என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஏலாக்குறிச்சியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சி வீரமாமுனிவர் மண்டபத்தில், தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிளைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சுக்கிரன் ஏரியில் இருந்து வரும் அரசன் ஏரி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்.மாவட்டத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் நோய் பாதிக்கப்பட்ட கரும்புக்கு உரிய நஷ்ட ஈடும் , நிவாரணமும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், அரசு அறிவித்த தொகையை விட விவசாயிகளிடம் ஏதும் பணம் வாங்க கூடாது. கண்டராதித்தம் பெரிய ஏரியிலிருந்து திருமானூர் பகுதிக்கு வரும் நந்தியாறு பாசன வாய்காலை தூர்வாரி, சேதமடைந்துள்ள கிளை வாய்க்கால் மதகுகளை சரிசெய்ய வேண்டும்.திருமானூரில் நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், விவசாய சங்க ஒன்றியத் தலைவர் தங்கராசு, கரும்பு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாய சங்க மாவட்டத் தலைவர் கரும்பாயிரம், மாவட்டச் செயலர் ஜெகநாதன், மாவட்ட துணை தலைவர் வைத்திலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் மணிவேல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு பேசினர்.

    • விஷம் குடித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவர் இறந்த துக்கத்தில் இருந்த உமா சம்பவத்தன்று களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்

    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், சில்லக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்(வயது 43). இவரது மூத்த மகள் உமா(18). இவர் தந்தையின் எதிர்ப்பையும் மீறி அதே கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு வேலு பூச்சி மருந்து(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த உமாவை, அரியலூர் மாவட்டம், மல்லூர் கிராமத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு மதியழகன் அனுப்பி வைத்தார்.

    இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த உமா, சம்பவத்தன்று களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதி விபத்துக்குள்ளானது
    • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சில மணி நேரம் போராடி டிரைவரை வெளியே மீட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துள்ளாரக்குறிச்சி பைபாஸ் சாலையில் நாமக்கலில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சத்துமாவு ஏற்றி கொண்டு டாரஸ் லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது அரியலூரில் இருந்து ஜல்லி ஏற்றி கொண்டு சென்ற மினி லாரி முன்னாள் போய்க்கொண்டிருந்த டாரஸ் லாரி பின்புறம் மோதியது. அதில் ஜல்லி ஏற்றி வந்த லாரி முன்பக்கம் நசுங்கியதால் டிரைவர் பாபு கால் மாட்டிக்கொண்டது. அருகில் இருந்தவர்கள் உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாட்டிக்கொண்ட டிரைவரை மீட்பதற்கு முயற்சி செய்தனர். மேலும் ஜெயங்கொண்டத்தில் உள்ள தீயணைப்பு சேர்ந்த நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சில மணி நேரம் போராடி டிரைவரை வெளியே மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அரியலூரில் சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த ரெட்டிப்பாளையத்திலுள்ள அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிந்த வந்த தமிழக தொழிலாளர்களை வெளியேற்றி வெளிமாநில தொழிலாளர்களுக்கு பணி வழங்குவதை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே மத்திய தொழிற் சங்க மையம்(சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் திருவேட்டை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையில் வெளியேற்றிய உள்ளூர் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், வெளிமாநில தொழிலாளர்களை உடனடயாக வெளியேற்ற வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் அளித்த விவசாயின் குடும்பத்தினர் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலர் துரைசாமி, துணைத் தலைவர்கள் சிற்றம்பலம், சந்தானம், துரைராஜ், துணைச் செயலர் தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது.
    • இரண்டு சக்கர வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நபர்களை விட அதிகமான எண்ணிக்கையில் செல்லக்கூடாது என தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினார்.

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அரியலூர் போக்குவரத்து காவல் நிலையை ஆய்வாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனத்தை இயக்க கூடாது. இரண்டு சக்கர வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நபர்களை விட அதிகமான எண்ணிக்கையில் செல்லக்கூடாது என தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினார். தலைமை காவலர் சந்திரமோகன், காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி, வீரபாண்டி, கபிலேஷா மற்றும் இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அரியலூரில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூரில் செட்டி ஏரிக்கரையில் உள்ள வினை தீர்த்த மதுர காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களை பக்தர்கள் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு தாங்கள் வந்து கொண்டு வந்த பூக்களை செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




    • மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • இது குறித்த புகாரின்பேரில் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த குணசேகரனின் மகன் அய்யப்பன். இவர் கடந்த மாதம் 25-ந்் தேதி திருமானூர் சந்தையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் இருசக்கர வாகனத்தை திருடியது அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா கார்குடியை சேர்ந்த ரவியின் மகன் ராஜ்குமார்(வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் வந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆதிபடுத்தி சிறையில் அடைத்தனர்.




