என் மலர்tooltip icon

    அரியலூர்

    • மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே காடுெவட்டாங்குறிச்சி பகுதியில் உள்ள ஓடையில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் கொளஞ்சிநாதன் தனது உதவியாளருடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓடை மணலை மாட்டு வண்டியில் அள்ளிக் கொண்டிருந்தவர்களை கிராம நிர்வாக அலுவலர் பிடித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வாணத்தரியான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த பிச்சமுத்துவின் மகன் மணிகண்டன்(வயது 27), கண்ணதாசன்(50), அறிவானந்தன்(58) ஆகியோர் மாட்டு வண்டியின் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

    • மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முருகதாசின் மனைவி அமுதா(வயது 45), உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த பிரபு(39), மணகெதி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாளின் மகன் கோபி(42), பருக்கல் கிராமத்தை சேர்ந்த சின்னையனின் மனைவி பொன்னம்மாள்(60) ஆகியோர் அப்பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 48 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • அரசு பஸ்சில் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • டிக்கெட் கேட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் ஆண்டிமடம் விளந்தையை சேர்ந்தவர் ஸ்டாலின்(வயது 42). அரசு பஸ் கண்டக்டரான இவர் நேற்று ஜெயங்கொண்டத்தில் இருந்து அரியலூர் நோக்கி உடையார்பாளையம் வழியாக சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த கலியபெருமாள்(35) என்பவர் டிக்கெட் எடுக்காமல் இருந்ததாகவும், அவரிடம் கண்டக்டர் ஸ்டாலின் டிக்கெட் கேட்டபோது கலியபெருமாள் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஸ்டாலின் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கலியபெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்."

    • சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • பெரியார் பிறந்த நாள் விழா

    அரியலூர்:

    தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பெரியார் பிறந்த நாள் விழா நேற்று சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையிலும், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையிலும் அனைத்து துறை அலுவலர்கள், ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதேபோல் மாவட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் போலீசாரால் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    • வியாபாரியிடம் நகை பறிக்கப்பட்டது
    • 2 பேர் பைக்கில் வந்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து (வயது60). இவர் 10ஆண்டுகளுக்கு மேலாக பஸ் ஸ்டாண்ட் சாலையில் கூழ் வியாபாரம் செய்து வருகின்றார். நேற்று மதியம் 3 மணி அளவில் அடையாளம் தெரியாத பைக்கில் வந்த 2 பேர், பைக்கை நிறுத்தி கூழ் குடிப்பது போல் பேசிக்கொண்டு அவர் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்தார்.
    • வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் அருகே உள்ள பட்டனங்குறிச்சி வில்வாநத்தம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது69) விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகன்கள் உள்ளனர் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் இவர் தனது கடலை வயலில் கடலைப் பிடுங்கிக் கொண்டிருந்தபோது வயலில் இருந்த பாம்பு கடித்துள்ளது. இதில் மயக்க நிலையை அடைந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டது.
    • கோர்ட்டு உத்தரவுபடி

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் விளந்தை பகுதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி ஆண்டிமடம் விளந்தை மேலஅகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதனடிப்படையில் நேற்று கோயில் சொத்துக்களை கையகப்படுத்த இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் ஆண்டிமடம் விலந்தை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போதுஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்ட 26 பேரில் 24 பேர் நீதிமன்ற மூலம் பெற்ற தடை உத்தரவை காண்பித்துள்ளனர்.

    தடை உத்தரவு வாங்காத இரண்டு நபர்களான ராதாகிருஷ்ணனின் அன்னதான கூடமும், செல்வகுமாரின் வால்பட்டரை இடம் மீட்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி மற்றும் வருவாய் துறையினர், காவல்துறையினர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் வால்பட்டறை மற்றும் அன்னதான கூடம் ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • தே.மு.தி.க.வின் 18-ம் ஆண்டு தொடக்க விழா


    அரியலூர்:

    தே.மு.தி.க.வின் 18-ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், நகர தலைவர் மதி, நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், நகர துணை செயலாளர் மோனிஷா ரமேஷ், மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், ஒன்றிய துணை செயலாளர் ராஜீவ் காந்தி, மகளிர் அணி சீதா, மாணவரணி ரவி, மற்றும் அண்ணாதுரை, இளங்கோவன், நமச்சிவாயம், மதி, செல்வராஜ், கதிரவன், விஜய்ஆனந்த், அஜித் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
    • மின்கட்டண உயர்வை கண்டித்து

    அரியலூர்:

    அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மின் கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அரசு கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முன்னாள் எம்பி இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், இளைஞரணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து, மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், யூனியன் சேர்மன் செந்தமிழ்செல்வி, முன்னாள் அரசு வக்கீல் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கள்ளக்குறிச்சி பாஸ்கர், நகர செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பாலு, நகர பொருளாளர் கண்ணன், மாணவரணி சங்கர், மகளிர் அணி ஜீவா, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயக்குமார், கோபாலகிருஷ்ணன், புரட்சி சிவா, உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


    • கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
    • சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ஆவணி மாத 2-வது கிருத்திகையை முன்னிட்டு வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்பாலித்தார். வில்லேந்தி வேலவருக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. வள்ளி, தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரகார பிரதட்சணம் செய்யப்பட்டது.

    இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்தர நாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலிலும், கோடாலி கருப்பூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலிலும், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் உள்பட தா.பழூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

    • அரியலூர் பகுதியில் நாளை மின்சார நிறுத்தப்படுகிறது
    • 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை

    அரியலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர், தேளூர், நடுவலூர், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே அரியலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் அரியலூரில் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரியில் ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

    இதே போல் தேளூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் வி.கைக்காட்டி, தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

    • உழவன் செயலில் பதிவு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • அரியலூர் மாவட்டத்தில் வேளாண் திட்டங்கள்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களான பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், விதை கிராம திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட இத்திட்டங்களின் கீழ் 371.43 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    இதே போல், மாநில அரசு திட்டங்களான மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள திட்டக்கூறுகளான இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்குதல், நெற்பயிரில் வரப்பு பயிர் சாகுபடிக்கு பயறுவகை விதைகள் மானியத்தில் விநியோகம், நெற்பயிருக்கு துத்தநாக சல்பேட் மற்றும் ஜிப்சம் இடுதலை ஊக்குவித்தல், உழவர் பெருமக்களுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல், தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தில் மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் நீடித்த பருத்தி சாகுபடி இயக்கம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களின் கீழ் 102.4577 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    மேற்கண்ட திட்டங்களில் 80 சதவீத லக்கீடு 2022-2023 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாய பயனாளிகளுக்கும், மீதமுள்ள 20 சதவீத ஒதுக்கீட்டினை இதர கிராமங்களில் உள்ள விவசாய பயனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

    எனவே விவசாயிகள் மேற்கண்ட திட்டங்களில் பயன் பெறுவதற்கு விவசாயிகள் உடனடியாக "உழவன் செயலி"யில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில், ஏதேனும் சந்தேகம் இருப்பின் சம்மந்தப்பட்ட வேளாண்மை உதவி அலுவலர், வேளாண்மை அலுவலர் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×