என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரசு வழங்கிய இடத்தில் நூலகம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • விருந்தினர் இல்லத்தை இசைப்பள்ளியாக மாற்றித்தர வேண்டும்.

    அரியலூர்

    தமிழ்நாடு கலை இலக்கிய மாவட்ட அமைப்பின் ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டத்தில் பேராசிரியர் சிவபெருமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புலவர் அரங்கநாடன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கங்கை கொண்ட சோழபுரத்தில் தமிழக அரசால் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள விருந்தினர் இல்லத்தை கலை மற்றும் இசைப்பள்ளியாக மாற்றித்தர வேண்டும். ஜெயங்கொண்டத்தில் அரசு வழங்கிய இடத்தில் நூலகத்தை கட்டித்தர வேண்டும். ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் உள்ள நூலகத்திற்கு கவிஞர் மருதகாசியின் பெயர் சூட்ட வேண்டும். அவரது பிறந்த நாளை தா.பழூரில் சிறப்பாக கொண்டாட வேண்டும். தா.பழூரில் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • அரியலூர் மாவட்டத்தில் மனிதச் சங்கிலி நடந்தது
    • சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி

    அரியலூர்:

    சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அரியலூர், செந்துறை, திருமானூர், ெஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

    அரியலூரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டத்துக்கு விசிக ஒன்றியச் செயலாளர்கள் தங்கராசு,உத்திராபதி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் தண்டபாணி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ் கட்சி ஒன்றியச் செயலர் துரை.அருணன் ,திராவிட கழக நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    செந்துறையில் ஒன்றியச் செயலர் (வ) வீரவளவள், திருமானூரில் ஒன்றியச் செயலர் (கி) கண்ணன், ஜயங்கொண்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் பாரதி, முத்துகிருஷ்ணன், ஆண்டிமடத்தில் ஒன்றியச் செயலாளர் (வ) தேவேந்திரன், தா.பழூரில் ஒன்றியச் செயலர் தங்கராசு ஆகியோர் தலைமையில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பொருப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



    • கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றனர்
    • போலீசார் தீவிர விசாரணை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிச்சனூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அக்னி வீரனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு விசேஷ தினங்கள் தவிர்த்து வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே வீரனாருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை கோவிலில் பூஜை செய்வதற்காக பூசாரி இளமாறன் சென்றார். அப்போது கோவிலுக்குள் இருந்த உண்டியலை காணாமல் திடுக்கிட்டார்.

    கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த உண்டியல் காணிக்கை பணம் கோவில் நிர்வாகத்தால் எடுக்கப்ப டவில்லை. ஆகவே அதில் ரூ. 2 லட்சத்துக்கும் மேல் பணம் இருக்கலாம் என கூறப்பட்டது. மேலும் அந்த உண்டியல் சுமார் 125 கிலோ எடை கொண்டதாகும். அதனை ஒருவர் அல்லது இருவரால் பெயர்த்து எளிதில் தூக்கிச் செல்ல முடியாது.

    குறைந்த பட்சம் நான்கு பேராவது இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டிரு க்கலாம் என தெரிகிறது.

    கொள்ளையர்கள் சாவகாசமாக சில மணி நேரம் உட்கார்ந்து இரும்பு கம்பிகளால் தோண்டி தூக்கிச் சென்றிருக்கலாம் என கருதப்ப டுகிறது. இது பற்றி இளமாறன் ஜெயங்கொ ண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொ ண்டனர். 125 கிலோ எடை கொண்ட கோவில் உண்டியலை கொ ள்ளையர்கள் அலாக்காக தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    • அரசு பள்ளியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது
    • மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி, வனிதா, சுகுணா, ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னதுரை, வார்டு உறுப்பினர் பூங்காவனம், பள்ளி ஆசிரியர்கள் தங்கபாண்டியன், தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, கோகிலா, ரம்யா, இளநிலை உதவியாளர் மணிகண்டன், உட்பட அனைத்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அனைத்து மகளிர் நிலைய ஆய்வாளர் தமிழரசி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தமிழரசன், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    • பணம் வைத்து சீட்டு விளையாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம், தா பழூர், உடையார்பாளையம், மீன்சுருட்டி உட்பட்ட கிராமங்களில் முந்திரி தோப்பு உட்பட பல்வேறு இடங்களில் பணம் வைத்து சீட்டு சூதாட்டம் நடப்பதாக புகார்கள் வந்ததையடுத்து, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கல்யாணராமன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்ேபாது ஜெயங்கொண்டம் காந்திநகர் மாரியம்மன் கோயில் பகுதியில் பணம் வைத்து சீட்டு சூதாடிய சிலர், போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். அவர்களை போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் காந்திநகரை சேர்ந்த பாலசுப்பிரமணி யன் (வயது 25), வேல்முருகன் (28), அம்பேத்கர்நகர் அயப்பன் (31), பாஸ்கர் (44), வடக்கு தெருவை சேர்ந்த கலையரசன் (35), சண்முகம் (31) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, சீட்டு கட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது
    • சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

