுவும், அவரது அக்கா சூர்யாவும் சேர்ந்து பொருட்கள் வாங்க ஜெயங்கொண்டம் வந்துள்ளனர். பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்ப ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அஞ்சு கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. இதனால் உறவினர்கள், தோழிகள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மஞ்சுவின் தாய் தாமரைச்செல்வி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அஞ்சு கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் திடீர் குப்பத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் கீர்த்தனா(19). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த அவர் நேற்று முன்தினம் முந்திரி தோப்பிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள், தோழிகள் வீடு என எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், அவரது தாய் ராஜேஸ்வரி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து கீர்த்தனா கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூரில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு போலீசார் வழங்கினர்.
ஜெயங்கொண்டம்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டின் அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் அதிவேகமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் அனைத்து கடைகள் திறக்கவும், பஸ்கள், இயக்கவும் சில தளர்வுகளை வழங்கியது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆணைக்கிணங்க ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போக்குவரத்து போலீசார் ஜெயங்கொண்டம், மகிமைபுரம், கடைவீதி, பஸ் நிலையம், 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே முக கவசம் அணியவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது, சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து போலீசார் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு உள்ளிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மீன்சுருட்டி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வளையாபதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி மெயின் ரோடு தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 36) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபானம் விற்றுக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்து, அவரிடமிருந்து 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன்(61) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபானம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 3 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தனிமைப்படுத்தும் முகாமுக்கு செல்ல இவ்வளவு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.
அரியலூர்:
பணி நிமித்தமாக கத்தார் நாட்டிற்கு சென்றவர்கள் கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்கு வரமுடியாமல் தவித்து வந்த நிலையில் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் கடந்த 10-ந் தேதி சென்னை வந்தனர். அங்கு அவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என முடிவு செய்யப்பட்டது.
இதனால் அவர்கள் பஸ் மூலம் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரியலூர் மாவட்டம், செந்துறையை சேர்ந்த வீரபாண்டியன்(வயது 38), கீழபழுவூரை சேர்ந்த கமலக்கண்ணன்(36), தாமரைப்பூண்டியை சேர்ந்த சக்திவேல்(30) ஆகிய 3 பேரும் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு இறக்கி விடப்பட்டனர். மேலும் இவர்களை தனிமை படுத்தும் முகாமுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, போதுமான ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தினால் இது போன்று தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர். வெளிநாட்டில் இருந்தும் கூட வந்து விட்டோம் ஆனால் தனிமைப்படுத்தும் முகாமுக்கு செல்ல இவ்வளவு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கவில்லை என பயணிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் பிற்பகல் 12.15 மணி அளவில் வந்ததையடுத்து அவர்கள் தனிமை படுத்தும் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முக கவசம் அணியாமல் வந்த பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 46 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டின் அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் அதிவேகமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் அனைத்து கடைகள் திறக்கவும், பஸ்கள் இயக்கவும் சில தளர்வுகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து செல்லவும், திருமணம், துக்க நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்து கொள்வதை தவிர்க்கவும் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆணை பிறப்பித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் கடை வீதிகளில் முக கவசம் அணியாமல் சாலையில் செல்பவருக்கு நகராட்சி நிர்வாகம் ரூ.100 அபராதம் கடந்த மாதம் அறிவித்தது அதன்படி அபராதமும் வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி 4 ரோடு பகுதி கடைவீதிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா?, முக கவசம் அணிந்து பொதுமக்கள் வருகின்றனரா? என திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது முக கவசம் அணியாமல் வந்த பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 46 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது.
திருமானூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் பெரியசாமி(வயது 28). தப்பாட்ட கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் அன்னிமங்கலத்தில் இருந்து திருமானூர் நோக்கி சென்றார். அப்போது திருமானூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதே அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கிருபாகரன்(27) மற்றும் தங்கவேல்(50) ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கிருபாகரன் மற்றும் தங்கவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தந்தை, மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 45). இவரும், இவரது மகன் காளிதாஸ் என்கின்ற கார்த்திக் (22) என்பவரும் அப்பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய 32 வயதுடைய ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். மேலும் அவர் உடல் நலம் குறைவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு தமிழரசி வழக்குப்பதிந்து குமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.