என் மலர்tooltip icon

    அரியலூர்

    • தகுதியற்ற நுகர்வோர் அறக்கட்டளை நிர்வாகிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்-அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
    • இருசக்கர வாகனம் காணாமல் போனதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் கொடுக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்தவர் எம்.ஜி.பாலசுப்ரமணியன் (வயது 52). தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவராக இருந்துவரும் இவர், கீழகாவட்டங்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் வீமன் என்பவரின் ஏஜென்ட் எனக்கூறி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இருசக்கர வாகனம் காணாமல் போனதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் கொடுக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். ஆனால் இன்சூரன்ஸ் நிறு–வனத்தினர் கேட்ட ஆவ–ணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை.

    இதேபோல், திருமழ–பாடி கிராமத்தில் வசிக்கும் சீராளனின் ஏஜென்ட் என கூறி பாலசுப்ரமணி–யன் தாக்கல் செய்த வழக்கில், இறந்த–வருக்கு அவரது மருமகன் சீரா–ளன் இறந்தவரின் வாரிசுகளை விட்டுவிட்டு காப்பீட்டுத்தொகை தர–வில்லை என வேளாண்மை இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீதும், அரியலூர் வேளாண்மை இணை இயக்குநர் மீதும் வழக்கு தொடுத்திருந்தார். செந்துறை அடுத்த சன்னாசிநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் ஏஜென்ட் என்று கூறி நிலத்தை அளந்து தரவில்லை என தெரிவித்து செந்துறை வட்டாட்சியர் மற்றும் கலெக்டர் மீதும், ஆசவீரன்குடிக்காடு கிரா–மத்தில் வசிக்கும் கலியபெ–ருமாள் என்பவருக்கு ஏஜென்டாக தாக்கல் செய்த வழக்கில், எம்.ஜி.பாலசுப்ர–மணியன் அவரது மனை–வியின் ஏஜென்ட் என்று கூறி கீழப்ப–ழுவூர் சார்பதிவாளர், அரியலூர் மாவட்ட பதிவாளர் மற்றும் திருச்சி முத்திரை கட்டண துணை கலெக்டர் ஆகியோர் மீதும் வழக்கு தொடுத்து இருந்தார்.

    இந்த 5 வழக்குகளையும் விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை–தீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் என்.பாலு, வீ.லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு, பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ததது. மேலும், தகுதியில்லாமல் வழக்கு தொடுத்தற்காக பாலசுப்பிரமணியனுக்கு ஒவ்வொரு வழக்குகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், நுகர்வோர் குறைதீர் ஆணையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் நுகர்வோரின் பிரதிநிதி என கூறி ஆஜராக எம்.ஜி.பாலசுப்பிரமணியனுக்கு தகுதி இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

    அரியலூர்:

    பல்வேறு கோரி க்கைகளை வலி யுறுத்தி அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்தில் 10 ஆண்டுகளாக பணி முடித்த சத்துணவு அமைப்பாளர்களை அமர்த்தி பதவி உயர்வு வழங்கிட வேண்டும். சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவித்திட வேண்டும். எம்.ஆர்.பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

    சிறப்பு கால முறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று முடித்துக் கொண்டனர். இந்த பேரணிக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பி.காமராஜ், மாவட்டச் செயலர் வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் மற்றும் தமிழ்நாடு சத்துணவு உழியர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம், வருவாய்த் துறை அலுவலர் சங்கம், சாலைப் பணியாளர் சங்கம், கல்வித்துறை நிர்வாக ஊழியர் சங்கம், செவிலியர் சங்கம், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




    • அரியலூர் மாவட்டத்தில் ரூ.8.15 கோடியில் சாலை தரம் உயர்த்துதல் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், குழுமூரில் நெடுஞ்சாலைத்துறை – நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு மூலம் குழுமூர்-அயன்தத்தனூர் சாலை தரம் உயர்த்துதல் பணியினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் பொதுமக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின்கீழ் இச்சாலை தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்த சாலை 5 கண்களை உடைய உயர்மட்ட பாலமும், வடிகால் வாய்க்கால் பணியையும் உள்ளடக்கியது. இப்பணி ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.

