என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தே.மு.தி.க. உட்கட்சி  தேர்தல் ஆலோசனை கூட்டம்
    X

    தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

    • தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர் முன்னிலையில் நடந்தது

    அரியலூர்:

    அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக சார்பில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    தொடர்ந்து அனைத்து வார்டு வாரியாக பூத் அமைத்தல், ஆகஸ்ட் 25-ந்தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை சிறப்பாக கொண்டுவது, ஏழை, எளிய மக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, செப்டம்பர் 14-ந்தேதி தே.மு.தி.க. 18 ஆம் தொடக்க விழாவையும் சிறப்பாக கொண்டாடுவது, அனைத்து கிளைக் கழகங்களிலும், வார்டு வாரியாக அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் ராமஜெயவேல் முன்னிலை வகித்தார். பொறியாளர் அணிச் செயலர் ராஜா பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், பொதுக் குழு உறுப்பினர் ஜேக்கப், மாவட்ட துணைச் செயலர் தெய்வசிகாமணி, ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி, நகரச் செயலர் தாமஸ் ஏசுதாஸ், அரியலூர் ஒன்றியச் செயலர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

    Next Story
    ×