என் மலர்
அரியலூர்
- 2 குழந்தைகளின் தாய் மாயமானார்.
- தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் காலனி தெருவை சேர்ந்த காசிலிங்கத்தின் மகன் வீரக்குமார்(வயது 28). இவரது மனைவி பிரியதர்ஷினி(வயது24). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளதாக தெரிகிறது. வீரக்குமார் திருப்பூரில் சாயப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். இதனால் பிரியதர்ஷினி, தனது குழந்தைகளுடன் உதயநத்தம் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளிக்காக தனது ஊருக்கு வீரக்குமார் வந்தார்.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதி காலை பிரியதர்ஷினி தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த வீரக்குமார், அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளார். எங்கு தேடியும் பிரியதர்ஷினி கிடைக்கவில்லை. இது குறித்து வீரக்குமார் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.s
- மின்சாரம் பாய்ந்து முதியவர் உயிரிழந்தார்
- கூலி வேலை செய்து வந்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழவண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவமூர்த்தி(வயது 62). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு செல்லும் மின் இணைப்பில் மரத்தின் இலைகள் சிக்கியிருந்தது.
இதைக்கண்ட கேசவமூர்த்தி, அந்த இலைகளை அகற்றிவிட முயற்சி செய்துள்ளார். அப்போது கேசவமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கேசவமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
- சோழர்கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வேளாண் தொழில் வளர்ச்சி அடையும்.
- அரியலூரில் சோழர்கால பாசன திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் சோழர்கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுத்து செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) தனது நடை பயணத்தை தொடங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில் சோழர் கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுத்து அதனை செயல்படுத்த வலியுறுத்தி இன்றும் நாளையும் அரியலூர் மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொள்வதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று(சனிக்கிழமை) காலை 10:30 மணி அளவில் கீழப்பழுவூரில் அவர் தனது நடை பயணத்தை தொடங்கினார்.
சோழர்கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வேளாண் தொழில் வளர்ச்சி அடையும். மேலும் பல பகுதிகள் இயற்கை சுற்றுலா மையங்களாக மாறும் வாய்ப்பு ஏற்படும். அதனால் வேலை வாய்ப்புகளும் பெருகும். ஆகவே பின்தங்கிய மாவட்டமாக இருக்கும் அரியலூரில் சோழர்கால பாசன திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நடைபயணம் கரை வெட்டிஏரி, கண்டராதித்தம், திருமானூர், காமராசவல்லி, குருவாடி, வைப்பூர், பூத்தூர்,விக்கிரமங்கலம் உள்ளிட்ட ஊர்கள் வழியாக தாபலூரில் நிறைவடைகிறது.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) அரியலூரில் தொடங்கும் நடைபயணம் வாலாஜா நகரம், அஸ்தினாபுரம், வி.கைகாட்டி,தத்தனூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம், மீன்சுருட்டி கண்டமங்கலம் வழியாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நிறைவு பெறுகிறது. பின்னர் கள ஆய்வு அறிக்கைகளை அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்க திட்டமிட்டுள்ளார்.
- நீண்ட நேரமாக சமரசம் பேசியும் ரியாஸ்பேகம் கணவருடன் குடும்பம் நடத்த செல்ல மறுத்துள்ளார்.
- அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. ஒரு கட்டத்தில் மனைவியை கீழே தள்ளிய ஜாபர் கடுமையாக தாக்கியுள்ளார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் ஜாபர் (வயது 55). இவரது மனைவி ரியாஸ் பேகம் (48). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே மும்பையில் திருமணம் செய்து கொண்டு விட்டு பிழைப்புக்காக உடையார்பாளையம் வந்து குடியேறி உள்ளனர்.
ஜாபர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். அங்கேயே வாடகை வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். இதற்கிடையே மது உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையான ஜாபர் தனது சம்பள பணத்தை மனைவியிடம் கொடுப்பதில்லை.
அத்துடன் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வரும் அவர் மனைவி மற்றும் பிள்ளைகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் மனம் உடைந்த ரியாஸ் பேகம் கணவருடன் கோபித்துக்கொண்டு தனது பிள்ளைகளுடன் உடையார்பாளையத்தில் வசித்து வந்தார். அங்கும் சென்ற ஜாபர் மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கண்டித்தும் ஜாபர் திருந்தவில்லை.
இந்தநிலையில் நேற்று இரவு அளவுக்கு அதிகமான மது போதையில் உடையார்பாளையத்தில் உள்ள மனைவியின் வீட்டுக்கு சென்ற ஜாபர், அவரை உடனே தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கூறினார். அதற்கு ரியாஸ் பேகம் மறுத்து விட்டார். இதையடுத்து வீட்டில் இருந்த மாமியார் மற்றும் பிள்ளைகளை சிறிது நேரம் வெளியில் இருக்குமாறும், மனைவியுடன் தனியாக பேச வேண்டும் என்று ஜாபர் கூறியதால் அவர்கள் வெளியில் சென்றுவிட்டனர்.
நீண்ட நேரமாக சமரசம் பேசியும் ரியாஸ்பேகம் கணவருடன் குடும்பம் நடத்த செல்ல மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. ஒரு கட்டத்தில் மனைவியை கீழே தள்ளிய ஜாபர் கடுமையாக தாக்கியுள்ளார். வெளியில் நிற்கும் தனது தாய்க்கு தெரிந்தால் வருத்தப்படுவார் என்ற எண்ணத்தில் கணவரின் தாக்குதலை ரியாஸ் பேகம் பொறுத்துக்கொண்டார்.
