என் மலர்
அரியலூர்
- வலம்புரி ஆண்டவர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடு போயிள்ளது
- தொடர் திருட்டினால் பொதுமக்கள் அச்சம்
அரியலூர்
செந்துறை அருகே உள்ள மிருகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வலம்புரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து தூக்கி சென்றனர். பின்னர் அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். இதே போன்று கடந்த சில நாட்களாக பரணம், பிலா குறிச்சி, வீரா கண் ஆகிய கிராமங்களில் தொடர்ந்து பலரது விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் மற்றும் வயர்களை வெட்டி திருடி சென்று விட்டனர். இந்தத் தொடர் திருட்டு காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். ஆகவே மேற்கண்ட கிராமங்களில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் பக்தர்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பிரகதீஸ்வரர் கோவில் கிரிவல பெருவிழா நடைபெற்றது
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பிரகன்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் ேகாவில் கிரிவல பெருவிழா நடைபெற்றது. கிரிவல பெருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 3 மணிக்கு அருள்மிகு ஸ்ரீகணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் மாலை 4:30 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது, மற்றும் மாலை 5:30 மணிக்கு பெளர்ணமி கிரிவலம் துவங்கி நடைபெற்றது. கிரிவலம் கோவிலில் துவங்கி வன்னியர்குழி, கணக்க வினாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது கோவிலில் 7 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.கிரிவல பெருவிழாவில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை மாமன்னன் இராசேந்திரசோழன் இளைஞர் அணியினர் விழா கமிட்டியினர் செய்து வந்தனர்.
- வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார்.
- கைத்தறி அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், நாகல்குழி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ரேவதி. இவரது தங்கை ரேணுகா(வயது 26). இவர் ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவில் உள்ள கைத்தறி நெசவாளர் நல வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரேணுகா வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி ஜெயங்கொண்டதிற்கு வந்தவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் வேலை பார்க்கும் இடத்திலும், அக்கம் பக்கத்திலும், உறவினர்கள், தோழிகள் வீட்டுகள் என எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அவரது சகோதரி ரேவதி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் காணாமல்போன ரேணுகாவை தேடி வருகின்றனர்."
- மணல் கடத்திய 3 மொபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கிராம நிர்வாக அலுவலர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் தனது உதவியாளர்களுடன் கிராம ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது கோடாலிகருப்பூர் விநாயகர் கோவில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, 3 மொபட்டுகளில் தலா 3 மூட்டை மணல்களுடன் மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் மணல் எடுப்பதற்கு எந்தவித அரசு அனுமதியும் இல்லாததால் மணல் மூட்டைகளையும், மொபட்டுகளையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேர் குறித்து விசாரணை செய்து வருகிறார்.
- நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நேற்று புரட்டாசி மாத சதுர்த்தியை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. வழக்கமாக நடராஜப் பெருமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆறு நாட்கள் மட்டுமே சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஆனி மாதம் வரும் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதற்கு அடுத்து புரட்டாசி மாதம் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.
அதன்படி விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு நேற்று மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நடராஜப் பெருமான் சிவகாமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம், நடராஜப் பத்து முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
- வீட்டில் இருந்த முதியவர் மாயமானார்.
- பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 68). இவர் கடந்த 7-ந் தேதி இரவு வீட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவரது மகன் பரமேஸ்வரன் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து பரமேஸ்வரன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சுடுகாட்டுக்கு சென்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
- ஆதரவற்ற நிலையில் உணவுக்கு திண்டாடியதால் பரிதாபம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சித்துடையார் காலனி தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் மூக்காயி ( வயது 37).இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் வேள்வி மங்கலம் காலனி தெருவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் 6 மாதங்களிலேயே கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை அடுத்து மூக்காயி யை அவரது கணவர் துரத்தி விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட அவர் சித்துடையாரில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பிழைப்புக்காக மூக்காயின் தாயார் கேரளாவுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டார்.இந்த நிலையில் மூக்காய்க்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அவரை உறவினர்கள் பராமரித்து வந்தனர். இருப்பினும் சரியாக உணவு கிடைக்காமல் பசி பட்டினியால் மூக்காயி அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று தனது தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். அடுத்த சில நொடிகளில் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இருந்தார்.
