என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ முகாமில் 1,420 கால்நடைகளுக்கு சிகிச்சை
    X

    மருத்துவ முகாமில் 1,420 கால்நடைகளுக்கு சிகிச்சை

    • மருத்துவ முகாமில் 1,420 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
    • 14 மாடுகளுக்கு சினை உறுதி செய்யப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் அருகேயுள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமை ஊராட்சி தலைவர் கலைச்செல்வி தொடக்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் குமார், முருகேசன், வேல்முருகன், ராஜா, பிரபாகரன், கால்நடை ஆய்வாளர் முத்துக்குமரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ராமலிங்கம், கலியமூர்த்தி, ஜெயக்குமாரி ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

    இதில் 339 மாடுகள், 232 செம்மறி ஆடுகள், 455 வெள்ளாடுகள் உள்ளிட்ட 1,420 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    மேலும், இந்த முகாமில் 72 பசு கன்றுகள், 419 வெள்ளாடுகள் உள்ளிட்ட 699 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்ட14 மாடுகளுக்கு சினை உறுதி செய்யப்பட்டது. சினை தருண அறிகுறிகள் தென்பட்ட 10 பசு மாடுகளுக்கு இலவசமாக கருவூட்டல் செய்யப்பட்டது. முகாம் இறுதியில் கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு, இதில் கலந்து கொண்ட 23 கன்றுகளில் 10 சிறந்த கிடேரி கன்றுகளுக்கு அரியலூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் சொக்கலிங்கம் பரிசுகளை வழங்கினார். 61 மாடுகளுக்கு தாது உப்பு கலவை பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. முடிவில், ஊராட்சி துணைத் தலைவர் கலைச்செல்வி ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×