என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் வருகை தரும் முதல்வரை  சந்திக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை
    X

    அரியலூர் வருகை தரும் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை

    • அரியலூர் வருகை தரும் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • அரியலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

    அதன்படி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூரா.விசுவநாதன் பேசுகையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் பகுதி முந்திரி விவசாயிகளுக்கு முந்திரி கன்றுகளை வழங்க வேண்டும் என்றார்.

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசும் போது, புள்ளம்பாடி வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் விடுவதால், நாற்றுகள் தண்ணீரின்றி கருகி விருகிறது. ஆகவே முறை வைககாமல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றார். இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலர் வாரணவாசி ராசேந்திரன் பேசும்போது, புள்ளம்பாடி வாய்க்காலில் போதுமான தண்ணீர் வரத்து இல்லாததால் நஞ்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.நெற் பயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் வருகை தரும் முதல்வரை விவசாயிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரியலூர் மாவடடம் தூத்தூர் -தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்கும் திட்டத்தில் பழைய நடைமுறையில் கடன் வழங்க வேண்டும் என்றார். தொடர்ந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர் விவசாயிகளளித்த கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×