வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதுசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு
வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
Published on

அரியலூர்:

அரியலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரியலூர் அண்ணா நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் கார்த்திக்(வயது 27). கூலித்தொழிலாளியான இவர், அருகேயுள்ள எருத்துக்காரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்தாண்டு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில், கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரனை அரியலூர் மகளிர் நீதின்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கடத்தி சென்றமைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், தண்டனைகள் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து கார்த்திக் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com