என் மலர்
அரியலூர்
- சிவசேனாவை அழித்தது போல் அ.தி.மு.க.வையும் பா.ஜ.க. அழிக்கிறது என கே.எஸ்.அழகிரி குற்றம் சாற்றியுள்ளார்.
- காந்தி சிலை திறப்பு விழா நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் பஸ் நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட காந்தி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட வளர்ச்சி குழு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் வரவேற்றார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு காந்தி சிலையை திறந்து வைத்து, நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி செயல்பாடு இல்லை. அவர்களுக்குள் உள்ள பிரச்சினைக்கு காரணமே பா.ஜ.க. தான். ஏற்கனவே துணை முதல்-அமைச்சர் பதவியை ஒப்புக் கொண்டதற்கு, பிரதமர் கூறியதால்தான் ஒப்புக்கொண்டேன் என்பதை ஓ.பன்னீர்செல்வம் கூறியதை நினைவுபடுத்தினார்.
இப்பேதும் அவர் பிரதமரை சந்திக்கச் செல்கிறார். அதேபோல் பழனிசாமியும் பிரதமருடன் தொடர்பில் உள்ளார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகிய 3 பேரையுமே பா.ஜ.க. பொம்மையாக கையால்கிறது. இந்தியா முழுவதுமே தனது கூட்டணி கட்சிகளை பா.ஜ.க. அப்படிதான் சிதைத்தார்கள். சிவசேனாவை அழித்தது போல் அ.தி.மு.க.வையும் பா.ஜ.க. அழிக்கிறது என்றார். முடிவில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா நன்றி கூறினார்."
- ரூ. 14.35 கோடியில் மருதையாற்றில் பாலம் கட்டும் பணிக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்
- பிரதான சாலையி–லிருந்து 8 கி.மீ தொலைவு உள்ளது.
அரியலூர்:
அரியலூர் ஊராட்சி ஒன்றியம்,ஆதனூர்-–மழவரா–யநல்லூர் சாலை–யில் நெடுஞ்சாலை–த்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மருதையாற்றின் மேல் பாலம் கட்டும் பணிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ–சங்கர் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அரியலூர்சட்ட–மன்ற உறுப்பினர் கு.சின்ன–ப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றி––யம், ஆதனூர்மற்றும் மழவ–ரா–யநல்லூர் இடையே மருதையாற்றில் வெள்ளப்பெருக்கின் போது பொதுமக்கள் பயன்பாட்டி–ற்கு பெரிதும் இடையூராக சாலை போக்குவரத்து உள்ளதாலும் ஓரியூர்சாலை வழியாக ஆதனூர்செல்ல–வதற்கு பிரதான சாலையி–லிருந்து 8 கி.மீ தொலைவு உள்ளது.
பாலம் கட்டும் பணி முடிவடைந்தால் 3கிமீ பிர–தான சாலையை அடைய முடியும்என பொது–மக்களின் கோரி–க்கை–யினை ஏற்று தமி–ழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஆத–னூர்-மழவராயநல்லூர் சாலையில் நபார்டுமற்றும் கிராம சாலைகள் திட்ட–த்தின் கீழ் 0.6 கி.மீ-ல் நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுமானப் பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.
பணிகள் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டு பொதுமக்கள் தற்போது சாலையினை பயன்படுத்தும் விதம் குறித்து கேட்டறிந்து பாலத்தின் நீளம் மற்றும் அகலம் குறித்து அலுவல–ர்களிடம் கேட்டறிந்தார். இப்பாலத்தில் 18 மீ நீளமுள்ள 10 கண்கள் அமைக்கப்பட உள்ளது என துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பாலப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்கு–வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தினார்.
- செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்
அரியலூர்:
அரியலூர் நகராட்சி ஒற்றுமைத் திடலில்44வது சர்வதேச செஸ்ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி–யினை மாவட்டகலெக்டர் ரமண சரஸ்வதி கொடிய–சைத்து துவக்கி வைத்தார்.
