என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
    X

    2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

    • 9 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    சென்னை ராணிப்பேட்டை மற்றும் வில்லாவாக்கம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (வயது 64). இவரது மகன் ஸ்ரீதர் (வயது 29). இருவரும் மயிலாடுதுறை அருகே உள்ள பேரளம் கோவிலுக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் உறவினர்கள் சிறுவர்கள் உட்பட 9 பேரும் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆண்டிமடம்- விருத்தாச்சலம் செல்லும் சாலையில் கருக்கை பஸ் நிறுத்தம் அருகே இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் இரண்டு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ராணிப்பேட்டையை சேர்ந்த மனோகரனுக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிந்தது, மேலும் ஒரு கையும் முறிந்த நிலையில் ஸ்ரீதருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தந்தை மகன் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் எதிரே வந்த காரில் பொன்பரப்பி கிராமத்தைச் வெற்றிவேல் (வயது 40), உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா (வயது 27) ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் அந்த காரில் வந்த ஸ்ரீதர் பவித்ரா உட்பட ஏழு பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த காரில் வந்த இரண்டு சிறுவர்கள் காயம் ஏதும் இல்லாமல் உயிர் தப்பினர்.

    Next Story
    ×