என் மலர்
அரியலூர்
ஆண்டிமடம் அருகே கடையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் கூவத்தூர் கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சோமசுந்தரம்(வயது 45), அண்ணாமலை(56) ஆகியோருடைய கடைகளில் புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வி.கைகாட்டியில் சாலை பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி கல்லகம் கேட் முதல் மீன்சுருட்டி வரை ரூ.900 கோடி மதிப்பீட்டில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை ஓரங்களில் உள்ள புளியமரங்கள் மற்றும் பனைமரங்கள் வெட்டப்பட்டும், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டும் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் அணுகுசாலை அமைத்து மேம்பாலத்திற்கு கான்கிரீட் போடுவதற்கு சுமார் 9 அடி ஆழத்திற்கு 500 மீட்டர் தூரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் மேம்பாலத்தின் உள்ளே வாகனங்கள் சென்று வெளியே வரும்போது திருச்சி-சிதம்பரம் சாலையில் இருபுறமும் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்து ஏற்படும் விதமாக சாலை பணி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிள்- கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலை அமைக்கும் பணி நடக்கும் இடத்திற்கு சென்று தொழிலாளர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதனை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும் என்று மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
அரியலூர்:
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் யார் என்பதை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும். சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும்.
இன்று முதல் 21-ம் தேதி வரை பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் எல்.முருகன் கூறினார்.
இந்த சுற்று பயணத்தின் போது வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் .
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் என எல்.முருகன் கூறியுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத ரூ.1.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வாகனங்களை பதிவு செய்தல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல், பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு வாகன பரிசோதனை மேற்கொண்டு வரி செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் இந்த அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே இந்த அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் லஞ்சம் அதிகரித்துள்ளதாகவும் பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை போலீஸ் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அதிரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
நுழைவாயில் கதவை மூடி சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் உள்ளே இருந்தவர்களை அப்படியே அலுவலகத்தின் ஒரு பகுதியில் அமர வைத்து விட்டு, தொடர்ந்து அலுவலகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் வாகனத்திலும் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ரூ.1.40 லட்சம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து வெங்கடேசன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த அரியலூர் அரசு பள்ளி மாணவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ‘வாழும் கர்மவீரரே, ‘மாணவர்களின் நலன் விரும்பும் முதல்வரே’ என்று கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சரை சந்தித்து நன்றி கூறினார்கள்.
சா.ரதிவாணன் என்ற மாணவன் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வழங்கினார். அந்த கடிதத்தில் உள்ள வாசகங்கள் வருமாறு:-
எந்தைத் தாயின் மருத்துவக் கனவெல்லாம் களையாது காத்திட்ட கருணை மறவோரே, 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டைத் தந்தெமை காத்தீர்....
அரியலூரில் எமை அறிந்திடுவார் யாருமில்லை. அது அன்றொருநாள்....
அறியாத பலருக்கும் அரியவராய் உள்ளோமையா! உங்களின் அரும்பெரும் செய்கையினார். இது இன்றையநாள்....
எமக்கெல்லாம் முகவரி தந்திட்ட மாணவர்களின் நலன் விரும்பும் முதல்வரே
அழியாது உமது பெயர் என்றென்றும் எங்கள் மனமெனும் அவைதனிலே....
ஆனந்தக் கடலினிலே குளிக்க வைத்து, அழகு பார்த்த வாழும் கர்மவீரரே....
நோயெனும் அரக்கன் துளிகூட நுழையாது, தமிழகத்தைக் காத்திடவே யாமுள்ளோம் மறவாதீர்....
கனவை நினைவாக்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு எங்களது நன்றி என்னும் மலர்களை தங்களது காலடியில் சமர்ப்பிக்கின்றோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சவுமியா என்ற மாணவி கூறும்போது, ‘‘நீட்’’ தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்காத காரணத்தால், எனக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ? என்று இருந்தபோது, முதல்-அமைச்சரின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. மாணவர்களின் சார்பாக முதல்-அமைச்சருக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருந்து, ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவராகி சேவை செய்வேன்’ என்றார்.

அரியலூர் மாவட்டத்தில் ‘புரெவி' புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர்:
மேலும் ‘புரெவி’ புயல் பயிர் சேதம் குறித்த ஆய்வு கூட்டம் வேளாண்மை இயக்குனர் தலைமையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
அரியலூர் மாவட்டத்தில் ‘புரெவி' புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திருமானூர் வட்டாரம் வெற்றியூர் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை பார்வையிட்ட அவர், விரைவில் கணக்கெடுப்பு பணிகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் அரியலூர் வட்டாரத்தில் இடையத்தாங்குடி கிராமத்தில் பருத்தி பயிர்களையும், பொய்யூர் கிராமத்தில் கடலை வயலையும் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் அலுவலர்களிடம், இன்றைக்குள் (வியாழக்கிழமை) இறுதி அறிக்கை அனுப்பிட அவர் அறிவுரை வழங்கினார். விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டின் அவசியம் மற்றும் பயன் குறித்து விளக்கி கூறினார்.
மேலும் ‘புரெவி’ புயல் பயிர் சேதம் குறித்த ஆய்வு கூட்டம் வேளாண்மை இயக்குனர் தலைமையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
அரியலூர் மாவட்டத்தில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் ரூ.26.52 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
ரூ.36.73 கோடியிலான 39 முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அரிச்சலூர் வளர்ச்சிப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றியதால் கொரோனா பரவல் கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது.
* அரசாங்கமே மக்களை தேடிச்சென்று குறைகளை தீர்த்து வருகிறது.
* முதலமைச்சரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