சர்வதேச அளவிலான 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் 28.7.2022 முதல் 10.8.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து மாவட்டங்கள் தோறும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் அரியலூர் ஒற்றுமைத் திடலில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு பேரணி அரியலூர்ஒற்றுமை திடலில் துவங்கி சத்திரம் தேரடி வழியாக அண்ணா–சிலையை சென்றடைந்து நிறைவடைந்தது. இப்பே–ரணி–யில் பள்ளி மாணவ, மாணவிகள்,விளை–யாட்டு வீரர்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்ப–ட்டோர்க–லந்து கொண்ட–னர். இப்பேரணி–யில் கலந்து–கொண்டோர் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று பொது மக்களிடையே செஸ் போட்டிகள்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி–னர்.
மேலும் அரிய–லூர்மா–வட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில், வட்டார அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதுடன் இரு சக்கர வாகன பேரணி, மாரத்தான், மஞ்சைப்பை விநியோகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மூலம் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்தி;ன் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இப்பேரணியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், வருவாய் கோட்டா–ட்சியர் குமார், வட்டாட்சியர் குமரைய்யா, ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நிஷாந்தினி அறையிலிருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது.
- நிஷாந்தினி தேர்வு பயத்தில் ஒருவித மன இறுக்கத்துக்கு ஆளாகி இருந்ததை யூகிக்க முடிந்தது.
அரியலூர்:
மருத்துவக் கல்வி பயில மத்திய அரசு கொண்டு வந்த நீட் நுழைவுத் தேர்வுக்கு பயந்து மாணவ-மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர் கதையாகி விட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் அனிதா என்ற மாணவி நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்தார். அவரின் தற்கொலை அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாளை நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கு பயந்து அரியலூரில் மீண்டும் ஒரு மாணவி நேற்று நள்ளிரவு தற்கொலை செய்தார்.
அரியலூர் ரெயில் நிலையம் அருகே வசித்து வருபவர் நடராஜன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா. இந்த தம்பதியருக்கு நிஷாந்தினி (வயது 18) என்ற மகளும், நிவாஸ் (16) என்ற மகனும் உள்ளனர்.
இதில் நிஷாந்தினி அருகிலுள்ள ஒரு தனியார் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்ச்சி பெற்றார். பொதுத்தேர்வில் 600 க்கு 539 மதிப்பெண்கள் பெற்றார்.
சின்ன வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் மிதந்தார். இதை அடுத்து கடந்த 2 மாதமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நிஷாந்தினி திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு வெகு நேரமாக தனி அறையில் உட்கார்ந்து படித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரது தாயார் உமா மகளிடம் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கு. நாளை படித்துக் கொள்ளலாம் என கூறினார். அதற்கு நிஷாந்தினி தாயாரிடம் எப்படியாவது நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆக வேண்டும். நீங்கள் போய் படுத்து தூங்குங்கள். நான் சற்று நேரம் கூட படித்து விட்டு தூங்குகிறேன் என கூறியிருக்கிறார்.
இதை அடுத்து தாயாரும் அவரது சகோதரரும் பக்கத்து அறைக்கு தூங்குவதற்கு சென்றுவிட்டனர். பின்னர் இன்று அதிகாலை 4 மணி அளவில் உமா எழுந்து பார்த்தபோது நிஷாந்தினி படித்துக் கொண்டிருந்த அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது.
பின்னர் சமையலறையில் சென்று பார்த்தபோது அங்கு நிஷாந்தினி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அலறி துடித்தார். தாயும், தம்பியும் தூங்கியவுடன் நிஷாந்தினி தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.
இது பற்றி தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இறந்த மாணவியின் உடலை மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நிஷாந்தினி அறையை சோதனை செய்தனர். அப்போது ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் சின்ன வயதில் இருந்தே டாக்டருக்கு படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்காக தீவிர பயிற்சியும் எடுத்தேன். ஒரு வேளை தேர்வில் தோற்றுவிட்டால் கனவு பொய்த்து விடும் என்ற பயத்தில் இந்த முடிவை எடுக்கிறேன் என எழுதப்பட்டிருந்தது. கடிதம் எழுதி வைத்துவிட்டு நிஷாந்தினி சமையலறையில் போய் தூக்கு போட்டு உள்ளார் என்பது தெரியவருகிறது.
