என் மலர்tooltip icon

    அரியலூர்

    விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற விபத்துகளில் காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி செய்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும் மற்றும் போலீசாருக்கும் தகவல் அளித்த 9 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கும் விழா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, லட்சுமணன், விஸ்வநாதன், கவுசிக், அரவிந்த், குமார், பிரசாத், வினோத் குமார், அன்பு ஜாலியன், மாயகிருஷ்ணன் ஆகிய 9 பேருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கி பேசுகையில், பொதுமக்கள் திடீரென்று ஒரு அசம்பாவித சம்பவங்களை கண்ணெதிரே காண நேர்ந்தாலும், கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்முறை, விபத்து எதுவாக இருந்தாலும் உடனடியாக அவசர எண் 100-ஐ தொடர்பு கொள்ளவும் என்றார்.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்மாறன் (அரியலூர்), முகமது இத்ரீஸ் (ஆண்டிமடம்), ராஜா (கயர்லாபாத்) மதிவாணன் (அரியலூர் சரக போக்குவரத்து பிரிவு), சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், நந்தகுமார் (அரியலூர்), நெப்போலியன் (கயர்லாபாத்), இரும்புலிக்குறிச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் வழங்கினார். 
    ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் அரியலூர் கலெக்டர் அலுவலகங்கள் மூடப்பட்டு ஊழியர்கள், பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் வந்துவிடக்கூடாது என மாவட்ட கலெக்டர் ரத்னா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் களப்பணியாளரான 32 வயதுடைய ஒருவருக்கும், அவரது மனைவியான மாவட்ட பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 30 வயதுடைய சார்பதிவாளருக்கும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் 2 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற களப்பணியாளர் தனது துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று முதல் 3 நாட்களுக்கு அரியலூர் கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர். மேலும் கலெக்டர் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதையும் நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் முத்து முகமது தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தனர். இதேபோல் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

    அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 240 படுக்கைகளுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் இணைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தகவல் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுகாதாரத்துறையின் சார்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறுகையில், அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படவுள்ள 310 படுக்கைகளுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் 240 படுக்கைகளுக்கும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் இணைப்பு குழாய் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    செந்துறை அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுக்கும், உடையார்பாளையம் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகளுக்கும் குழாய் மூலம் ஆக்சிஜன் இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. அவசர உதவிக்காக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடத்தில் 100 ஆக்சிஜன் உருளைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அரியலூர் அரசு மருத்துவமனையில் 45 ஆக்ஸிஜன் உருளைகளை கொண்டு படுக்கைகளுக்கு அருகில் வைத்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது.

    அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பதற்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையிலிருந்து நுண்ணுயிரியல் துறை உதவி பேராசிரியர் ஒருவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையத்திற்கு மாற்று பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும், கூடுதல் ஆய்வக நிபுணர்களும் நியமிக்கப்படவுள்ளனர் என்றார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயினுலாபதீன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் முத்துகிருஷ்ணன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, டாக்டர் ரமேஷ், கோட்டாட்சியர் பாலாஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட தகவலியல் அலுவலர் ஜான்பிரிட்டோ மற்றும் டாக்டர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக நாளை முதல் 7 நாட்களுக்கு கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    அரியலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.  

    குறிப்பாக, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வந்த நிலையில்,  அம்மாவட்டத்தில் 497 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றிலிருந்து 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 38 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் முதல்நிலை களப்பணியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூன்று நாட்கள் மூடி கிருமிநாசினி தெளிக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், அரியலூர் நகரிலிருந்து கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுவதால், தற்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் நாளை முதல் அடுத்த 7 நாட்களுக்கு அறியலூர் நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காய்கறி, பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    மீன்சுருட்டி அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி சந்தை ரோடு மற்றும் முக்குளம் வழியாக செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள முத்துசேர்வாமடம் கிராம சாலை கரடுமுரடாக உள்ளது. தற்போது கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக மாறி பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வயதான முதியோர் மற்றும் இந்த வழியாக செல்லும் புதியவர்கள் மழைநீர் பள்ளங்களில் உள்ள சகதியில் விழுந்து காயங்களுடன் உயிர் பிழைத்து செல்கின்றனர். முத்துசேர்வாமடம் கிராமம் வரை சுமார் 10-க்கு மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

