என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே முன்விரோத தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 50). இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார்(35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நடராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது ராஜ்குமார் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகிய 3 பேரும் வந்து தகராறு செய்து நடராஜன் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர். இதையடுத்து நடராஜன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மாலை 5 மணி அளவில் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் நடராஜனின் ஆதரவாளர்கள் ரமேஷ், ராமதாஸ், மணிகண்டன் மற்றும் ராஜ்குமார், அவரது தந்தை வைத்தியநாதசாமி, தாய் சந்திரவதனம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம் அருகே சொத்து தகராறில் விவசாயியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த மனைவி, மகன், மருமகள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சுந்தரேசபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 90). விவசாயியான இவர், தெற்கு தெருவில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார். சாமிநாதனுக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி சிவபாக்கியம் இறந்துவிட்டார். அவருக்கு தனலட்சுமி (65) என்ற மகளும், தர்மராஜ் (60) என்ற மகனும் உள்ளனர். 2-வது மனைவி பஞ்சவர்ணம் (70). இவருக்கு தங்கமணி (48) என்ற மகன் உள்ளார்.
சாமிநாதன், தனது சொத்துகளை இரு மனைவிக்கும் பிறந்த மகன் மற்றும் மகள்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் முதல் மனைவியின் மகன் தர்மராஜிக்கும், 2-வது மனைவியின் மகன் தங்கமணிக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாமிநாதன் தனது குடிசை வீட்டில் தனியே தூங்கிக்கொண்டு இருந்தார். நேற்று காலை சாமிநாதன் குடிசைக்கு அருகே வசிக்கும் தனலட்சுமி, சாமிநாதனை பார்க்க சென்றபோது, அவர் அரிவாளால் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சாமிநாதனின் 2-வது மனைவி பஞ்சவர்ணம், மகன் தங்கமணி, மருமகள் சாந்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து, சொத்து பிரச்சனையில் சாமிநாதனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளாங்குடி பகுதியில் கொரோனா பாதித்த பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விளாங்குடி பகுதியில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விளாங்குடி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை தவிர விளாங்குடியை சுற்றியுள்ள கிராமப்புற சாலைகள் முழுவதையும் தடுப்புகள் வைத்து அடைத்தனர். தொடர்ந்து விளாங்குடி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அரியலூரில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் பிள்ளையார்குளம் பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது 16 வயது மகளை காணவில்லை என தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வேனாநல்லூர் காலனி தெருவை சேர்ந்த ரவி மகன் ராகுல்(வயது 21) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது. மேலும் அவர் அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரகலா போக்சோ சட்டத்தின் கீழ் ராகுலை கைது செய்தார். தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமி சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க தர்மராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டம் 2020, மாநில அரசு அறிவித்துள்ள குதிரைத்திறனுக்கேற்ற கூடுதல் மின்கட்டண வைப்புத்தொகை, இலவச மின்சாரம் ரத்து, வேளாண் விளைபொருட்களின் வணிக ஊக்குவிப்பு உறுதி செய்துகொடுத்தல் அவசர சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வாபஸ் பெறவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இதனை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், முழுவதும் வருகிற 27-ந் தேதி அனைத்து விவசாயிகளின் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது என்றும், இச்சட்டங்களை வாபஸ்பெறக்கோரி நாளையில் (திங்கட்கிழமை) இருந்து மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா அறிவுறுத்தலின் பேரில், தேளூர்- ரெட்டிப்பாளையம் பகுதியில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.50 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு இலவசமாக ஊராட்சி சார்பில் முககவசம் வழங்கப்பட்டது.
மேலும் மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிற்கு சென்றவுடன் கைகளை சுத்தமாக சோப்புபோட்டு கழுவ வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்நாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் வளவெட்டிகுப்பம் கால்நடை மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடந்தது.
உடையார்பார்பாளையம்:
உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் வளவெட்டிகுப்பம் கால்நடை மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடந்தது. இதில் கால்நடை மருத்துவர் இளையராஜா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கருத்தரிப்பு, கோமாரி தடுப்பூசி உள்ளிட்டவை போடப்பட்டது. இதில் வளவெட்டிகுப்பம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து ஊசி போட்டு சென்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் வின்சென்ட்(வயது 43). சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த 6¼ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1,500 ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரியலூரில், ஜவுளிக்கடையில் பணிபுரிந்த மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெரம்பலூரில் வங்கி மேலாளர் உள்பட மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியானது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 29 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் அரியலூர் கடைவீதியில் உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்த 20 பேர் அடங்குவர். இந்நிலையில் அதே கடையில் பணிபுரிந்த மேலும் 33 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் மாவட்டத்தில் மேலும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 39 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், 3 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 585 ஆக உயர்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெரம்பலூர் சிவன்கோவில் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளரான, பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஆவார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளரான 28 வயது வாலிபருக்கும், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமாந்துறை ரோவர் நகரை சேர்ந்த 28 வயது பிரசவித்த பெண்ணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியாற்றிய வங்கி 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.

