என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    ஜெயங்கொண்டம் அருகே முன்விரோத தகராறில் 6 பேர் மீது வழக்கு

    ஜெயங்கொண்டம் அருகே முன்விரோத தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 50). இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார்(35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நடராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது ராஜ்குமார் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகிய 3 பேரும் வந்து தகராறு செய்து நடராஜன் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர். இதையடுத்து நடராஜன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மாலை 5 மணி அளவில் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் நடராஜனின் ஆதரவாளர்கள் ரமேஷ், ராமதாஸ், மணிகண்டன் மற்றும் ராஜ்குமார், அவரது தந்தை வைத்தியநாதசாமி, தாய் சந்திரவதனம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×