இது பற்றி அவரது தாயார் உமா கூறும்போது, நன்றாக படிப்பாள். ஏன் இந்த முடிவை எடுத்தாள் என தெரியவில்லை. இயல்பாக நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்தார். ஹால் டிக்கெட் வாங்கி வந்தார். ஆனால் நேற்று தேர்வு பயத்தில் ஒருவித மன இறுக்கத்துக்கு ஆளாகி இருந்ததை யூகிக்க முடிந்தது. ஆகவே தான் நானும் இரவு வெகு நேரம் படித்துக்கொண்டிருந்த அவளிடம் படுத்து தூங்கு என்று கூறினேன். அவள் தூங்கி விடுவாள் என நினைத்தேன். ஆனால் நிரந்தரமாக தூங்கி விட்டாள் என கண்ணீர் மல்க கூறினார். நீட் தேர்வுக்கு பயந்து அரியலூரில் மீண்டும் ஒரு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குரூப்-4 போட்டி தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
- நேரில் வருகை புரிந்து பயன்பெறலாம்
அரியலூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கான போட்டி தேர்விற்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது அதற்கான இலவச மாதிரி தேர்வு நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. பதிவு செய்த இளைஞர்கள் மட்டுமே இலவச மாதிரி தேர்வினை எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் நேரில் வருகை புரிந்து பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."
- கங்கைகொண்டசோழபுரத்தில் தமிழக அரசு சார்பில் ஆடி திருவாதிரை விழா நடைபெற உள்ளது.
- முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடித்திருவாதிரை விழா-2022 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவங்கர் தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில், கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:-
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவியர் மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆவார். அரியலூர் மாவட்டம் முதல் பெரம்பலூர் மாவட்டம் வரை நகரங்கள், கிராமங்களை உருவாக்கிய மாமன்னர் மற்றும் இந்தியாவை தாண்டி அயல் நாடுகளையும் வென்று தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்தினார். ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன் பல்வேறு நாடுகளை வென்று மிகவும் சிறப்புடன் ஆட்சி செய்தார்.
தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டு தோறும் அரசு சார்பில் சதயவிழா கொண்டாடுவதைப் போல நம் மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கும் அரசு விழா கொண்டாட வேண்டும் என்பது இப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் நீண்ட காலக் கோரிக்கையாகும். பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவான ஆடித் திருவாதிரை விழாவினை அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளார். சென்ற ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக இவ்விழா கொண்டாடப்படவில்லை.
இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வெகு விமரிசையாக வருகிற 26.07.2022 அன்று கொண்டாடப்படவுள்ளது. அதன் அடிப்படையில் ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துறை சார்ந்து ஒதுக்கப்பட்டுள்ள விழாத் தொடர்பாக பல்வேறு பணிகளை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி பொதுமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், நமது மாமன்னர் ராஜேந்திர சோழனின் சிறப்பை வருங்கால சந்ததியினர் அறிந்து பயன்பெறும் வகையிலும் கங்கைகொண்ட சோழபுரம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சாத்தனூர் கல்மரம், தொல்லியல் ஆய்வகம் போன்ற பல்வேறு சுற்றுலா தளங்களை பிரபலப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்வதன் மூலம் வரும் ஆண்டுகளில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவிற்கு தொடர்ந்து வருவதற்கு வாய்ப்பாக அமையும்.
