என் மலர்
அரியலூர்
திருமானூர் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் இடித்து நாசம் செய்தனர். அது தொடர்பாக அலுவலகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமானூர் போலீஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் புகார் அளித்திருந்தனர்.
ஆனால் இதுவரை காவல்துறையினர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று திருமானூர் பஸ் நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் சாமிதுரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை, மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார்.
அரியலூர்:
குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டம், அருங்கால் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை(வயது 50) ஏற்கனவே கீழப்பழுவூர் போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்துள்ளனர். இதேபோல் வாரணவாசி சமத்துவபுரத்தை சேர்ந்த அருண்பாண்டியனை(30) கைது செய்து அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி, அருண்பாண்டியன் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகலை கிளை சிறையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, அருண்பாண்டியனிடம் போலீசார் வழங்கி, அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வயிற்றில் வளரும் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை என தெரிந்த தால் திருமனூர் அருகே மன முடைந்த கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மனைவி மாலதி (வயது 25). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த மாலதி, தற்போது 7 மாத கர்ப்பமாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்றில் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்வதற்காக மாலதி ஒரு மருத்துவமனையில் தன்னை பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக மாலதியிடம் கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாலதி கடந்த 24-ந்தேதி எலி மருந்தை (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாலதி உயிரிழந்தார். முன்னதாக மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த போது மாலதிக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும் கூறப் படுகிறது. இது தொடர்பாக திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரியலூர் வருவாய் கோட்டாட்சியரும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மனைவி மாலதி (வயது 25). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த மாலதி, தற்போது 7 மாத கர்ப்பமாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்றில் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்வதற்காக மாலதி ஒரு மருத்துவமனையில் தன்னை பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக மாலதியிடம் கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாலதி கடந்த 24-ந்தேதி எலி மருந்தை (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாலதி உயிரிழந்தார். முன்னதாக மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த போது மாலதிக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும் கூறப் படுகிறது. இது தொடர்பாக திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரியலூர் வருவாய் கோட்டாட்சியரும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்.
அரியலூர் அருகே கடையில் பணம்- நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவடிவேல்(வயது 48). இவர் தா.பழூரில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, கடையின் பின்புறம் உள்ள கதவு உடைந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுந்தரவடிவேல் உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் 4½ கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருப்பது தெரிந்தது. பின்னர் அவர் இதுகுறித்து உடனே தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் சம்பவ இடத்திற்கு விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் மலர்தூவி இசை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரகலா, தா.பழூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய முதல் நிலை காவலர் சிங்காரவேல் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர்கள் 3 பேரும் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். குணமடைந்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் மலர்தூவி இசை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அவர்களுக்கு பூங்கொத்து, பழக்கூடை கொடுத்து வரவேற்றார். அப்போது அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சுந்தரமூர்த்தி, திருமேனி, துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
கா.அம்பாபூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் கா.அம்பாபூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டுக்கான மடிக்கணினி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அதுபோக மீதம் இருந்த 7 மடிக்கணினிகள் தலைமையாசிரியர் அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு தலைமையாசிரியர் மனோகரன் சென்றபோது பள்ளியில் உள்ள கேட்டின் பூட்டும், கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, அவரது அறையில் இருந்த மடிக்கணினிகள் திருடுபோய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மனோகரன் அளித்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா மருத்துவமுகாம் அமைக்க உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்கு செல்லும் சாலையில் கருவேல மரங்களை வெட்டிப்போட்டு தடுப்பு ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா மருத்துவமுகாம் அமைக்க உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்கு செல்லும் சாலையில் கருவேல மரங்களை வெட்டிப்போட்டு தடுப்பு ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், இப்பகுதியை சுற்றிலும் வீடுகள் இருப்பதாலும், வீடுகளில் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் இருப்பதாலும் இங்கு கொரோனா மருத்துவமுகாம் அமைக்கக்கூடாது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் வேறு மாற்று இடத்தில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசார் கூறுகையில், இப்பகுதியில் கொரோனா மருத்துவமுகாம் அமைக்க எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. முன்னறிவிப்பு இன்றி கொரோனா வார்டு அமைக்கப்பட மாட்டார்கள் என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரமங்கலத்தில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம்(வயது 72). தபால் ஊழியராக இருந்து ஓய்வுபெற்றவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தா(68). நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுவிட்டனர். பின்னர் நேற்று அதிகாலை எழுந்த வசந்தா வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. தொடர்ந்து பீரோவில் பார்த்தபோது நகைகள், வெள்ளிபொருட்கள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
உடனே அவர் இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 32 பவுன் தங்க நகைகள், 750 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இச்சட்டத்தை மாநில அரசு திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன்பு நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்து தொழிலாளர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பழூர், கோடாலிகருப்பூர், தென்கச்சி பெருமாள்நத்தம், சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான் உள்ளிட்ட தா.பழூர் மற்றும் ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் பருத்தி பயிரிட்டுள்ளனர். விளைந்த பருத்தியை கடந்த ஒரு வாரமாக ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் கொண்டுவந்திருந்த பருத்திக்கு அரசு நிர்ணயித்துள்ள ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 500 அடிப்படையில் ஈரப்பதம் அறிந்து விலை கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் நேற்று கொண்டுவரப்பட்ட பருத்தி மூட்டைகளில் ஈரப்பதம் குறைவாக உள்ள மூட்டைக்கு குறைந்த விலையும், ஈரப்பதம் அதிகமாக உள்ள மூட்டைக்கு அதிக விலையும் நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு அதிகாரிகளை கண்டித்தும், ஈரப்பதம் கண்டறியும் கருவி மூலம் பருத்தியை தரம் பிரித்து தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய விலை பெற்றுத்தருவதாக போலீசார் கூறியதை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் திருச்சி- சிதம்பரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தா.பழூர் அருகே மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்த எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் காலனி தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 48). எலக்ட்ரீசியரான இவர் தா.பழூரில் உள்ள மின்சார வாரியத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று கொளஞ்சிநாதன் தா.பழூர் அருகே உள்ள மேலமெக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்கி கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கம்பத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த கொளஞ்சிநாதன் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளஞ்சிநாதன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி குமாரி கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மழவராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வியின் உறவினர் சீனிவாசன்(62). விவசாயி. இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் பிரச்சினைக்குரிய நிலத்தில் சீனிவாசன் கொட்டகை அமைத்துள்ளார். அப்போது அங்கு வந்த தமிழ்ச்செல்வி, அவரை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், தமிழ்ச்செல்வியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிந்து சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






