என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூரில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலந்துறையார் கட்டளை கிராமத்தை சேர்ந்த பிரபுவின் மனைவி மகரஜோதி(வயது 25). இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மகரஜோதி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார்.
இதையடுத்து அவரின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரியலூரில் செல்போன் கோபுர உச்சியில் நின்று வாலிபர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்:
அரியலூர் தெற்குத்தெருவில் அய்யப்பநாயக்கன் ஏரிக்கு அருகில் உள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுர உச்சியில் நேற்று மதியம் 3 மணிக்கு வாலிபர் ஒருவர் நின்று, கூக்குரல் எழுப்பியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கு வரத்தொடங்கினர். பொதுமக்கள் செல்போன் கோபுர உச்சியில் பார்த்தபோது, அங்கு கோசிநகரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(வயது 30) நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உறவினர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்டு பேசியபோது, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, செல்போன் கோபுர உச்சியில் நின்று போராடுவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த அரியலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், விக்கியிடம் கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் விக்கி, இறங்க மறுத்து செல்போன் கோபுரத்தின் உச்சியில் காலை மடக்கி அமர்ந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் விக்கியின் தந்தை ரவியை அழைத்த போலீசார், அவரை செல்போனில் விக்கியிடம் பேசச்சொல்லி, அவரை சமாதானப்படுத்தினர். இதையடுத்து செல்போன் கோபுர உச்சிக்கு சென்ற அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார், விக்கியை சமாதானப்படுத்தி அவரை கீழே அழைத்து வந்தார்.
இது குறித்து விக்கி கூறுகையில், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், நெல்லின் அவசியத்தை முதல்-அமைச்சர் அறிந்து போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும், என்றும் கூறினார். பின்னர் அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதேபோல் அரியலூர் பஸ் நிலையம் அருகே கோசி நகரை சேர்ந்த வீரமணி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனி ஆளாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். வீரமணி, செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய விக்கியின் அண்ணன் ஆவார்.

அரியலூரில் இரும்பு கம்பியால் தாக்கி வியாபாரி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தம்பதி மற்றும் அவர்களுடைய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூரில் இரும்பு கம்பியால் தாக்கி வியாபாரி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தம்பதி மற்றும் அவர்களுடைய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூரில் உள்ள ஒப்பில்லாத அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 58). வியாபாரி. இவர் வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர் ராஜா(49). டிரைவர். பெரியசாமி வளர்த்த நாய் தினமும் ராஜா வீட்டிற்கு சென்று, அசிங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 வீட்டை சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை பெரியசாமி வளர்த்த நாய், ராஜா வீட்டில் அசிங்கப்படுத்தியதால், அதைப் பார்த்த ராஜா நாயை அடித்துள்ளார். அதைத் தடுக்க வந்த பெரியசாமிக்கும், ராஜாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜா, பெரியசாமியை இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து பெரியசாமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி இறந்தார். இது குறித்து அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் கொலை வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராஜா, அவரது மனைவி மீனா, மகன் மணிகண்டன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூரில் இரும்பு கம்பியால் தாக்கி வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:
அரியலூர் ஒப்பில்லாத அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 58). வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா(49). டிரைவர். பெரியசாமி வளர்த்த நாய் தினமும் ராஜா வீட்டிற்கு சென்று, அசிங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 வீட்டை சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று பெரியசாமி வளர்த்த நாய், ராஜா வீட்டில் அசிங்கப்படுத்தியதால், அதைப் பார்த்த ராஜா நாயை அடித்துள்ளார்.
அதைத்தடுக்க வந்த பெரியசாமிக்கும், ராஜாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜா, பெரியசாமியை இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து பெரியசாமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி இறந்தார். இது குறித்து அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் கொலை வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராஜா, அவரது மனைவி மீனா, மகன் மணிகண்டன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு தேவராஜ் அறிவுறுத்தலின்படி ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு மற்றும் பிச்சனூர் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை செய்தனர்.
அப்போது மேலக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரும், பிச்சனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்ணன் என்பவரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, மணிகண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மொத்தம் 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,605 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களில் தலா ஒருவருக்கும், அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2 பேருக்கும் என மொத்தம் 6 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,605 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 68 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 4,489 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 588 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே மாவட்டத்தில் 2,247 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,223 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 3 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 388 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி பூங்கொடி(வயது 29). இவர்கள் 2 பேரும் கடந்த 1-ந் தேதி சிறுகடம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் உடையார்பாளையம் அருகே வந்தபோது மழை பெய்ததால் கார்த்திக், பூங்கொடியை பஸ்சில் வருமாறு கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். கார்த்திக் வீட்டிற்கு சென்று வெகு நேரமாகியும் பூங்கொடி வீட்டுக்கு வரவில்லை.
