என் மலர்
நீங்கள் தேடியது "THE COMMUNIST PARTY"
- கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், அம்பிகா, மாவட்ட குழு உறுப்பினர் மீனா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முத்துசேர்வாமடம் ஊராட்சிக்குட்பட்ட செல்லிகுட்டை பாதை வழியாக செல்லும் மலைவாழ் மக்களின் மயான பாதையை ஆய்வுக்குட்படுத்தி முழுமையாக சாலை அமைக்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். செல்லிக்குட்டையை பரப்பளவின் அடிப்படையில் அளந்து அத்து காட்டி ஆழப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.






