search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக்
    X
    டாஸ்மாக்

    டாஸ்மாக் பணியாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்

    டாஸ்மாக் பணியாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் குணசேகரன் கூறியுள்ளார்.
    மீன்சுருட்டி:

    தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் குணசேகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கில் பொருள் குறைவு ஏற்பட்டதற்காக பணியாளர்களை மதுபாட்டில் குறைவு தொகை, 50 சதவீதம் அபராத தொகை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை கட்டக்கோரி கட்டாயப்படுத்துவது வன்மையாக இந்த தமிழக அரசு பணியாளர் சங்கம் கண்டிக்கிறது. முறையான விசாரணை செய்யாமல் இவ்வாறு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊரடங்கு காலத்தில் சில இடங்களில் திருட்டும், அரசியல் வாதிகள், புரோக்கர்கள் சேர்ந்து கட்டாயப்படுத்தி அதிகாரிகள் உடந்தையுடன் மது பாட்டில்களை எடுத்துள்ளனர். இதுபோன்ற மதுபாட்டில் குறைவுக்கு பணியாளர்களை மட்டும் தண்டிப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். பின் விற்பனை தொகையை உரிய காலத்தில் கட்டிய பணியாளர்கள் மீது அபராத தொகை விதிக்கப்படுவது நிறுத்தி வைக்க வேண்டும். அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நிலையில் பொதுமக்களுடன் டாஸ்மாக் பணியாளர்கள் நேரடி தொடர்பில் உள்ளதால் அனைத்து பணியாளர்களையும் உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×