என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுடுகாட்டுக்கு சென்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
- சுடுகாட்டுக்கு சென்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
- ஆதரவற்ற நிலையில் உணவுக்கு திண்டாடியதால் பரிதாபம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சித்துடையார் காலனி தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் மூக்காயி ( வயது 37).இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் வேள்வி மங்கலம் காலனி தெருவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் 6 மாதங்களிலேயே கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை அடுத்து மூக்காயி யை அவரது கணவர் துரத்தி விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட அவர் சித்துடையாரில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பிழைப்புக்காக மூக்காயின் தாயார் கேரளாவுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டார்.இந்த நிலையில் மூக்காய்க்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அவரை உறவினர்கள் பராமரித்து வந்தனர். இருப்பினும் சரியாக உணவு கிடைக்காமல் பசி பட்டினியால் மூக்காயி அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று தனது தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். அடுத்த சில நொடிகளில் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இருந்தார்.
இது பற்றி அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆதரவற்ற பெண் சுடுகாட்டுக்கு சென்று தன்னைத்தானே எரித்துக் கொண்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






