என் மலர்
அரியலூர்
- அரியலூர் வருகை தரும் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- அரியலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
அதன்படி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூரா.விசுவநாதன் பேசுகையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் பகுதி முந்திரி விவசாயிகளுக்கு முந்திரி கன்றுகளை வழங்க வேண்டும் என்றார்.
அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசும் போது, புள்ளம்பாடி வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் விடுவதால், நாற்றுகள் தண்ணீரின்றி கருகி விருகிறது. ஆகவே முறை வைககாமல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றார். இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலர் வாரணவாசி ராசேந்திரன் பேசும்போது, புள்ளம்பாடி வாய்க்காலில் போதுமான தண்ணீர் வரத்து இல்லாததால் நஞ்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.நெற் பயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் வருகை தரும் முதல்வரை விவசாயிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரியலூர் மாவடடம் தூத்தூர் -தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்கும் திட்டத்தில் பழைய நடைமுறையில் கடன் வழங்க வேண்டும் என்றார். தொடர்ந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர் விவசாயிகளளித்த கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- மருத்துவ முகாமில் 1,420 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
- 14 மாடுகளுக்கு சினை உறுதி செய்யப்பட்டது
அரியலூர்:
அரியலூர் அருகேயுள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமை ஊராட்சி தலைவர் கலைச்செல்வி தொடக்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் குமார், முருகேசன், வேல்முருகன், ராஜா, பிரபாகரன், கால்நடை ஆய்வாளர் முத்துக்குமரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ராமலிங்கம், கலியமூர்த்தி, ஜெயக்குமாரி ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் 339 மாடுகள், 232 செம்மறி ஆடுகள், 455 வெள்ளாடுகள் உள்ளிட்ட 1,420 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும், இந்த முகாமில் 72 பசு கன்றுகள், 419 வெள்ளாடுகள் உள்ளிட்ட 699 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்ட14 மாடுகளுக்கு சினை உறுதி செய்யப்பட்டது. சினை தருண அறிகுறிகள் தென்பட்ட 10 பசு மாடுகளுக்கு இலவசமாக கருவூட்டல் செய்யப்பட்டது. முகாம் இறுதியில் கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு, இதில் கலந்து கொண்ட 23 கன்றுகளில் 10 சிறந்த கிடேரி கன்றுகளுக்கு அரியலூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் சொக்கலிங்கம் பரிசுகளை வழங்கினார். 61 மாடுகளுக்கு தாது உப்பு கலவை பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. முடிவில், ஊராட்சி துணைத் தலைவர் கலைச்செல்வி ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.
- ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்
- தவறான முறையில் மின்விநியோகம் இருக்கக் கூடாது
அரியலூர்:
அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா நடைபெற்றது, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதாராணி வரவேற்று பேசினார், திருமாவளவன்எ எம்.பி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், நகராட்சி தலைவர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்துள்ளார். எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, நாங்கள் தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்ற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக அ.தி.மு.க.விலேயே விமர்சனங்கள் எழுகின்ற நிலையில், இந்த சந்திப்பை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி இருப்பதாக நினைக்கிறேன்.
தவறான முறையில் மின்விநியோகம் இருக்கக் கூடாது. அனைவருக்கும் மின்விநியோகம் வழங்க வேண்டும் என்ற முயற்சியின் காரணமாகவே ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எதிர்பார்த்த ஒன்றுதான். ஜல்லிக்கட்டை மீட்டெடுக்கும் வகையில் மக்கள் போராட்டம் தொடரும். தமிழக அரசின் சட்ட போராட்டத்தின் மூலம், நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்ற எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம் நடைபெற்றது.
- 30 மனுக்கள் பெறப்பட்டன
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் முகாம் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் தலைமை தாங்கினார். முகாமில் 30 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, சாலை விபத்தில் படுகாயம் அடைந்த உடையார்பாளையம் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை ஆர்.டி.ஓ. வழங்கினார்.
- வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
- உத்தரவு நகலினை சிறை அதிகாரியிடம் வழங்கினர்.
அரியலூர்:
அரியலூரில், மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே கடந்த மாதம் 6-ந்தேதி இருசக்கர வாகனத்தில் வந்தவரை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம், கொளக்குடியை சேர்ந்த ரமேஷ் (வயது 37), விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த முனியாண்டி ராஜா (48) ஆகிய 2 பேரையும் அரியலூர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது அரியலூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் பரிந்துரையை ஏற்று ரமேஷ், முனியாண்டி ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ரமேஷ், முனியாண்டி ராஜா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலினை திருச்சி மத்திய சிறை அதிகாரியிடம் அரியலூர் போலீசார் வழங்கினர்."
- 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- சீர்வரிசை எடுத்து செல்ல எதிர்ப்பு
அரியலூர்:
தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்காள் மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சீர்வரிசை எடுத்துக்கொண்டு உறவினர்களுடன் வெடி வெடித்து மேளதாளங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வல்லவன் (வயது 41), ரவி (43), சுமதி (43), அருண் (30), ராஜதுரை (31) ஆகியோர் எங்கள் வீதி வழியாக சீர்வரிசை எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில் வல்லவன் உள்ளிட்ட 5 பேர் மீது விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஜெயங்கொண்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது
- உடையார்பாளையம் ஆர்டிஓ தொடங்கி வைத்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம் துவக்கி வைத்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை மற்றும் ஜனவரி 1 முதல் 2023 அன்று அல்லது அதற்கு முன்பு உள்ளவர்களுக்கு 18 வயது பூர்த்தியாக இருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் பேரணியில் வலியுறுத்தி சென்றனர். பேரணியில்ஜெ யங்கொண்டம் தாசில்தார் துரை, வருவாய் ஆய்வாளர் செல்வ கணேசன், கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி அண்ணா சிலையில் இருந்து ஜெயங்கொண்டம் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றுள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும்அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்
- ஊராட்சி குழு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலக கூட்ட மன்றத்தில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி அலுவலக செயலாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் அசோகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா, நல்லமுத்து, குலக்கொடி, வசந்தமணி, சகிலாதேவி, ராஜேந்திரன், அன்பழகன், தனசெல்வி, கீதா, புள்ளியியல் அலுவலர் முகிலன், அலுவலக இளநிலை உதவியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 14 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன, அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்திற்கு புதிய கட்டிட வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும், என தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரளி விதையை அரைத்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நமங்குணம் காலனி தெருவை சேர்ந்தவர் கரும்பாயிரம் (வயது 49). இவர் அப்பகுதியில் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (40). இவர் அங்குள்ள அங்கன்வாடியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் பாப்பாத்தி (36) என்பவர் கரும்பாயிரத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனைக்கண்ட தமிழ்ச்செல்வி ஏன் எனது கணவருடன் பழகுகிறாய் என்று தட்டி கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பாப்பாத்தி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை சோதனை செய்தபோது பாப்பாத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கரும்பாயிரம், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, உறவினர் பழனியம்மாள் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது"
- தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
- தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ளது
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2, 4-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். எனவே, இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 முதல் 35 வயது வரையிலான ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04329–228641 என்ற தொலைபேசி எண்ணையும் அல்லது ariyalurjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி பயனடையுமாறு தெரிவித்தார்.
இந்த பேரணி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கி அரியலூர் உழவர் சந்தை வழியாக சென்று அரியலூர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது
- கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை நடக்கிறது
அரியலூர்
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