அரியலூரில் தனியார் ஜவுளிக்கடை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 542 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் நகரில் மங்காய் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது கடைக்கு அருகாமையில் பூக்கடை வைத்திருந்தவரும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பின்னர் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அந்த கடையில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தகடை யின் ஊழியர்கள் தங்கியிருந்த இடங்களும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இதில் அரியலூர் நகரில் தங்கியிருந்த 16 பேரும், கிராமங்களில் இருந்து கடைக்கு வந்த 4 பேரும் சேர்த்து 20 பேர் அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா விடுத்துள்ள அறிக்கையில், அந்த ஜவுளிக்கடையில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்தகடையில் கடந்த 10 நாட்களுக்குள் ஜவுளி வாங்க சென்றவர்களும், கடை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது அரியலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவிப்பு செய்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தில் 04329 228709 மற்றும் 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம் என்று கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று வரை 513 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று காலை ஜவுளிக் கடை ஊழியர்கள் 20 பேரை சேர்த்து மொத்தம் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 542 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூரில் பொதுமக்கள் ஊரடங்கை கண்டுகொள்ளாமல் தாங்கள் எப்போதும் போல் வழக்கமாகவே முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் செயல்படுகின்றனர்.
அரியலூர்:
அரியலூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் ரத்னா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வரும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். அப்படி முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு கடையின் உரிமையாளர்கள் பொருட்கள் வழங்க கூடாது என உத்தர விடப்பட்டுள்ளது. மேலும் கடையின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்றால் அவர்களை உடனே கடையின் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் முககவசம் அணியாமல் செல்வேருக்கு தற்போது அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுபோல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனா தாக்கம் குறைந்தபாடு இல்லை. இந்த நிலையில் அரியலூரில் பொதுமக்கள் ஊரடங்கை கண்டுகொள்ளாமல் தாங்கள் எப்போதும் போல் வழக்கமாகவே முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் செயல்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழுதடைந்த நிலையில் இருந்த கீழக்காவட்டாங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை பொதுமக்கள் சீர் செய்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் அரசாங்கத்தின் முக்கிய கோப்புகள் எல்லாம் மழை பெய்யும் நேரங்களில் கட்டிடங்களுக்குள் மழைநீர் ஒழுகி நனைந்து கொண்டிருந்தது. இதனை கண்ட கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கிராம நிர்வாக அதிகாரி கட்டிடத்தை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கொரோனா காலம் என்பதனாலோ, என்னவோ கிராம நிர்வாக அதிகாரி கட்டிட புனரமைப்புக்கு மாவட்ட நிர்வாகம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பின்னர் கிராம மக்கள் பலரும் தங்களால் ஆன பங்களிப்பாக நிதி உதவி அளித்து அந்த கட்டிடத்தை சரி செய்து தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் இருக்கக்கூடிய கிராம நிர்வாக அதிகாரி கட்டிடம் கட்ட அரசை எதிர்பார்த்து பிரயோஜனமில்லை. நம்மால் முடிந்த உதவிகளை செய்து நாமே புதுப்பித்துக்கொள்வோம் என முடிவு செய்து சுமார் ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் ஒழுகும் நிலையில் இருந்த கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு கம்பி வலை பதித்து செங்கல், மணல், ஜல்லி கலவை பயன்படுத்தி சரிசெய்து, ரூ.20 ஆயிரம் மதிப்பில் தரைத்தளத்தில் டைல்ஸ் பதித்தும் முற்றிலும் சேதமடைந்திருந்த மின் வயர்களை முழுமையாக மாற்றி மழை பெய்தால் தண்ணீர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்குள் புகும் நிலையை மாற்றி சீரமைத்துள்ளோம்.
மேலும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு தரமான பீரோ ரூ.10 ஆயிரம் மதிப்பில் வாங்கித் தந்துள்ளோம் என்றனர். இந்த காலத்திலும் அரசாங்கத்தை எதிர்பாராமல் கிராம மக்கள் செய்த இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.