என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகராறில் கைது"

    • முன்விரோதத்தால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பாலையா நாயுடு தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி பத் மாவதி (வயது 50) கூலித் தொழிலாளி. அல்லன் அப் பாபு முதலி தெருவை சேர்ந்த வர் ராஜராஜசோழன் (53) இவர்களுக்கு இடையே கடந்த இரண்டு வருடங்க ளாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பத்மாவதி வீட்டின் அருகே இருந்த வாழை மரத்தை ராஜராஜசோழன் மற்றும் உப்புமேடு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (48) ஆகிய இருவரும் நேற்று முன் தினம் இரவு வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதனை பத்மாவதி மற்றும் இவரது கணவர் ஆகிய இருவ ரும் தட்டி கேட்டுள்ளனர். இதில் ஆவேசம் அடைந்த ராஜ ராஜசோழன், மணிமாறன் ஆகி யோர் பத்மாவதியை தாக்கியுள்ளனர்.

    இது தொடர்பாக பத்மா வதி நேற்று காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக் குப் பதிவு செய்து ராஜராஜசோழன், மணிமாறன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×