என் மலர்tooltip icon

    அரியலூர்

    • வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது
    • சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

    அரியலூர்:

    அரியலூர் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 23ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    அரியலூர் அடுத்த கல்லமேடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் அஜித்(வயது19). இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தில் அஜித்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்ற நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் மாணவியை கடத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், குழந்தை திருமண வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இதனை ஏக காலதத்திற்கு அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

    • கோர்ட் தீர்ப்பை வரவேற்று பொதுமக்கள் கொண்டாடினர்
    • டாஸ்மாக்கடை திறக்க தடை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரிய மணல் கிராமத்தில் புதிதாக மதுபான கடை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் புதிய மதுபான கடைகள் திறக்க கூடாது என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    இதனை அடுத்து மதுபான கடை திறப்பது அவ்வப்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடையை திறந்து விற்பனையை துவங்கினர். இதனை அறிந்த பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு பாக்ஸ் மது பாட்டில்களை வெளியில் எடுத்து வைத்து கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் பாலு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் மதுபான கடையை திறக்க கூடாது என உயர் நீதிமன்றம் அதிரடி தடை விதித்தது. உயர் நீதிமன்றம் தடை விதித்தது தொடர்ந்து பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    கோர்ட் தீர்ப்பை வரவேற்று பா.ம.க. மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகன் வேளாங்கண்ணி (வயது 25). இவருடைய மனைவி சுகன்யா. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக வேளாங்கண்ணிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பேய் பிடித்து இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறவே அவரை பூசாரியிடம் அழைத்து சென்று மந்திரிக்கவும் செய்துள்ளனர். இந்தநிலையில் வயலில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு வேளாங்கண்ணி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது
    • தா.பழூரில் இன்று நடக்கிறது.

    அரியலூர்

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி. கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தின் தொலை தூரத்தில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 5-ம் கட்டமாக தா.பழூர் குறுவட்டத்திற்கு தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்றும் (வியாழக்கிழமை), கீழப்பழுவூர் குறுவட்டத்திற்கு கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைப்பெறும். இம்முகாமில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். அந்த சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5, இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது"

    • தற்காலிக பட்டாசு சில்லறை வணிகத்திற்கான உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • தீபாவளி பண்டிகையையொட்டி

    அரியலூர்

    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் அரியலூர் மாவட்டங்களில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்து கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி உரிமத்தினை பெறுவதற்கு தங்களது விண்ணப்பத்தினை வருகிற 30-ந்தேதிக்குள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலமாக கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 ச.மீ. முதல் 25 ச.மீ. வரை உள்ளடக்கியதாகவும், புலத்தினை குறிக்கும் புல வரைபடத்தில் சாலை வசதி, சுற்றுப்புற தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டு காட்டும் புல வரைபடம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் எனில் உரிமையாளர் வீட்டு வரி செலுத்திய அசல் ரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதம், உரிமத்திற்கான கட்டணம் ரூ.500 அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலுத்து சீட்டு, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள வண்ண புகைப்படம், இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் கார்டு/குடும்ப அட்டை /வாக்காளர் அடையாள அட்டை) ஆகிய வழிமுறைகளை கடைபிடித்து விண்ணப்பிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் வெடிபொருள் விதிகள் 2008-ன் நிபந்தனைகளை கடைபிடிக்காத விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், மாவட்டங்களில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கஞ்சா விற்ற காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தில் காய்கறி வியாபாரம் செய்து வரும் பூண்டு செல்வம் என்பவர் தனது வீட்டில் கஞ்சாவை மறைமுகமாக விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பூண்டு செல்வத்தை கையும், களவுமாக கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 2 கிலோ 400 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். விசாரணையில் இவர் கும்பகோணத்தில் இருந்து காய்கறி ஏற்றி வரும் பொழுது கஞ்சாவை வாங்கி வந்து சிறு, சிறு பொட்டலங்களாக போட்டு மருதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வாலிபர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உக்கிர மகா காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா நடைபெற்றது.
    • கடந்த 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிக்கருப்பூர் தெற்கு தெருவில் அமைந்துள்ள உக்கிர மகாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் காளியம்மன் திருநடனம் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கோவில் திருப்பணி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, திருநடன திருவிழா கடந்த 12-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 13-ந் தேதி இரவு துர்க்கை அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று உக்கிர மகாகாளி அம்மன் திருநடன உற்சவம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கண்டு களித்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்."

    • அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழந்தார்.
    • பணியில் இருந்த போது ஏற்பட்ட சோகம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் வழியாக குணமங்கலம் வரை செல்லக்கூடிய அரசு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை அரியலூர் மாவட்டம் பெரிய தத்தூர் கிராமத்தைச் சார்ந்த கனகசபை மகன் புருஷோத்தமன் (வயது 58) என்பவர் இயக்கியுள்ளார்.

    பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அப்பொழுது ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர் நகர் பேருந்தும் நிறுத்தம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை இயக்க முற்பட்ட பொழுது திடீரென்று ஓட்டுநர் புருஷோத்தமனுக்கு நெஞ்சு வலி ஏற்படவே அதே இடத்தில் துடி துடித்து மயங்கி விழுந்துள்ளார்.

    இதனை பார்த்த நடத்துனர் மற்றும் பேருந்து பயணிகள் அவரை மீட்டு அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    உடனடியாக இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பேருந்து ஓட்டுனர் பணியில் இருக்கும் போது மாரடைப்பு வந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

    • ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கக்கோரி

    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலை அருகே ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தன்சிங் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த தொழிலாளர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், உள்ளாட்சித்துறை, மருத்துவத்துறை, கூட்டுறவு, டாஸ்மாக், பொதுத்துறை என அனைத்து துறைகளிலும் நிரந்தரப்படுத்தாத தொழிலாளர் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட கட்டண உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களில் நிரந்தர பணியிடங்கள் நீண்ட காலமாக காண்ட்ராக்ட் மற்றும் அவுட்சோர்சிங் முறை உள்ளது. இதனை ஒழிக்க வேண்டும். போக்குவரத்து, நுகர்பொருள் வாணிபக்கழகம், மின்வாரியம், ஆவின் என அனைத்து அரசு நிறுவனங்களையும் தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர்."

    • ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டனர்.
    • போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் சூரியமணல் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த பா.ம.க. முன்னாள் மாநில துணை பொது செயலாளர் திருமாவளவன் தலைமையில், நகர செயலாளர் பரசுராமன் உள்ளிட்ட பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கடையிலிருந்து மதுபாட்டில்களை வெளியில் கொண்டு வந்து வைத்து கடையை பூட்டினர். இதனால் அதிகாரிகளுக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. முன்னாள் மாநில துணை பொதுசெயலாளர் திருமாவளவன் உள்பட 25 பேர் மீது கடை சூப்பர்வைசர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தனி வீடு ரவி என்கின்ற ரவிசங்கர் தலைமையில், மாநில துணைத்தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், வேலுச்சாமி உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க இருப்பதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதற்கிடையே பா.ம.க.வினர் வந்த 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருச்சி- சிதம்பரம் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்ததால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அந்த வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் 2022-2023 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம், அரியலூர் தாலுகாவில் தூத்தூர், மேலவரப்பன்குறிச்சி மற்றும் திருமழப்பாடி ஆகிய கிராமங்களிலும், செந்துறை தாலுகாவில் தளவாய், கூடலூர் கிராமம் மற்றும் ஆண்டிமடம் தாலுகாவில் காடுவெட்டி ஆகிய கிராமங்களிலும் 14-ந் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகே உள்ள விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது


    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், அம்பிகா, மாவட்ட குழு உறுப்பினர் மீனா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முத்துசேர்வாமடம் ஊராட்சிக்குட்பட்ட செல்லிகுட்டை பாதை வழியாக செல்லும் மலைவாழ் மக்களின் மயான பாதையை ஆய்வுக்குட்படுத்தி முழுமையாக சாலை அமைக்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். செல்லிக்குட்டையை பரப்பளவின் அடிப்படையில் அளந்து அத்து காட்டி ஆழப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    ×