என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    ஜெயங்கொண்டம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    ஜெயங்கொண்டம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், நடுவலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகம் பெரும் பகுதிகளான, ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, வாரியங்காவல், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, பரணம், தா.பழூர், சிலால், வானதிரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிப்பெருமாள்நத்தம், நாயகனைப்பிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, முட்டுவாஞ்சேரி, கோட்டியால் சுத்தமல்லி வெண்மான்கொண்டன், தத்தனூர், த.மேலூர், இடையாறு, நாச்சியார்பேட்டை பகுதிகள் மற்றும் துணை மின் நிலையங்களின் அருகில் உள்ள கிராம பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×