என் மலர்
உள்ளூர் செய்திகள்

சின்ன மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்த மருமகனுக்கு 13 ஆண்டுகள் சிறை
- சின்ன மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்த மருமகனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
- ரூ.36 ஆயிரமும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த மணகெதி காலனித் தெருவைச் சேர்ந்தவர் தங்கையன் மகன் தன்ராஜ் (வயது 30). இவர் கடந்த 14.09.2019 அன்று சின்னநாகலூரில் வசிக்கும் தனது சின்ன மாமியார் ஜெயந்தியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வெண்மான்கொண்டான் தைலமரக்காட்டில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், ெஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து தன்ராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், ஜெயந்தியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், கடத்திச் சென்றதற்காக 10 ஆண்டுகளும், பெண் தாக்கியதற்காக 3 ஆண்டுகளும் என 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இதனை ஏக காலத்தில் தன்ராஜ் அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் ரூ.36 ஆயிரமும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து தன்ராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






