search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகள் பயன்பெறலாம் -  கலெக்டர் தகவல்
    X

    அரியலூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகள் பயன்பெறலாம் - கலெக்டர் தகவல்

    • தலமைச்சரால் அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் துவங்கப்பட்டது.
    • அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

    அரியலூர் :

    தமிழ்நாடு முதலமைச்சரால் 5.9.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் துவங்கப்பட்டது.

    இது வரை 2, 3 மற்றும் 4 ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 866 மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள்.முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வலைத்தளத்தில் மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1 ம் தேதி முதல் 11 ம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

    இத்திட்டதின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11 ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2,3 மற்றும் 4 ஆம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809; 91500 56805; 91500 56801 மற்றும் 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×