எனவே, கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மாவட்ட நிலை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை அனைவருடனும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், உதவி சுற்றுலா அலுவலர் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- மாவட்ட செயலாளர் முன்னிலையில் நடந்தது
அரியலூர்:
அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக சார்பில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து அனைத்து வார்டு வாரியாக பூத் அமைத்தல், ஆகஸ்ட் 25-ந்தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை சிறப்பாக கொண்டுவது, ஏழை, எளிய மக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, செப்டம்பர் 14-ந்தேதி தே.மு.தி.க. 18 ஆம் தொடக்க விழாவையும் சிறப்பாக கொண்டாடுவது, அனைத்து கிளைக் கழகங்களிலும், வார்டு வாரியாக அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் ராமஜெயவேல் முன்னிலை வகித்தார். பொறியாளர் அணிச் செயலர் ராஜா பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், பொதுக் குழு உறுப்பினர் ஜேக்கப், மாவட்ட துணைச் செயலர் தெய்வசிகாமணி, ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி, நகரச் செயலர் தாமஸ் ஏசுதாஸ், அரியலூர் ஒன்றியச் செயலர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
- சின்ன மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்த மருமகனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
- ரூ.36 ஆயிரமும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த மணகெதி காலனித் தெருவைச் சேர்ந்தவர் தங்கையன் மகன் தன்ராஜ் (வயது 30). இவர் கடந்த 14.09.2019 அன்று சின்னநாகலூரில் வசிக்கும் தனது சின்ன மாமியார் ஜெயந்தியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வெண்மான்கொண்டான் தைலமரக்காட்டில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், ெஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து தன்ராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், ஜெயந்தியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், கடத்திச் சென்றதற்காக 10 ஆண்டுகளும், பெண் தாக்கியதற்காக 3 ஆண்டுகளும் என 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இதனை ஏக காலத்தில் தன்ராஜ் அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் ரூ.36 ஆயிரமும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து தன்ராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- அ.தி.மு.க.வில் சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
- அ.ம.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
அரியலூர்:
அரியலூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் அலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது அ.தி.மு.க.வில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்கள் குறித்து அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளிவந்துள்ளது. அவர் உண்மையைத்தான் பேசியுள்ளார். ஆனால், யாருக்கோ பயந்து கொண்டு அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
இதே போல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக நான் பேசியபோது, என் மீது வழக்கு தொடுக்கப்படும் என ஜெயகுமார் கூறியுள்ளார். அந்த வழக்கை சந்திக்க நான் தயார். அப்போதுதான் ஆடியோவில் உள்ள உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, அ.தி.மு.க.வில் நடைபெறக்கூடிய அனைத்து சம்பவங்களும் தொண்டர்களுக்கு தெரியவரும். அ.தி.மு.க. பொது குழு எவ்வாறு நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வில் தற்போது சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சாதிரீதியாக பிரித்து, அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிட பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது. துரோகம் செய்தவர்கள் துரோகத்தால் அழிந்து போவார்கள். விரைவில், துரோகிகளிடமிருந்து அ.தி.மு.க. மீட்கப்படும் என்றார்.
கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் துரை.மணிவேல் தலைமை வகித்தார். அ.ம.மு.க. துணைச் செயலர் ரங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்டச் செயலர் ராஜேஷ், பெரம்பலூர் மாவட்டச் செயலர் கார்த்திக்கேயன், தா.பழூர் ஒன்றியச் செயலர் புகழேந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
- மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.
- உலக மக்கள்தொகை தின பேரணி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திலிருந்து அண்ணா சிலை, கடைவீதி, நான்கு ரோடு, மதனத்தூர் ரோடு மற்றும் ஒத்த தெரு வழியாக பேருந்து நிலையத்தில் முடிவுற்றது
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மீன்சுருட்டி சமுதாய சுகாதார மையத்தின் சார்பில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் பரப்ரஹ்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் முருகானந்தம், லயன்ஸ் மாவட்ட தலைவர்கள் ரமேஷ்குமார், சி.பி.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் வினோத்குமார்ஜெயின், செயலர் வெங்கன்னபாபு, பொருளாளர் உதயகுமார், வினய் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன், ராஜ்குமார், பிரவீன்காந்தி, கிராம செவிலியர்கள், அன்னை தெரசா நர்சிங் காலேஜ் லியோ சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி, செயலாளர் கௌரி,
பொருளாளர் ஆர்த்தி மற்றும் மாணவிகள், அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பேரணியில் கலந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பேரணி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திலிருந்து அண்ணா சிலை, கடைவீதி, நான்கு ரோடு, மதனத்தூர் ரோடு மற்றும் ஒத்த தெரு வழியாக பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
- லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
- 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்துள்ள வெத்தியார்வெட்டு காலனி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் வீரராகவன் (வயது 18). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி வீரராகவன் ஜெயங்கொண்டத்தில் இருந்து வீட்டிற்கு தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நெல்லிதோப்பு கிராமத்தின் மேம்பாலம் வழியாக சென்றபோது மணல் ஏற்றி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் வீரராகவன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரும் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வீரராகவன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமானூரில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது
- பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேல ராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம், அரண்மனை குறிச்சி, சாத்தமங்களம் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என திருமானூர் மின்உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.






