என் மலர்
செய்திகள்

துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய போலீசார்
அரியலூரில் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
அரியலூரில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு போலீசார் வழங்கினர்.
ஜெயங்கொண்டம்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டின் அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் அதிவேகமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் அனைத்து கடைகள் திறக்கவும், பஸ்கள், இயக்கவும் சில தளர்வுகளை வழங்கியது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆணைக்கிணங்க ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போக்குவரத்து போலீசார் ஜெயங்கொண்டம், மகிமைபுரம், கடைவீதி, பஸ் நிலையம், 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே முக கவசம் அணியவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது, சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து போலீசார் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு உள்ளிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story