புகையிலை பொருட்களை விற்றது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் கடைவீதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தத்தனூர் மேலூரை சேர்ந்த நடராஜன்(வயது 50), சஞ்சய்(35), வடகடலைச் சேர்ந்த ஆதிமூலம்(55), வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த வினோத்(31), உடையார்பாளையத்தை சேர்ந்த மருதமுத்து(50), சாமிநாதன்(48) ஆகியோர், அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

செந்துறை குற்றவியல் கோர்ட்டு முன்பு இருந்த 5 மரங்களை வெட்டியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை சிவன் கோவில் பின்புறம் உள்ள தனியார் கட்டிடத்தில் செந்துறை குற்றவியல் கோர்ட்டு இயங்கி வருகிறது. இந்த கோர்ட்டு முன்புள்ள சாலை ஓரங்களில் நிழல் தரும் புங்கை மரங்கள் இருந்தன. இந்த மரங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் மரம் வெட்டும் எந்திரம் மூலம் வெட்டி அகற்றி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று கோர்ட்டுக்கு வந்த நீதிபதி மற்றும் வக்கீல்கள் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வக்கீல் காரல்மார்க்ஸ் செந்துறை போலீசில் புகார் செய்தார். அதில், கோர்ட்டு முன்பு இருந்த 5 மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோர்ட்டு முன்பு இருந்த மரங்கள் வெட்டப்பட்டது செந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்கிரமங்கலம் அருகே மது விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் கொலையனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோலையனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சகுந்தலா(வயது 46) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.
இதில் அவர் வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் விக்கிரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த மாதவி (36) என்பவரது வீட்டில் சோதனை செய்து, விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சகுந்தலா, மாதவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூர், அரியலூரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அரியலூர்:
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில், மாவட்ட அனைத்து தொழிற்சங்க, விவசாயிகள் சங்கங்களின் போராட்ட குழுவினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, அனைத்து தொழிற்சங்கங்கள், அனைத்து கட்சிகள், விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் மாணவர், இளைஞர் மன்றம், மாதர் சங்க கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில் பாலக்கரை ரவுண்டானா அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமையில் கூடினர்.
அப்போது போராட்டத்தில் பங்கேற்பவர்கள் அமருவதற்கு நாற்காலிகள் போட்டனர். அவற்றை போடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் பாலக்கரை ரவுண்டானா அருகே சாலையோரத்தில் நாற்காலிகள் போட்டு, அதில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலக சாலையின் ஒருபுறத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை கொண்டு வரக்கூடாது, விவசாயிகள் விரோத சட்டங்களை தமிழக அரசு ஆதரிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட தி.மு.க. ெசயலாளர் குன்னம் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, த.மு.மு.க., இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களும், தமிழக விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், திராவிடர் கழகம், தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டுப்புற பாடல்களை கலைஞர்கள் பாடி மகிழ்வித்தனர். இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக விவசாயிகள், அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.
இதேபோல் அரியலூர் அண்ணா சிலை அருகில் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண்மை சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சின்னப்பா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல், காங்கிரஸ் நகர செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆண்டிமடம் அருகே மீன்பிடிக்க சென்ற ஓட்டல் உரிமையாளர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி(வயது 36). இவருக்கு திருமணமாகி ரஞ்சிதா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இவர் அதே கிராமத்தில் உள்ள நந்ததேவன் ஏரி அருகே ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். அந்த ஓட்டலில் தினமும் மதிய உணவில் மீன் குழம்பு சாப்பாடு இடம்பெறுவது வழக்கம். அதற்காக அருகில் உள்ள நந்ததேவன் ஏரியில் மீன்பிடித்து சமைப்பதை முரளி வழக்கமாக கொண்டிருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை ஏரிக்கு சென்று மீன்பிடிக்க வலையை ஏரியில் வீசிவிட்டு வந்தார். பின்னர் இரவு 10 மணியளவில் தனது வீட்டிலும், நண்பர்களிடமும் வலையில் மீன் சிக்கியுள்ளதா? என்று பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இது பற்றி ரஞ்சிதா மற்றும் அவருடைய மகன்கள், முரளியின் நண்பர்களிடம் கூறியுள்ளனர். இந்த தகவல் கிராமத்தில் பரவியதையடுத்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏரிக்கு சென்று பார்த்தபோது, கரையில் முரளியின் கைலி மற்றும் செருப்புகள் இருந்தன.
இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் ஏரிக்குள் இறங்கி இரவு முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் முரளி கிடைக்கவில்லை. இது குறித்து ஆண்டிமடம் போலீசாருக்கும், ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர், இளைஞர்களுடன் சேர்ந்து ரப்பர் படகு மூலம் ஏரியில் முரளியை தீவிரமாக தேடினர். ரஞ்சிதா, அவரது மகன்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஏரிக்கரையில் சோகத்துடன் கூடியிருந்தனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு நேற்று மதியம் 12 மணியளவில் ஏரியின் சகதியில் சிக்கியிருந்த முரளியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மீன்பிடிக்க சென்றபோது முரளி சகதியில் சிக்கி ஏரியில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. ரஞ்சிதா, அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் முரளியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.