    • அரசு வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 49). இவரது மனைவி பொற்செல்வி(37). இவர்களுக்கு பிரபாகர்(14) என்ற மகனும், பூங்குழலி(12) என்ற மகளும் உள்ளனர். பெரியசாமி அரியலூர் பெரியார் நகர் முதல் குறுக்கு தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் இவர் அரியலூர் கோர்ட்டில் அரசு கூடுதல் வக்கீலாக பணியாற்றி வந்தார். பின்னர் பணியிட மாறுதல் காரணமாக தஞ்சாவூர் கோர்ட்டில் அரசு கூடுதல் வக்கீலாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் பொற்செல்வி தனது சொந்த ஊரான தத்தனூர் பொட்டக்கொல்லைக்கு கோவிலில் பால்குடம் எடுப்பதற்காக தனது மகளுடன் சென்றுள்ளார்.

    நேற்று முன்தினம் மாலை பிரபாகர் விளையாடுவதற்காக வெளியே சென்றார். இதையடுத்து பெரியசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். விளையாடிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பிரபாகர், கதவு பூட்டப்பட்டிருந்ததை கண்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகுநேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டில் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்ட நிலையில் பெரியசாமி பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது பற்றி அறிந்த பொற்செல்வி மற்றும் உறவினர்கள் அங்கு வந்து பெரியசாமியின் உடலை கண்டு கதறி அழுதனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் அங்கு வந்து, ெபரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூடுதல் பணிச்சுமை காரணமாக பெரியசாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    • சிமெண்டு ஆலை அதிகாரிகள் வீடுகளில் 70 பவுன் நகைகள் கொள்ளை போனது.
    • கொள்ளை நடந்த வீடுகளில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஆலத்தியூரில் ராம்கோ சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலையின் மேலாளர்களாக சுதர்சன், நாராயணன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களும், அந்த ஆலையில் பணியாற்றும் மற்ற அதிகாரிகளும் அப்பகுதியில் உள்ள சிமெண்டு ஆலை அலுவலர்கள் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமண நாளையொட்டி சுதர்சன் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுவிட்டார். இதேபோல் நாராயணன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த குடியிருப்புக்குள் புகுந்த மர்மநபர்கள், அடுத்தடுத்து மொத்தம் 8 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். நேற்று காலை அந்த வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில், சுதர்சன் வீட்டில் இருந்த 57 பவுன் நகைகளையும், நாராயணன் வீட்டில் இருந்த 13 பவுன் நகைகளையும், மற்ற 6 வீடுகளிலும் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் குடியிருப்பு வளாகத்தை சுற்றி ஓடி வந்து படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளை நடந்த வீடுகளில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் போன்றவர்களையே பல கட்ட சோதனை செய்யும் சிமெண்டு ஆலையின் செக்யூரிட்டி சிஸ்டத்தை மீறி எப்படி திருடர்கள் உள்ளே புகுந்து கொள்ளை அடித்துவிட்டு, தப்பி சென்றனர் என்பது பற்றியும், மொத்தம் எவ்வளவு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியலூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறையில் 10 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 750 குடும்ப ஓய்வூதியமாக வழங்கிட வேண்டும், அரசு துறையில் காலி பணியிடங்களில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி வழங்கிட வேண்டும், பணியில் உள்ளவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சிற்றுண்டித் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.செயலர் தமிழரசன், பொருளாளர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


    • 2 டன் அரிசி, லோடு வேன் பறிமுதல்
    • சிறையில் அடைப்பு

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில், குடிமை பொருட்கள் கடத்தல் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் போலீசாருடன் இணைந்து வாரியங்காவல் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சட்ட விரோதமாக டாட்டா ஏஸ் வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்தி வந்த கல்லாத்துர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கொளஞ்சி(வயது 31) என்பவரை கைது செய்து அவர் கடத்தி வந்த 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் டாட்டா ஏசி வாகனத்தையும் பறி முதல் செய்து விசாரணை மேற்கொண்டு, அரிசி கடத்திச் சென்ற கொளஞ்சி யை பெரம்பலூர்நீதிம ன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்ப ட்டார். ரேஷன் அரிசி அரைக்கப்பட்ட மில்லின் உரிமையாளரைகைது செய்ய வும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    • 9 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    சென்னை ராணிப்பேட்டை மற்றும் வில்லாவாக்கம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (வயது 64). இவரது மகன் ஸ்ரீதர் (வயது 29). இருவரும் மயிலாடுதுறை அருகே உள்ள பேரளம் கோவிலுக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் உறவினர்கள் சிறுவர்கள் உட்பட 9 பேரும் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆண்டிமடம்- விருத்தாச்சலம் செல்லும் சாலையில் கருக்கை பஸ் நிறுத்தம் அருகே இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் இரண்டு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ராணிப்பேட்டையை சேர்ந்த மனோகரனுக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிந்தது, மேலும் ஒரு கையும் முறிந்த நிலையில் ஸ்ரீதருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தந்தை மகன் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் எதிரே வந்த காரில் பொன்பரப்பி கிராமத்தைச் வெற்றிவேல் (வயது 40), உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா (வயது 27) ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் அந்த காரில் வந்த ஸ்ரீதர் பவித்ரா உட்பட ஏழு பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த காரில் வந்த இரண்டு சிறுவர்கள் காயம் ஏதும் இல்லாமல் உயிர் தப்பினர்.

    ×