என் மலர்
உள்ளூர் செய்திகள்

செந்துறை திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- செந்துறை பகுதிகளில் உள்ள அனைத்து கிராம கோவில்களுக்கும் திருவிழா முடிந்த பிறகு இறுதியாக இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம்.
- செந்துறை போலீசார் தீமிதி யின் போது எவ்விதமான அசம்பாவிதங்களும் நடக்காத படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தீ மிதிப்பவர்களை ஒருவர் பின் ஒருவராக வரிசை படுத்தி அனுப்பி வைத்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. செந்துறை பகுதிகளில் உள்ள அனைத்து கிராம கோவில்களுக்கும் திருவிழா முடிந்த பிறகு இறுதியாக இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீமிதி திருவிழா நடக்கவில்லை
இந்த நிலையில் 1 மாத காலம் தாமதமாக கடந்த 13 ம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மகாபாரத கதைகளும் அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று தீ மிதி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திரவுபதி அம்மன் தீக்குழி முன்பு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து விழாக் குழுவினர் தீக்குழியில் எரிந்து கொண்டிருந்த நெருப்புகளை சமப்படுத்தினர். பின்னர் விழாக் குழுவினர் தீமித்ததனர். அதன் பின்னர் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
செந்துறை போலீசார் தீமிதி யின் போது எவ்விதமான அசம்பாவிதங்களும் நடக்காத படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தீ மிதிப்பவர்களை ஒருவர் பின் ஒருவராக வரிசை படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த திருவிழாவில் செந்துறை தாலுகாவில் உள்ள அனைத்து கிராம மக்கள் மற்றும் வெளியூர் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.