இதையடுத்து அவரை கார்த்திக் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, மாயமான பூங்கொடியை தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டத்தில் அனுமதியின்றி லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 160 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற அதே பகுதியை சேர்ந்த சம்பத்(வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 160 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை கழுத்தளவு தண்ணீரில் மயானத்திற்கு தூக்கி செல்லும் தொடர்கதையாகி வருகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் நைனார் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஏரிக்கு அருகில் உள்ள மயானத்திற்கு செல்ல தனி பாதை இல்லாத காரணத்தால் இந்த ஏரி கரையின் வழியாகத்தான் மயான கொட்டகைக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இறப்பவர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல பெரும்பாடுபடுகின்றனர் இந்த கிராம மக்கள். ஏரியில் கழுத்தளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை சுமந்து செல்ல வேண்டியுள்ளது. தண்ணீர் அதிகம் இருந்தால் நீந்திக்கொண்டு தான் செல்லும் அவலமும் ஏற்படுகின்றது. வழக்கம் போல தற்போது புயல் காரணமாக மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் அனைத்து ஏரியிலும் தண்ணீர் அதிகளவில் உள்ளது. தற்போது நேற்று கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த சொக்கர் என்கிற ராமலிங்கம்(வயது 95) வயது முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்தார்,
அவரது உடலை அடக்கம் செய்ய நைனார் ஏரியை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது ஏரியில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் பொதுமக்கள் உயிரை பனையம் வைத்து இறந்தவர் உடலை அடக்கம் செய்ய மார்பளவு தண்ணீரில் தூக்கி சென்றனர். இதே நிலைதான் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் வருவார்கள் பார்வையிடுவார்கள் சென்றுவிடுவார்கள். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு மழைக்காலத்தில் இறந்த ருக்கு என்ற மூதாட்டியின் உடலை அடக்க செய்ய கழுத்தளவு தண்ணீரில் மிதந்து கொண்டு சென்ற நிகழ்வை அறிந்த மாவட்ட கலெக்டர் இது குறித்து நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது மயானத்திற்கு செல்ல தனி பாதை அமைத்து தரப்படும் என கூறி சென்றவர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மயானத்திற்கு செல்ல தனிப்பாதை அமைத்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடையார்பாளையம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற உடையார்பாளையத்தை சேர்ந்த செல்வமணி(வயது 60), வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி(52) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போத்தனூர்:
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைவேலு என்பவரது மகன் முத்து மணிகண்டன் (வயது 26). இவர் கோவை அருகே உள்ள சுந்தராபுரம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் திருமணம் ஆனது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு குடிவந்தார். பின்னர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்து மணிகண்டன், அதே தனியார் மருத்துவமனையில் பயோமெடிக்கல் என்ஜினீயரிங் வேலை பார்க்கும் தனது நண்பரான முஸ்தக் ஷெரீப் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சுந்தராபுரம்-மதுக்கரை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை முஸ்தக் ஷெரீப் ஓட்டினார்.
அப்போது எதிரே மதுக்கரையில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், முத்து மணிகண்டன் வந்த மோட்டார் சைக்கிளுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதியது. மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த புதுமாப்பிள்ளை முத்து மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவலின் பேரில் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த முஸ்தக் ஷெரீப், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மதுக்கரையை சேர்ந்த விஷ்ணுபிரசாத், பிரவீன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிமடம் அருகே வடிகால் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீரில் அமர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மரவள்ளி கிழங்கு, கரும்பு, நெல், உளுந்து ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது. ‘புரெவி‘ புயல் காரணமாக அரியலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஓலையூர் அருகே உள்ள அழகாபுரம் பெரிய ஏரி நிரம்பி, அங்கிருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. ஏரி நீர் வெளியேற வேண்டிய வடிகால் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் ஓலையூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்து வருகிறது. இதையடுத்து சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு, கரும்பு, உளுந்து, முந்திரி, நெல் ஆகிய பயிர்களில் தொடர்ந்து 5 நாட்களாக இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்து வந்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தொடர்ந்து இந்த ஆண்டும் வெள்ளநீர் விவசாய நிலங்களில் புகுந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவசாய பயிர்கள் நாசம் ஆகிவிட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் வடிகால் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்தை காக்க வலியுறுத்தி தங்களது வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீரில் அமர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓலையூர் கிராம நிர்வாக அதிகாரி கோட்டி, சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விவசாயிகள் வடிகால் ஓடையை சீரமைத்து, இந்த ஆண்டு நடந்தது போல் மீண்டும் விவசாய நிலத்திற்குள் வெள்ளநீர் வராதபடி ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கோட்டி, மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், ஒன்றிய பொறியாளர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் அழகாபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகமும், ஓலையூர் ஊராட்சி மன்ற நிர்வாகமும் இணைந்து அழகாபுரம் பெரிய ஏரிக்கான வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைத்து தருவதாக உத்தரவாதம் கொடுத்தனர். இதையடுத்து காலை முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.