search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வில் சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது- டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
    X

    அ.தி.மு.க.வில் சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது- டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

    • அ.தி.மு.க.வில் சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
    • அ.ம.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

    அரியலூர்:

    அரியலூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் அலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது அ.தி.மு.க.வில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்கள் குறித்து அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளிவந்துள்ளது. அவர் உண்மையைத்தான் பேசியுள்ளார். ஆனால், யாருக்கோ பயந்து கொண்டு அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

    இதே போல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக நான் பேசியபோது, என் மீது வழக்கு தொடுக்கப்படும் என ஜெயகுமார் கூறியுள்ளார். அந்த வழக்கை சந்திக்க நான் தயார். அப்போதுதான் ஆடியோவில் உள்ள உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, அ.தி.மு.க.வில் நடைபெறக்கூடிய அனைத்து சம்பவங்களும் தொண்டர்களுக்கு தெரியவரும். அ.தி.மு.க. பொது குழு எவ்வாறு நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வில் தற்போது சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சாதிரீதியாக பிரித்து, அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிட பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது. துரோகம் செய்தவர்கள் துரோகத்தால் அழிந்து போவார்கள். விரைவில், துரோகிகளிடமிருந்து அ.தி.மு.க. மீட்கப்படும் என்றார்.

    கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் துரை.மணிவேல் தலைமை வகித்தார். அ.ம.மு.க. துணைச் செயலர் ரங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்டச் செயலர் ராஜேஷ், பெரம்பலூர் மாவட்டச் செயலர் கார்த்திக்கேயன், தா.பழூர் ஒன்றியச் செயலர் புகழேந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×