என் மலர்
நீங்கள் தேடியது "OLD MAN DIES OF SNAKE BITE"
- பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்தார்.
- வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் அருகே உள்ள பட்டனங்குறிச்சி வில்வாநத்தம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது69) விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகன்கள் உள்ளனர் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் இவர் தனது கடலை வயலில் கடலைப் பிடுங்கிக் கொண்டிருந்தபோது வயலில் இருந்த பாம்பு கடித்துள்ளது. இதில் மயக்க நிலையை அடைந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