இது பற்றி அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆதரவற்ற பெண் சுடுகாட்டுக்கு சென்று தன்னைத்தானே எரித்துக் கொண்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- பேரிடர் கால மீட்பு குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- 60 பேருக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரியலூர்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடல் சாரா மாவட்டங்களில் பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடத்த தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி. பாலநாகதேவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின்படி, ஆயுதப்படை துணை சூப்பிரண்டு மணவாளன் மேற்பார்வையில், ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் 60 பேருக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் முதல் நாளில் பேரிடர் காலங்களில் வெள்ளம் போன்றவற்றில் சிக்கியவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 2-வது நாளான நேற்று உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் பாதுகாப்பு ஒத்திகை செயல் விளக்கமாக அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கமாண்டர் பிரிவை சேர்ந்த குழுவினர், பேரிடர் காலங்களில் வெள்ளம் போன்றவற்றில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர். அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், ரப்பர் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்று மத்திய மந்திரி பிரதிமா பெப்மிக் தெரிவித்தார்
- மதுபோதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு
அரியலூர்
அரியலூர் பெரியார் நகரில், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் நிதியுதவிடன் கருணாலயா தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் சுபம் ஒருங்கிணைந்த மதுபோதை மறுவாழ்வு மையத்தினை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பெப்மிக் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இந்த மதுபோதை மறுவாழ்வு மையத்தில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள், நோயாளிகள் விபரம், நோயாளிகளின் எண்ணிக்கை, போதை மீட்பு சிகிச்சைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மறுவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்ததுடன், இம்மறுவாழ்வு மையத்தினை தொடர்ந்து சிறப்பாக நடத்திடவும் உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய முத்ரா உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஊட்டச்சத்து குறைபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில் வளர் இளம் பெண்கள் மற்றும் தாய்மார்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு போஷன் அபியான் என்ற திட்டத்தை நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடற்றவருங்கால சமுதாயத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசு கவனமுடன் உள்ளது.
ெபண்களின் முன்னேற்றம் மற்றும் சமுதாய முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு
செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் மாநில அரசு செயல்பட வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின் போது, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை முதன்மைச் செயலர் மிலிந்த் ராம்தேகே, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, வட்டாட்சியர் கண்ணன், கருணாலயா தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அனுமதி இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளார்.
- கடைகளில் நேரில் ஆய்வு
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் அரியலூர், உடையார் பாளையம் 2கோட்டங்களும், அரியலூர் செந்துறை ஜெய–ங்கொண்டம் ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களும், 6 ஒன்றியங்களும், 2 நகராட்சி, 2 பேரூராட்சிகளை கொண்டு–ள்ளது.
தீபாவளி பண்டிகையை–யொட்டி அரியலூர் மாவட்ட–த்தில் பட்டாசு விற்பனை தொடங்கி விட்டது. ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிலர் அனுமதி பெற்றும், சிலர் அனுமதி பெறாமலும் பட்டாசு விற்பனை செய்கிறார்கள்.
இந்நிலையில் அரிய–லூர் நகரில் ஆர்டிஓ ராமகிருஷ்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராமசாமி, வருவாய் ஆய்வா–ளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார் ஆகியோர்கள் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பாதுகாப்பு உபகரண–ங்கள் இருக்க வேண்டும், மணல்வாளி–களை வைத்திருக்க வேண்டும், தீயணைப்பு கருவிகள் வை–த்திருக்க வேண்டும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும். அனுமதி பெறாமல் பட்டாசு விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஆர்டிஓ எச்சரித்துள்ளார்.
- தண்ணீர் கேனில் சாரயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- இரு சக்கர வாகனத்தில் வந்த போது பிடிபட்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் எரி சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் பெபின் செல்வ பிரிட்டோ மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், நிக்கோலஸ் ஆகியோர் கோடாலி, இடங்கண்ணி ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். இதில் அவர்கள் சீனிவாசபுரம் புது தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சரவணன்(வயது47), இலையூர் கீழத் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் வீரமணி( 25) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த 20 லிட்டர் தண்ணீர் கேனில் சாராயம் இருப்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து வழக்கு பதிந்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர்.
- திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- 70 பவுன் நகைகள் மீட்பு - மக்கள் பாராட்டு
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அரியலூர், கீழப்பழுவூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளாக ஆளில்லாத வீடுகளில் தொடர் கொள்ளை மற்றும் தொடர் வழிப்பறி நடைபெற்று வந்தது.
அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் கீழப்பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையில் அரியலூர் இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத் திருமானூர் சப் இன்ஸ்பெக்டர் ராஜவேல் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அரியலூர் பகுதியில் மோட்டர் பைக்கில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்களில் ஒருவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பதும் மற்றொருவர் சிவகாசியை சேர்ந்த முனியாண்டி ராஜா என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் இவர்கள் கடலூர் மாவட்டத்தில் 39 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் கடலூர் மாவட்ட போலீசார் 4 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்துள்ளார்.
இவர்கள் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக மாவட்டம் முழுவதும் ஆளில்லாத பல்வேறு வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்தது மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக அரியலூர் மாவட்டத்தில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தொடர் விசாரணையில் அவர்களிடம் இருந்து ரூ. 28 லட்சம் மதிப்புள்ள 70 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டன. பல ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த திருடர்களை பிடித்த மாவட்ட போலீசாரை பொது மக்கள் பாராட்டினர்.