    எனவே உடனடியாக அங்கு புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டிய ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்தை சேர்ந்த அருங்கால் கிராமத்தை சேர்ந்தவர் தனபால்(வயது 50). அதே கிராமத்தை சேர்ந்த இவரின் உறவினர் கிருஷ்ணமூர்த்தி(46) சென்னையில் ஓட்டல் நடத்தி வந்ததால் அவரின் கடையில் தனபால் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் கிருஷ்ணமூர்த்தியின் கடையில் வேலையை விட்டுவிட்டு வேறொரு கடையில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா ஊரடங்கு அறிவித்தபின் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தனபால் இருவருமே சொந்த ஊரான அருங்காலுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அன்றிரவே தனபால் வீட்டிற்குள் புகுந்து அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது அரிவாளால் வெட்ட முற்பட்டுள்ளார். இதில் திடுக்கிட்டு எழுந்த தனபால் அதை தடுக்க முயன்றபோது கை மற்றும் வயிற்று பகுதியில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு கூச்சலிட்டுள்ளார். உடனே கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தனபாலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கீழப்பழுவூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
    சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கல் பனா சசிகுமார். இந்நிலையில் ஊராட்சி மன்றத்திற்குட் பட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. அதே பகுதியில் முன்னாள் கவுன் சிலர் ஒருவரின் பண்ணை குட்டை வெட்டுவது தொடர் பாக ஊராட்சி மன்ற தலை வருக்கும், ஊராட்சி செயலாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து ஊராட்சி உதவி இயக்குனர் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுகளத் தூர் ஊராட்சி மன்ற தலை வரின் மாமனார் தமிழரசன் 100 நாள் வேலை நடைபெற்ற இடத்திற்கு சென்று, பண்ணை குட்டை வெட்டுவது தொடர்பாக வேலை செய்த பெண்களை தகாத வார்த்தைகளால் திட் டியதாக கூறப்படுகிறது. இதனை ஊராட்சி மன்ற 9-வார்டு உறுப்பினர் செல்வ குமார் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட் டது. இதுகுறித்து கிராம நாட்டாண்மைகள் 2 தரப் பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

    இதனை ஊராட்சி மன்ற தலைவர் தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக 2 தரப்பினரும் தனித்தனியாக செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் ஒருதரப் பினர் ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் கொடுத் தார். இந்த நிலையில் நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கிராம மக்களுக்கும், கிராம நாட் டாண்மைகளுக்கும் மதிப் பளிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த செந்துறை போலீசார் போராட்டக்காரர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு திரு மேனி செந்துறை போலீஸ் நிலையம் வந்து, 2 தரப்பின ரை யும் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் 2 தரப்பினரும் கொடுத்த புகார்களில் உண்மை இல்லை என்பதை தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு திரு மேனி 2 தரப்பினரையும் எச்சரிக்கை செய்து ஊராட்சி பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.
    அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, ஜெயங்கொண்டம்-தா.பழூரில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    ஜெயங்கொண்டம்: 