ஆனாலும் ஆத்திரம் குறையாத ஜாபர், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஆட்டை அறுக்கும் கூர்மையான கத்தியால் மனைவி என்றும் பாராமல் ரியாஸ் பேகத்தின் கழுத்தை கொடூரமாக அறுத்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரியாஸ் பேகம் ஒரு சில விநாடிகளில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ஆனால் இந்த விஷயம் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியக்கூடாது என்ற ரீதியில் மனைவியிடம் பேசுவது போன்று நாடகமாடியுள்ளார்.
மேலும் இறந்து கிடந்த மனைவியின் அருகிலேயே ஒரு பாயை விரித்து அதில் ஜாபர் படுத்துக்கொண்டார். இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் ஜாபர், ரியாஸ் பேகம் இருவரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த ஜாபரின் மாமியார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரியாஸ் பேகம் பிணமாக கிடந்தார். அவர்கள் உள்ளே வந்ததும் ஜாபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுபற்றி அவர்கள் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட ரியாஸ் பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மனைவியை கொலை செய்த ஜாபர் நேராக உடையார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உடையார்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரியலூர் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
- பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
அரியலூர்
அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜ நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன் ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி.தேளூர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான வி.கைக்காட்டி, தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கர்பாளையம், மைல்லாண்டகோட்டை.நடுவலூர் துணைமின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி.செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லபாங்கி தெரிவித்துள்ளார்.
- வக்கீல் கொலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்
- தப்ப முயன்றபோது போலீசார் சுற்றி வளைத்தனர்
அரியலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவர் உள்ளிட்ட சிலர் மது அருந்தியதில் ஏற்பட்ட தகராறில் சாமிநாதன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து செல்வமணியை கடந்த 2020 ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்தனர்.
இதனால் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த சாமிநாதன் சொந்த கிராமத்திற்கு வராமல் சென்னையிலேயே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் அனைக்குடம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு தனது தங்கையின் திருமணத்திற்காக கடந்த செப்டம்பர் 7-ந்தேதி வந்துள்ளார்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட செல்வமணியின் தம்பி இளையராஜா உள்ளிட்ட சிலர் கூலிப்படையை வைத்து திருமண மண்டபத்தில் இருந்து அருகிலுள்ள ஓட்டலில் டீ சாப்பிட வந்த சாமிநாதனை வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இக்கொலையில் தொடர்புடைய தஞ்சை மாவட்டம் திருநறையூர் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி, விஜய், நாச்சியார் கோவில் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார், தமீம் அன்சாரி, கரண், தினேஷ்குமார், ஆகியோர் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில் இக்கொலையில் முக்கிய குற்றவாளியான இளையராஜாவின் மனைவி ரெஜினா, செல்வகுமார், செல்வம், நவீன் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சதி திட்டத்திற்கு உடந்தையாக இருந்தது, பணம் கொடுத்தது மற்றும் சாமிநாதன் யார் என அவரை அடையாளம் காட்டியது போன்ற குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து நான்கு பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதில் முக்கிய குற்றவாளியான இளையராஜாவை தேடி வந்த நிலையில் தா.பழூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளையராஜா போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். உடனே போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளையராஜா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- சாலை விதிமுறைகள் குறித்து
அரியலூர்
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், மாவட்ட துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் அறிவுறுத்த–லின் படி,
உடையார்பாளையம் உட்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்துள்ள சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான புதிய உயர்த்தப்பட்ட அபராத தொகை மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து உடையார்பாளை–யம் காவல் உதவிஆய்வாளர் திருவேங்கடம் தலைமையி–லான போலீசார் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் பெனடிக்
சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, விழிப்பு–ணர்வு நிகழ்ச்சியை நடத்தி–னர்.
இதில் 50 க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.
- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
- திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
உடையார்பாளையம் அருகேயுள்ள பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேவிட்(எ) செந்தமிழ்ச்செல்வன்(வயது 31) பரோட்டா மாஸ்டரான இவர், கடந்த 4.7.2021 அன்று தனது உறவினர் மகளான 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இது குறித்து புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் செந்தமிழ்ச்செல்வனை ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி செந்தமிழ்ச்செல்வனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து செந்தமிழ்ச்செல்வன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி
அரியலூர்,
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கட்சியினர் மொழி அரசியலை செய்ய வேண்டாம். பொறியியல், மருத்துவம் படிப்புகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட மேற்பார்வையாளர் சந்திரசேகரன், அரியலூர் நகரத் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பட்டியல் அணித் தலைவர் தடா பெரியசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
- தலமைச்சரால் அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் துவங்கப்பட்டது.
- அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
அரியலூர் :
தமிழ்நாடு முதலமைச்சரால் 5.9.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் துவங்கப்பட்டது.
இது வரை 2, 3 மற்றும் 4 ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 866 மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள்.முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வலைத்தளத்தில் மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1 ம் தேதி முதல் 11 ம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.
இத்திட்டதின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11 ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2,3 மற்றும் 4 ஆம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809; 91500 56805; 91500 56801 மற்றும் 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- ஆண்டு தோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி 20 இளைஞர்களை தேர்ந்தெ டுத்து அவர்களுக்கு குடிமை ப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமு றைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணை யதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அரியலூர் :
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டு தோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி 20 இளைஞர்களை தேர்ந்தெ டுத்து அவர்களுக்கு குடிமை ப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டு கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமு றைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணை யதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை அரியலூர் மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாள்களில் பெற்று கொள்ளலாம்.
விண்ண ப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்து றையின் இணை யதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறை களின்படி பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 31.10.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் (இருப்பு) அரியலூர், அறை எண்.234, இரண்டாவது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டட வளாகம், தொலைபேசி எண்.04329-228699, கைப்பேசி எண்:6381344399 தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்கிறது.
- கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும்
முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.






