என் மலர்tooltip icon

    அரியலூர்

    • செந்துறை பகுதிகளில் உள்ள அனைத்து கிராம கோவில்களுக்கும் திருவிழா முடிந்த பிறகு இறுதியாக இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம்.
    • செந்துறை போலீசார் தீமிதி யின் போது எவ்விதமான அசம்பாவிதங்களும் நடக்காத படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தீ மிதிப்பவர்களை ஒருவர் பின் ஒருவராக வரிசை படுத்தி அனுப்பி வைத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. செந்துறை பகுதிகளில் உள்ள அனைத்து கிராம கோவில்களுக்கும் திருவிழா முடிந்த பிறகு இறுதியாக இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீமிதி திருவிழா நடக்கவில்லை

    இந்த நிலையில் 1 மாத காலம் தாமதமாக கடந்த 13 ம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மகாபாரத கதைகளும் அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று தீ மிதி திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக கோவிலில் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திரவுபதி அம்மன் தீக்குழி முன்பு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து விழாக் குழுவினர் தீக்குழியில் எரிந்து கொண்டிருந்த நெருப்புகளை சமப்படுத்தினர். பின்னர் விழாக் குழுவினர் தீமித்ததனர். அதன் பின்னர் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    செந்துறை போலீசார் தீமிதி யின் போது எவ்விதமான அசம்பாவிதங்களும் நடக்காத படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தீ மிதிப்பவர்களை ஒருவர் பின் ஒருவராக வரிசை படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த திருவிழாவில் செந்துறை தாலுகாவில் உள்ள அனைத்து கிராம மக்கள் மற்றும் வெளியூர் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.

    • தேர்வில் தமிழகத்தில் 5,900 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரியலூர் மாவட்டத்தில் 58 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்
    • மாணவர்களை ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்த கலெக்டர் ரமணசரஸ்வதி, அவர்களுக்கு வழிக்காட்டி கையேடு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    அரியலூர்:

    தேசிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரியலூர் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலைய மாணவர்களை அழைத்து கலெக்டர் ரமணசரஸ்வதி பாராட்டு தெரிவித்தார்.

    2022-23 ம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு கடந்த 5.3.2022 அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது.

    இந்த தேர்வில் தமிழகத்தில் 5,900 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரியலூர் மாவட்டத்தில் 58 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதில், அரியலூர் ஒன்றியத்தில், இலிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையம், அரசு உதவிபெறும் கே ஆர் வி நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் செ.விக்னேஷ், சி.ஜெயக்குமார், ஜெ.வெண்ணிலா, கோ.ஜோதி, க.யாழினி ஆகியோர் தேர்ச்சிப் பெற்றனர்.

    இதையடுத்து, அவர்களை ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்த கலெக்டர் ரமணசரஸ்வதி, அவர்களுக்கு வழிக்காட்டி கையேடு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும் இவர்கள் 9-12 ம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 கல்வித் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சௌந்தராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • தொடர்ந்து சிகிச்சைக்கு செலவான தொகையான ரூ.1,36,361ஐ தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற உரிய ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
    • இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், காப்பீட்டுத்தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி தராததால், அரியலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பழனிவேல் வழக்கு தொடர்ந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை நீதிமன்றத்தில் பணிபுரியும் பணியாளருக்கு உரிய காப்பீட்டுத் தொகையை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்று யுனைடெட் இந்திய காப்பீடு நிறுவனத்துக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    செந்துறையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் கட்டளை இளநிலை பணியாளராக பணிபுரிபவர் பழனிவேல்(50). இவர், தனது மனைவி,மகன் என குடும்ப உறுப்பினர் அனைவருக்கும், யுனைடெட் இந்திய காப்பீடு நிறுவனத்தில் குடும்ப நல காப்பீடு செய்துள்ளார். இந்த நிலையில், இவர் தனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவரின் அறிவுரையுடன் கதிரியக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

    தொடர்ந்து சிகிச்சைக்கு செலவான தொகையான ரூ.1,36,361ஐ தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற உரிய ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், காப்பீட்டுத்தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி தராததால், அரியலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பழனிவேல் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், பழனிவேலுக்கு காப்பீடு தொகையான ரூ.1,36,361ஐ 30 நாள்களுக்குள் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் உரிய சிவில் நீதிமன்றம் மூலம் 6 சதவீத வட்டியுடன் காப்பீடு தொகையை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் தடையின்றி செல்லும் வகையில் வரத்துவாரிகளை முறையாக தூர்வாரவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கயர்லாபாத் ஊராட்சியில் கயர்லாபாத் - மண்டையன்குடிசல் சாலையில் தார் சாலை மற்றும் பாலம் அமைத்தல் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பணியையும், பெரியநாகலூர் ஊராட்சியில், பெரியநாகலூர் - அய்யனார் கோவில் சாலை பலப்படுத்துதல் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பணியையும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், இந்த ஆய்வின் போது சாலைப்பணிகளை முறையாக பராமரிக்கவும், சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் தடையின்றி செல்லும் வகையில் வரத்துவாரிகளை முறையாக தூர்வாரவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவி, குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை 2-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
    • தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம் (வடக்கு), ஆயுதகளம் (தெற்கு), தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது

    அரியலூர்:

    அரியலூர் ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை 2-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, வடவீக்கம், குருவாலப்பர்கோயில், விழப்பள்ளம், பிச்சனூர், வாரியங்காவல், தேவனுர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால்,

    வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி,

    தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம் (வடக்கு), ஆயுதகளம் (தெற்கு), தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை தெரிவித்து உள்ளார்.

    • 45 வயதிற்கு மேற்பட்ட 259900 பேர்களில் இது–வரை 271415 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிம், 277268 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது
    • கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 3 பேருக்கு புதியதாக கொரோனா ஏற்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட 259900 பேர்களில் இதுவரை 271415 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிம், 277268 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 18-45வயதிற்குட்பட்ட 342100 நபர்களில் இதுவரை 349213 நபர்களுக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி 344444 பேருக்கும் போடப்பட்டுள்ளது. 15-18 வயதிற்கு உட்பட்ட 34800 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 35116 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 30807 நபருக்கும் போடப்பட்டுள்ளது. 12-14 வயதிற்கு உட்பட்ட 22100 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 24563 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 17702 நபருக்கும் போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 658900 நபர்களில் 680307 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 670221 இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப் பட்டுள்ளது.

    கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

    இரண்டாம் அலையின் போது அரசு பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.

    எனவே, கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொது இடங்களில் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

    இத்தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • இப்போட்டிகளில் 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும்
    • ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    தமிழ்நாடு முதலமைச்சரால் தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர்சூட்டிய சூலை 18-ம் நாளினையே "தமிழ்நாடு நாள்விழா" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதன்படி 18.7.22 தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் 6.7.2022 புதன்கிழமை அன்று அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இப்போட்டிகளில் 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    போட்டிக்கான தலைப்புகள் - தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைபோர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு.

    இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000 , இரண்டாம் பரிசு ரூ.7,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000 என்ற வகையில் வழங்கப் பெற உள்ளது. போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவர் மருதமுத்து அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
    • எடப்பாடி பழனிசாமி பல்வேறு நெருக்கடியிலும் ஆட்சியை திறம்பட நடத்தி ஐந்து ஆண்டுகள் ஆட்சியை மக்கள் விரும்பும் ஆட்சியாக நடத்தினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவரும், ஒன்றிய (வடக்கு) அ.தி.மு.க. செயலாளரும், அழகபுரம் கூட்டுறவு சங்க தலைவருமான சிலம்பூர் இரா.மருதமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். தன்னுடைய முதல்வர் பதவியை காப்பாற்றுவதற்காக சசிகலாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக முன்மொழிந்தவர் ஆவார்.

    சசிகலா முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு ஓ.பி.எஸ்.ஐ ராஜினாமா செய்ய கூறிய உடன் ராஜினாமா செய்து விட்டு ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தர்மயுத்தம் செய்தார். அதற்கு முன்பாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் தர்மயுத்தம் செய்திருந்தால் இவர் எடுத்த முடிவு நல்லதாக அமைந்திருக்கும்.

    தர்மயுத்தம் செய்து கழகத்தை விட்டு வெளியேறி ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தார். இது கழகத்திற்கு செய்த துரோகம். மீண்டும் கழகம் ஒன்றாக இணைவதற்கு பா.ஜ.க. கேட்டு கொண்டதாலே கழகத்தில் பாதி முடிவெடுக்கும் உரிமையை பெற்றார்.

    கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இவருடைய உழைப்பு, பங்களிப்பு இல்லை. தற்போது தி.மு.க. ஆட்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் எதிர்க்கட்சியான தி.மு.க.வையும், முதல்வரை இவரது மகன் நேரில் சந்தித்து நீங்கள் சிறப்பான ஆட்சியை நடத்துகிறீர்கள் என்று கூறுகிறார். இதனால் ஓ.பி.எஸ்.ஐ ஏற்க மனம் மறுக்கிறது.

    எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் வாய்ப்பு கிடைத்தவுடன் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தி.மு.க., சசிகலா, பா.ஜ.க., ஓ.பி.எஸ். ஆகியோரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியிலும் ஆட்சியை திறம்பட நடத்தி ஐந்து ஆண்டுகள் ஆட்சியை மக்கள் விரும்பும் ஆட்சியாக நடத்தியவர்.

    நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் தமிழகமெங்கும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து கழக வேட்பாளருக்கு பொருளாதார உதவி செய்து வலுவான எதிர்க்கட்சியாக அமைவதற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    தன் குடும்பத்திலிருந்து எவரையும் அரசியலில் பயன்படுத்தாமல் வாரிசு அரசியல் ஏற்படுத்தாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்படுகிறார்.

    இன்று அடிமட்ட தொண்டன் முதல் மேல் மட்டத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் வரை பெரும்பான்மையாக 99 சதவீத கழகத்தினர் ஏற்றுக் கொள்ளக்கூடிய வலுவான ஆளுமை மிக்க திறம்பட செயல்படக்கூடிய, அனைவரையும் அரவணைக்க கூடிய ஒரு தலைவராக நம் கழகத்தில் உருவெடுத்துள்ளார்.

    மக்கள் பேரன்பை பெற்றுள்ள இவரே அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றால் கழகம் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்களுக்காக இயங்கும், மக்கள் பணி செய்யும் என்கின்ற ஜெயலலிதாவின் வேதவாக்கை நம்மால் நிறைவேற்ற முடியும்.

    எடப்பாடியாரை கழகத்தின் பொதுச்செயலாளராக, பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி ஜெயலலிதாவின் ஆட்சி அமைப்போம், கழகத்தை காப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாக கவுன்சிலர்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர்
    • ஏலம் எடுத்த குத்தகைக்காரர்கள் இதுவரை பணம் கட்டவில்லை, பணம் வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, வாரச்சந்தைக்கும் இதே நிலை தான் நீடிக்கிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் சாதாரன கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுமதிசிவகுமார் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் சித்ரா (பொறுப்பு) வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏரி, குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவை மற்றும் வசதிகள் நிறைவேற்றுவது குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மான அறிக்கையினை வாசித்தார்.

    கூட்டத்தில் தி.மு.க. 9, அ.தி.மு.க. 4, பா.ம.க. 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, ம.தி.மு.க. 1, சுயேச்சை 1 உள்ளிட்ட 21 நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு சென்ற ஆண்டில் 40-க்கும் மேற்பட்ட குத்தகைக்காரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய ரூ.1 கோடி குத்தகை பணம் பாக்கி இருப்பதாகவும், அதனை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாக புகார்கள் கூறப்பட்டன.

    மேலும் பா.ம.க. 2-வது வார்டு கவுன்சிலர் ரெங்கநாதன் பேசுகையில், ஜெயங்கொண்டம் வார சந்தையில் தனி நபர்கள் 50 ஆயிரம், 1 லட்சம் என கடைக்கு அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு உள்வாடகைக்கு விடுவதாகவும்,

    இது சம்பந்தமாக நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு நகராட்சியில் பணிபுரியும் அதிகரிகள் துணை போவதாக பா.ம.க. கவுன்சிலர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை என தெரிவித்தார். சென்ற ஆண்டில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை நகராட்சி மூலமாக ஏலம் விடப்பட்டது.

    ஏலம் எடுத்த குத்தகைக்காரர்கள் இதுவரை பணம் கட்டவில்லை, பணம் வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, வாரச்சந்தைக்கும் இதே நிலை தான் நீடிக்கிறது.

    பெரும்பலான கவுன்சிலர்கள் கூறும்போது, நகரில் அதிகாலையிலேயே தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் வார்டுகளில் எந்த பணிகள் செய்தாலும் வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே பணி செய்ய வேண்டுமென கவுன்சிலர்கள் மன்றத்திற்கு கோரிக்கை வைத்தனர். கவுன்சிலர்கள் இல்லாதபோது அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி பேசினர்.

    மேற்கண்ட கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறியதால் அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அடுத்த முறை நடைபெறும் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டத்தில் அதிகாரிகள் முறைப்படி செயல்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று கூட்டம் நிறைவுற்றது.

    • அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
    • முக்கிய பிரச்சனைகள் உள்ள கிராமமாக தேர்ந்தெடுத்து அதனுடைய முக்கிய அடிப்படைகளை நிறைவேற்றி வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய வளாக கூட்டரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ஆண்டிமடம் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேன்மொழி வைத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மன்ற தீர்மான நகலை கணக்கர் பாக்யராஜ் வாசித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வரவு, செலவு கணக்கு குறித்தும், எங்களுடைய ஊராட்சிகளில் வரும்பணிகளை எங்களுக்கு தராமல் அவர்களுக்கு தேவையான பஞ்சாயத்துகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எங்களிடம் தகவல் தெரிவிக்காமல் அவர்களே முடிவு செய்து வருவதாக கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இது மாவட்ட ஆட்சியர் உடைய தலைமையில் கிராமத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகள் உள்ள கிராமமாக தேர்ந்தெடுத்து அதனுடைய முக்கிய அடிப்படைகளை நிறைவேற்றி வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

    இதனால் கூட்டத்தில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதம் நடத்தினர். கூட்டத்தில் அனைத்து கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) அழகானந்தம் நன்றி கூறினார்.

    • ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் போலீசாருக்கான குடும்ப நல்லுறவு விழா நடைபெற்றது
    • கணவன் மனைவி இருவரும் வேலையில் இருப்பவர்கள் எப்படி? ஒற்றுமையாக இருந்து குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் காவலர்களுக்கான நல்லுறவு குடும்ப விழா நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லட்சுமி முன்னிலை வகித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் குடும்ப ஒற்றுமை, காவலர்களின் தனிப்பட்ட பிரச்சனை, வேலை சம்பந்தமான மன அழுத்த பிரச்சனை, குடியிருப்புகளில் போதுமான வசதிகள் கிடைக்கிறதா? காவலர்களின் குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவைகள் பற்றி காவலர்கள் குடும்பங்கள் ஒன்றிணைந்து நல்லுறவுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் போலீசாரிடம் குறைகள் பற்றியும், கணவன் மனைவி நல்லுறவு பற்றியும், குடும்ப ஒற்றுமை பற்றியும் நல்ல நல்ல கருத்துக்கள் பற்றியும் காவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் காவலர்களுக்கு ஏதும் குறை ஏதும் இருந்தால் தெரிவிக்க வேண்டும் எனவும், சிறுசிறு உதாரணங்களைக் கூறி, கணவன் மனைவி இருவரும் வேலையில் இருப்பவர்கள் எப்படி? ஒற்றுமையாக இருந்து குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    ஆண் பெண் இன பாகுபாடின்றி இருவரும் ஒற்றுமையாக வேலைகளை பகிர்ந்து குடும்பத்தை கவனிக்க வேண்டும் எனவும் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் விளக்கம் அளித்து பேசினார். இதில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலைய எழுத்தர் புண்ணியகோடி, சிஐடி பிரிவு ரமேஷ், முதல் நிலை காவலர்கள் பாஸ்கர், விஜயகுமார் மற்றும் ஜெயங்கொண்டம் காவலர் குடியிருப்பில் உள்ள அனைத்து நிலை போலீசார்களும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கணவன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா களையிழந்து விட்டதால் அரங்குகள் அமைத்துள்ள உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்
    • கண்காட்சிக்கு வரும் நபர்களுக்கு நடமாடும் ஏடிஎம் மையம், சிறுதானிய உணவு அரங்கு உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளன

    அரியலூர்:

    கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மக்கள், திருச்சி, சென்னை, தஞ்சாவூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு சென்று தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

    இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழர் பண்பாட்டுப் பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் சார்பில் அரியலூரில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அப்போதைய உதவி கலெக்டர் சந்திரேசகர சாகமூரி முயற்சியால், கலெக்டர் சரவணவேல்ராஜ் ஒத்துழைப்போடு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    இதனால், இந்தக் கண்காட்சி அரியலூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றறது. அப்போது மட்டும் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகின.

    இதைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சி நடைபெறவில்லை.

    தற்போது கொரோனா தொற்று குறைறய தொடங்கியதையடுத்து, 6-ம் ஆண்டு புத்தகக் கண்காட்சி கடந்த 24-ந்தேதி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறறது. ஆனால், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் மிக, மிக குறைவாக உள்ளது.

    இங்கு 83 அரங்குகளில், 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், கண்காட்சிக்கு வரும் நபர்களுக்கு நடமாடும் ஏடிஎம் மையம், சிறுதானிய உணவு அரங்கு உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளன.

    கண்காட்சியில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றறன. ஆனால், 5 நாள்களில் இதுவரை புத்தகக் கண்காட்சியைக் காண வந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கூட தாண்டவில்லை என புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து புத்தக விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், புத்தகக் கண்காட்சியில், நிகழாண்டு மக்களின் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. முதல் நாளில் புத்தகத்தின் விலை என்னவோ, அந்த விலைக்கே புத்தகம் விற்கப்பட்டது.

    கடந்த 5 நாள்களாக புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், தற்போது ஒரு புத்தகம் 50 சதவீதம் தள்ளுபடியில் பாதி விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரங்கிற்கான நாள் வாடகை, தங்கும் ஊழியர்களுக்கான செலவுக்கு கூட புத்தகங்கள் விற்பனையாகாமல் உள்ளது என்றார்.

    எனவே, எஞ்சியுள்ள நாட்களில் புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய, புத்தகக் காட்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு, விளம்பரம் செய்வது அவசியம் என புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×