    அரியலூர்:

    அரியலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    அரியலூர் அண்ணா நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் கார்த்திக்(வயது 27). கூலித்தொழிலாளியான இவர், அருகேயுள்ள எருத்துக்காரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்தாண்டு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில், கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரனை அரியலூர் மகளிர் நீதின்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    தீர்ப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கடத்தி சென்றமைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், தண்டனைகள் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து கார்த்திக் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி

    அரியலூர்:

    சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்திலுள்ள மத்திய அரசு நிறுவனங்களில், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் அதிகளவில் சுண்ணாம்பு கனிமங்கள் சுரண்டப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணைச் செயலர் பகுத்தறிவாளன், மாநில மாணவரணிச் செயலர் அருள்பாபு, மாநில துணைப் பொதுச் செயலர் பழ.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்

    • மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது
    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்தது

    அரியலூர்:

    அரியலூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் வேப்பமுத்து ஏலம் நடைபெற்றது.

    மக்காச்சோளம் ஏலத்தில் 5 விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களிடமிருந்து 66.30 குவிண்டால் வரப்பெற்று, 5 குவியலாக ஏலம் விடப்பட்டது. அதிகபட்ச விலையாக ரூ.2,439க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.2,271க்கும் சராசரி விலையாக ரூ.2,393க்கும் விலை போனது.

    வேப்பமுத்து ஏலத்தில் கலந்து கொண்ட 2 விவசாயிகளிடமிருந்து 159 கிலோ வேப்பங்கொட்டை வரப்பெற்று, 2 குவியலாக ஏலம் விடப்பட்டது. இதில் கலந்து கொண்ட வியாபாரிகள் 4 பேர், குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ.11,524-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.4,018-க்கும் வாங்கினர்.

    • மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • கர்ப்பிணி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரி

    அரியலூர்:

    அரியலூர் அருகே கர்ப்பிணி கொலை வழக்கில் தொடர்புடைய அவரது கணவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆண்டிமடம் கடைவீதியில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆண்டிமடம் அடுத்த சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் புகழேந்தி(வயது32). இவருக்கும் கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகள் நிர்மலா(26) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது.

    இதில் கருவுற்ற நிர்மலாவுக்கு வளைகாப்பு செய்ய பெண்ணின் வீட்டார் முடிவெடுத்த நிலையில், திருமணத்தின் போது நிர்மலாவுக்கு செய்ய வேண்டிய 7 பவுன் நகையை செய்யவேண்டும் என புகழேந்தி வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நிர்மலா கடந்த 2-ந் தேதி நள்ளிரவு வீட்டின் மாடியில் எரிந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து சென்ற ஆண்டிமடம் காவல் துறையினர் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், வரதட்சனை கேட்டு தனது மகளை கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக நிர்மலாவின் தாய் நீலாவதி, அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், புகழேந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து நிர்மலாவிடம் வரதட்சனை கேட்டு,அவரை கொடுமை படுத்தி தீயிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து புகழேந்தி மற்றும் அவரது தாய் அமுதா ஆகியோரை காவல் துறையினர் அண்மையில் கைது செய்தனர்.

    இந்நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்த புகழேந்தியின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த பெண்ணின் பெற்றோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா, மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, மாவட்டச் செயலர் டி.அம்பிகா, இந்திய வாலிபர் சங்க மாவட்டச் செயலர் துரை.அருணன், மாவட்டப் பொருளாளர் அருண்பாண்டியன் உட்பட பலரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    • குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தில் இருந்து நாகல்குழி செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது அந்த சாலை குண்டும், குழியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வெளியூர் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்தனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் பிரபாகரன். இவருக்கு சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதநாதனுக்கு தகவல் தெரிவித்தார். பின்பு தகவல் அறிந்து உடனே சாத்தம்பாடி பகுதிக்குச் சென்ற போலீசார் சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து முத்துவாஞ்சேரி நோக்கி வந்த 3 மாட்டு வண்டிகளை சாத்தம்பாடி திரவுபதி அம்மன் கோவில் அருகே மறித்து சோதனை செய்தனர். அப்போது 3 மாட்டு வண்டிகளிலும், அரசு அனுமதி இன்றி முத்துவாஞ்சேரி பகுதிகளுக்கு மணல் கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, சாத்தம்பாடி பகுதியைச் சேர்ந்த மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த சிவசுப்பிரமணியன்(வயது 48), சின்னதுரை(47), கதிரேசன்(38) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • குரு பூஜை விழா நடைபெற்றது.
    • 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வெள்ளைப்பிள்ளையார் கோவில் தெரு, வெற்போடை எனும் குளக்கரையில் அமைந்துள்ள ராமலிங்கம் எனும் குருநாத சுவாமியின் 137-வது ஆண்டு குரு பூஜை விழா நடந்தது. இதையொட்டி காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக பெரிய ஏரி கீழக்கரையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு குரு நாத சுவாமிகளின் திருவீதி உலா காட்சி நடந்தது. இதில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது."

    ×