search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் உலக மக்கள் தொகை தினவிழிப்புணர்வு பேரணி
    X

    ஜெயங்கொண்டத்தில் உலக மக்கள் தொகை தினவிழிப்புணர்வு பேரணி

    • மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.
    • உலக மக்கள்தொகை தின பேரணி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திலிருந்து அண்ணா சிலை, கடைவீதி, நான்கு ரோடு, மதனத்தூர் ரோடு மற்றும் ஒத்த தெரு வழியாக பேருந்து நிலையத்தில் முடிவுற்றது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மீன்சுருட்டி சமுதாய சுகாதார மையத்தின் சார்பில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் பரப்ரஹ்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சிக்கு துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் முருகானந்தம், லயன்ஸ் மாவட்ட தலைவர்கள் ரமேஷ்குமார், சி.பி.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.

    ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் வினோத்குமார்ஜெயின், செயலர் வெங்கன்னபாபு, பொருளாளர் உதயகுமார், வினய் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன், ராஜ்குமார், பிரவீன்காந்தி, கிராம செவிலியர்கள், அன்னை தெரசா நர்சிங் காலேஜ் லியோ சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி, செயலாளர் கௌரி,

    பொருளாளர் ஆர்த்தி மற்றும் மாணவிகள், அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பேரணியில் கலந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பேரணி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திலிருந்து அண்ணா சிலை, கடைவீதி, நான்கு ரோடு, மதனத்தூர் ரோடு மற்றும் ஒத்த தெரு வழியாக பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×