    குழுமூர்-அயன்தத்தனூர் சாலை தரம் உயர்த்துவதன் மூலம் வங்காரம், அயன்தத்தனூர், குழுமூர், சித்துடையார், வஞ்சினாபுரம், நல்லநாயக்கபுரம், அங்கனூர், சன்னாசிநல்லூர், முல்லையூர், ஆர்.எஸ்.மாத்தூர், படைவெட்டிக்குடிகாடு, சோழன்குடிகாடு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகுந்த பயன்பெறுவார்கள்.நடைபெறும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி கோட்டப்பொறியாளர் வடிவேல், உதவிக்கோட்டப் பொறியாளர் சரவணன், உதவிப்பொறியாளர் ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
    • இந்த போட்டிகளில் 2 ஆயிரத்து 68 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். பின்னர் கல்லூரி மாணவ, மாணவியர்களின் 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தை தொடங்கி வைத்து, அவர் பேசியதாவது: அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு பிரிவுடன் இணைந்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் 2 ஆயிரத்து 68 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில், கால்பந்து, கையுந்து பந்து, கபடி, மேசை பந்து உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.

    இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களது விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். இதேபோன்று மாவட்ட அளவிலானப் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்று நமது அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வீரர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ், வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார்
    • அரசியல் கட்சியினர் அஞ்சலி

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாச்சி–யாரின் மைத்துனர் ப.தங்க–வேலு (வயது 87).வழக்கறிஞரான இவர் கடந்த 1960-65 ஆம் ஆண் டுகளில் காட்டுபிரிங்கி–யம் ஊராட்சி மன்ற தலைவரா–க–வும், அரியலூர் யூனி–யன் சேர்மனாகவும் இருந்துள் ளார்.அதேபோல் 1980 முதல் 1984-ம் ஆண்டு வரை ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றி உள்ளார். தற் போது அரியலூர் ராஜாஜி நகரில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை மரணம் அடைந் தார்.அவரது உடலுக்கு சகோதரர் வி.ராமகி–ருஷ் ணன், சகோதரி மகன்களும், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆதீன பரம்பரை தர்மக்கர்த்தாக்களுமான கோ.ராமச்சந்திரன், கோ.ராமதாஸ், கோ.–வெங்கடாஜலபதி மற்றும் அனைத்து அரசியல் கட்சி–யினர் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு, அரியலூரில் உள்ள மயானத்தில் உடல் அடக்கம் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளர்.


    • நாட்டில் கொத்தடிமை தொழிலாளர் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி மகாலட்சுமி பேசினார்
    • உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு,மாவட்ட காவல் துறை, சர்வதேச நீதிக் குழுமம், சென்னை ரைஷ் சமூக சேவை ஆகியவை இணைந்து நடைத்திய மனிதகடத்தல் எதிர்ப்பு மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறை ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். மகாலட்சுமி பேசியது:-கொத்தடிமை முறைக்கு எதிராக அதிகளவில் குற்றச்சாட்டுகள் வெளியு லகத்திற்கு வருவதில்லை. மேலும் கடுமையான தண்டனைகள் இந்த கொடு ஞ்செயலைச் செய்பவருக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் இக்குற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    கொத்தடிமை முறையை ஓழிப்பதற்காக இந்தியாவில் 1976-இல் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி மீட்கப்படும் கொத்தடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக கொத்தடிமைகளுக்கு உடனடியாக ரூ.1,000மும் அடுத்ததாக ரூ.19, 000மும் நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது அவர்களின் மறுவாழ்வு க்காக வோளாண் நிலமும் அளிக்க வேண்டும். மீட்கப்ப டுபவர்களுக்கு மறுவாழ்வு வசதிகள் மற்றும் திட்டங்கள் (வாழ்வாதாரத் திட்டங்கள், ரேஷன் கார்டு, வீட்டு வசதி, அடையாள அட்டை போன்ற அனைத்தும்) கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மீட்கப்படுபவர்கள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களை குழந்தை நல குழுவிடம் ஒப்படைத்து, அவர்களுக்கு வேண்டிய மனநல ஆலோசனைகளும் மருத்துவ சட்ட உதவிகளும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் பாலியல் ரீதியான துன்புறத்தல் இருந்தாலோ அல்லது மனித கடத்தல் இருந்தாலோ அதையும் இணைத்து விசாரிக்க வேண்டும். மேலும், அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லை என்ற நிலையை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

    மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலர் அழகேசன் ,காவல்துறை ஆய்வாளர்கள் கலா, கார்த்திகேயன் மற்றும் இந்திய நீதிக் குழுமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் பிரபு, எ.மிக் ஓஸ்டின், ரைஷ் சமூக சேவை நிர்வாக இயக்குநர் அருள்தாஸ் ஆகியோர் பேசினர்.முன்னதாக அக்கல்லூ ரியின் முதல்வர் மலர்விழி வரவேற்றர். அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட கூடுதல் காவல கண்காணி ப்பாளர்கள் (இணைய குற்றப்பிரிவு)ரவிசேகரன், மதுவிலக்கு அமல்பிரிவு காமராஜ் ஆகியோர் முன்னிலையில், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதே போல் மாவட்ட த்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அந்த காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


    • போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04329228641 என்ற தொலைபேசி எண்ணையும், 9499055914 என்ற கைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகு பவர்களுக்கு உதவும் வகையில், கைதேர்ந்த பயிற்சியா ளர்களை கொண்டு பயிற்சி வகுப்பு கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள மற்றும் முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், போட்டி த்தேர்வு வெற்றியாளர்கள் ஆகியோர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04329228641 என்ற தொலைபேசி எண்ணையும், 9499055914 என்ற கைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.




    • அரியலூரில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது
    • ரூ.2.6லட்சம் கல்வி உதவிதொகை கலெக்டர் வழங்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வரி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 52 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு, 7 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இக்கூட்டத்தில் 8 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு ரூ.2.60 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும், தென்பிராந்திய தளபதி, சென்னை அவர்க ளிடமிருந்து பெறப்பட்டுள்ள பாராட்டுச் சான்றிதழ் 13 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலை வாணி, உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) சரவணன், கண்காணிப்பாளர் கலையரசி காந்தி மதி மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உடையார்பாளையம் ஏரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது
    • ஆடு, மாடு உள்ளிட்டவை விழுந்தால் எப்படி மீட்பது பற்றிய ஒத்திகை நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார் பாளையத்தில் உள்ள வேலப்ப செட்டி ஏரியில் தேசிய பேரிடர் மீட்புகுழு மற்றும் இயற்கை பேரிடர் கான கூட்டு மாதிரி செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை முன்னிலை வகித்தார். இதில் தேசிய பேரிடர் மீட்பு குழு டீம் கமாண்டர் சவுகான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு ஒத்திகைகளை செய்து காட்டினார்.இந்த பயிற்சி முகாமில் உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித், துணைத் தலைவர் அக்பர் அலி கலந்து கொண்டனர்.

    மேலும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பேரூராட்சி நிர்வாக துறை, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தேசிய மீட்பு குழுவினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சியில் ஏரி, குளம், ஆறு உள்ளிட்டவற்றில் தவறி விழுந்த நபர்களை எப்படி மீட்பது, ஆடு, மாடு உள்ளிட்டவை விழுந்தால் எப்படி மீட்பது பற்றிய ஒத்திகை நடைபெற்றது.மேலும் தவறி விழுந்தவர்களை எப்படி உயிர் காப்பது, அவர்களுக்கு முதலுதவி செய்வது உள்ளிட்டவைகளை செய்து காண்பித்து வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பயிற்சியில் ஏராளமான தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் நன்றி கூறினார்.


    • போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பத்தினை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில், தேர்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள மற்றும் முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், போட்டித்தேர்வு வெற்றியாளர்கள் ஆகியோர் https://bit.ly/facultyregistrationform என்ற Goolge Link-ல் உள்ள விண்ணப்பத்தினை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04329228641 என்ற தொலைபேசி எண்ணையும், 9499055914 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


    • மீன்சுருட்டியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
    • கடுங்குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரை கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது. மேலும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு பனிமூட்டம் நிலவியது. கடுங்குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. எதிரே வந்த வாகனங்கள் சரிவர தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் விவசாய பணிகள் காலை 9 மணிக்கு மேல் தான் நடைபெற்றது.


    • அரியலூர் மாவட்டத்துக்கு திட்டம், நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்
    • நிகழ்ச்சியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து அரியலூர் மாவட்ட நண்பர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில். அரியலூர் இன்றும், நாளையும் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டமான அரியலூர் பகுதிகளுக்கு புதிய அரசியலமைப்புச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி சிறப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரியலூர் மாவட்ட மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், சிறு, குறு தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும், அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லையை விரிவுப்படுத்த வேண்டும், ஒட்டு மொத்த அரியலூர் மாவட்டத்தின் சமச்சீரான வளர்ச்சிக்கு வகை செய்ய மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர்கள் விக்டர், நல்லப்பன், புகழேந்தி, புலவர் அரங்கநாடன், தமிழ்களம் இளவரசன், வழக்குரைஞர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகவேலாயுதம் சிறப்புரையாற்றினார். இதில் நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் கலந்து கொண்டார். முன்னதாக சமூக ஆர்வலர் ஜான்.திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார்.


    ×