என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    மீன்சுருட்டி அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி பூங்கொடி(வயது 29). இவர்கள் 2 பேரும் கடந்த 1-ந் தேதி சிறுகடம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் உடையார்பாளையம் அருகே வந்தபோது மழை பெய்ததால் கார்த்திக், பூங்கொடியை பஸ்சில் வருமாறு கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். கார்த்திக் வீட்டிற்கு சென்று வெகு நேரமாகியும் பூங்கொடி வீட்டுக்கு வரவில்லை.

    இதையடுத்து அவரை கார்த்திக் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, மாயமான பூங்கொடியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×