    அரியலூரில், ரூ.347 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனை வரவேற்று ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் அ.தி.மு.க. நகர செயலாளர் பி.ஆர்.செல்வராஜ் தலைமையில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் முன்னாள் கவுன்சிலர் எஸ்.டி.துரை உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தா.பழூரிலும், கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில், அக்கட்சியினர் கடைவீதியில் பட்டாசு வெடித்தனர். மேலும் அவர்கள் கடைவீதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதில் ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன், சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
    செந்துறை அருகே, சொத்தை தனது பெயரில் எழுதித்தர மறுத்ததால் மாமனாரை அடித்துக்கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள காவேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 65). விவசாயியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ராமலிங்கம் கடந்த 2010-ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து தங்கசாமி தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரை ராமலிங்கத்தின் மனைவி ராணிக்கு பாகம் பிரித்து கொடுத்துவிட்டார். இந்நிலையில் தனக்கு வழங்கிய நிலத்தினை தனது பெயரில் மாற்றம் செய்து தரக்கோரி மாமனார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தங்கசாமி கொட்டகையில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த மருமகள் ராணி தனது பெயரில் சொத்தை மாற்றி எழுதித்தருமாறு தங்கசாமியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த ராணி அருகிலிருந்த கட்டையால் தங்கசாமியை தாக்கியுள்ளார். அதன் பின்னர் உறவினர்கள் சண்டையை விலக்கிவிட்டு உள்ளனர். தங்கசாமி குடிபோதையில் இருந்ததால் அவரை காலையில் பொய்யாதநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விரைந்து வந்து தங்கசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கசாமியின் இளைய மகன் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    டாஸ்மாக் பணியாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் குணசேகரன் கூறியுள்ளார்.
    மீன்சுருட்டி:

    தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் குணசேகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கில் பொருள் குறைவு ஏற்பட்டதற்காக பணியாளர்களை மதுபாட்டில் குறைவு தொகை, 50 சதவீதம் அபராத தொகை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை கட்டக்கோரி கட்டாயப்படுத்துவது வன்மையாக இந்த தமிழக அரசு பணியாளர் சங்கம் கண்டிக்கிறது. முறையான விசாரணை செய்யாமல் இவ்வாறு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊரடங்கு காலத்தில் சில இடங்களில் திருட்டும், அரசியல் வாதிகள், புரோக்கர்கள் சேர்ந்து கட்டாயப்படுத்தி அதிகாரிகள் உடந்தையுடன் மது பாட்டில்களை எடுத்துள்ளனர். இதுபோன்ற மதுபாட்டில் குறைவுக்கு பணியாளர்களை மட்டும் தண்டிப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். பின் விற்பனை தொகையை உரிய காலத்தில் கட்டிய பணியாளர்கள் மீது அபராத தொகை விதிக்கப்படுவது நிறுத்தி வைக்க வேண்டும். அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நிலையில் பொதுமக்களுடன் டாஸ்மாக் பணியாளர்கள் நேரடி தொடர்பில் உள்ளதால் அனைத்து பணியாளர்களையும் உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மைபணியாளர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 468 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 450 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி இருந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணி புரியும் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த 54 வயது பெண், காமராஜபுரத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் மற்றும் மஸ்கட்டில் இருந்து திரும்பி வந்த கரையான்குறிச்சியை சேர்ந்த 1 வயது ஆண் குழந்தை மற்றும் அயன்சுத்தமல்லியை சேர்ந்த 70 வயது பெண், அரியலூர் குருவாலப்பர் கோவில் தெருவை சேர்ந்த 19 வயது கர்ப்பிணி பெண், வஞ்சினாபுரத்தை சேர்ந்த 28 வயது ஆண், காவனூரை சேர்ந்த 34 வயது பெண் ஆகிய 7 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அவர்களில் 6 பேர் பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 293 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
    தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வி.கைகாட்டி:

    பெரியநாகலூர், வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி மகன் சின்னத்துரை(வயது 37). இவருக்கும், அதே பகுதி கிழக்கு தெருவை சேர்ந்த கருப்புசாமி மகன் சேகர்(44), மற்றும் இவரது மகன் சுதாகர்(21) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சின்னத்துரை தனது மனைவி செல்வியுடன் தந்தை கருப்புசாமி வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த சுதாகர், அவரது தந்தை சேகர், உறவினர்கள் செல்வராஜ்(30), திருநாவுக்கரசு(28) ஆகிய 4 பேரும் சேர்ந்து சின்னத்துரை, அவரது மனைவி செல்வி, தாய் அமிர்தவள்ளி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து, சுதாகர், சேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்து மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
    ×