என் மலர்
அரியலூர்
- கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி பேராட்டத்தில் ஈடுபட்டனர்
- அகவிலைப்படி, நிலுவைதொகையுடன் வழங்க கோரிக்கை
அரியலூர்,
பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் அருகில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலை ப்படியை அறிவித்து நிலுவைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பை உடண டியாக வழங்க வேண்டும். பல்வேறு துறைகளில் தொகுப்பூதியத்திலும், சிறப்பு காலமுறை ஊதியத்திலும் பணி யாற்றும் பணியா ளர்கள், ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறைஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.சாலைப் பணியா ளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைறப்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்யும் முறையை உடனடியாக தடைசெய் வேண்டும். ஆசிரியர்களை தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணசாமி, கருணாநிதி, மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என வலியுறுத்தல்
- இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில், பெரம்பலூர் நேரு இளையோர் மையம் சார் பில் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன் றம் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். இதனை போக்கு–வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-நம்முடைய வாழ்க்கை ஒரு சாதரண மனிதனின் வாழ்க்கையை போல முடிந்து விடாமல் நம்முடைய சமுதாயத்துக்கு பயன்படும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக நேரு இளையோர் மையம் என்ற அமைப்பு ஏற்ப–டுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், இளை–ஞர்களை இணைத்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது பொதுமக்களின் கடமையா–கும்.
தமிழ்நாடு ஜனநாயத்தை பாதுகாப்பதில் இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. சொந்த தாய்மொழியை பாதுகாக்க போரிட்டவர்கள் நமது தமிழர்கள் ஆவார். பேசும் மொழி நமது அடையாளம் ஆகும். மகராஷ்ட்ராவில் இந்தி மொழியை பேசியதால், அவர்களது தாய்மொ–ழியான மராட்டிய மொழியை மறந்து, தமது அடையாளத்தை இழந் துள்ளனர். தற்போது அவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு தெரிவித்து, தாய் மொழிக்காக போராடி வரு–கின்றனர்.
எனவே நமது அடையாளத்தை இழக்கக்கூடாது. நமது மொழியை பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது.
தமிழகத்தில் உயர்க்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் ஆகும். இதற்கு காரணம் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள முதல்வர் கருணாநிதி ஆகியோர்களால் செயல்படுத்திய கல்வித் திட்டங் களே ஆகும். அவர்கள் வழியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கல்விக் காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். படித்த இளைஞர்கள் திறன் பயிற்சியுடன் வேலை வாய்ப்பை பெற வேண் டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.மாணவிகள் உயர்க்கல்வி படிக்கும் போது மாதம் ரூ.1,000 பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத் தையும் செயல்படுத்தியுள் ளார். இது போன்ற நடவடிக்கைகளால் தமிழகம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்றார்.நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசுகையில், இந்தியாவில் கல்வி உதவித் தொகை குறைக்கப்பட்டதின் காரணமாக உயர்கல்வி படிப் போர்களின எண்ணிக்கை நாளுக்கு குறைந்து வருகிறது. இதுகுறித்து மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். படிக்கும் போதே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு இருக்க வேண்டும். மாணவர்கள் ஆழமான கருத்தை உள்வாங்கி படிக்க வேண்டும். குறிப் பாக கல்வியில வேட்கை உருவாக்கிக் கொள்ளவேண்டும். கல்வி மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் என்றார்.
- வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு நடத்தினார்
- மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உடனிருந்தார்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் உள் ளிட்ட பகுதிகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல் வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தோட் டக்கலைத் துணை இயக்குநர் ஆனந்த், பொது சுகாதார துணை இயக்குநர் கீதாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.ஆய்வில், ஜெயங்கொண் டம் ஒன்றியம், மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, மாணவர்களின் எண்ணிக்கை, உணவின் தரம் போன்றவை குறித்து கேட்டறிந்ததுடன் மாண–வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை சாப் பிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், கீழக்குடியிருப்பு, கொம்மேடு கிராமத்தில் உள்ள பயோ குப்பைக் கிடங்கினை ஆய்வு செய்து குப்பைகள் தரம் பிரிக் கப்படும் முறைகள் குறித் தும், குப்பைகள் மறு–சுழற்சி செய்யப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், செங்குந்தபுரத்தில் செயல்ப–டுத்தப்படும் திடக்க–ழிவு மேலாண்மைத் திட்டம் குறித்தும் நேரில் பார்வை–யிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து கழுவந் தோண்டி கிராமத்தில் ரூ.40.91 லட்சம் மதிப்பீட்டில் கழுவந்தோண்டி மயான சாலையில் கட்டப்பட்டு வரும் பாலம் அமைத்தல் பணியையும், ரூ.2.78 லட்சம் மதிப்பீட்டில் நீதிமன்ற சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் வடிகால் வாய்க்கால் பணியையும், ரூ.4.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதிரடிக்கும் களம் கட்டுமான பணியையும் பார்வையிட்டு நடைபெறும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத் தினார்.பின்னர், பெரியவளையம் கிராமத்தில், தோட்டக்க–லைத்துறையின் சார்பில் மானிய விலையில் ரூ.75,000 மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள பண்ணை குட்டை பார்வையிட்டார். தொடர்ந்து ஆமணக்கந் தோண்டி அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து உட்கோட்டை (வடக்கு) கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் நோயாளிகளுக்கு தாமதமின்றி தரமான சிகிச்சைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
- சாலை பணிக்கு கமிஷன் கேட்டவர் கைது
- லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்
அரியலூர்,
அரியலூர் ஊரக வளர்ச்சி துறையில் உதவி கோட்ட பொறியாளராக வஹிதா பானு பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் ஜெயங்கொண்டம் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் சாலை பணி களம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். இதில் ஒப்பந்த தொகையில் 2 சதவீதம் கமிசன் கேட்டுள்ளார். இதனை பெறுவதற்கு ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு சென்றுள்ளார். அப்போது ரசாயனம் பூசப்பட்ட பணத்தை ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலி சார் கையும் களவுமாக கைது செய்தனர்.இது குறித்து கங்கைகொண்ட சோழபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வஹிதாபானுவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.
- திருமண ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொடர்பு
- போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை
அரியலூர்
இருகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (வயது 24). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த கல்லூரி மாணவி (21) ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த மாணவி பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் போது அஜித் குமார் காதல் வலை விரித்தார்.தொடக்கத்தில் மாணவி காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.அப்போது அஜித், நீ என்னை காதலிக்கவில்லை என்றால் நான் செத்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதுபோன்ற தொடர் டார்ச்சரால் அந்த மாணவி காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். அதன் பின்னர் அஜித் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார்.வேறு பெண் பார்க்கிறார்கள்இதற்கிடையே அஜித்துக்கு அவரது பெற்றோர் வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவி அஜித்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தார். தனது பெற்றோரின் பேச்சை என்னால் மீற முடியாது எனக் கூறியதாக தெரிகிறது.இதனால் காதல் தொலைபேசி தனது கற்பை சூறையாடிய அஜித் மீது பாதிக்கப்பட்ட மாணவி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தான் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கல்வி கடன் வாங்கியவர் இறந்த நிலையில் கோர்ட்டில் வழக்கு
- செய்வதறியாது மாணவர் குடும்பம் தவிப்பு
அரியலூர்,
அரியலூர் அருகே திருமானூர்ப குதியை ேசர்ந்தவர் பன்னீர்செல்வம் விவசாய குடும்பத்தை சார்ந்தவர், அவரது மகன் அரவிந்த், இவர் ப்ளஸ்2 தேர்ச்சி பெற்ற பின்பு கரூரிலுள்ள தனியார்கல்லூரியில் இன்ஞ்னியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார், தொடர்ந்து படிக்கவைக்க முடியாமல் சிரம ப்பட்டுவந்த பன்னீ ர்செல்வம் திருமழப்பாடியில் உள்ள வங்கியில் 2013ஆம் ஆண்டு 2லட்சம் கல்வி கடன் பெற்றுள்ளார், வேலை கிடைக்காமல் தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்துவந்துள்ளார்.2022ம் ஆண்டு திருவையாறில் நடந்த சாலை விபத்தில் அரவிந்த் இறந்துவிட்டார், வங்கி நிர்வாகம் கல்விகடன்களை வசூலிக்க திவிரம் காட்டியது, ஆனால் பன்னீர்செல்வம் வங்கிக்கு சென்று கல்வி கடன் செலுத்த வசதியுமில்லை, எனது மகனும் இறந்தும் விட்டான், கல்வி கடனை ரத்து செய்யவேண்டும் என கோரி மகனின் இறப்பு சான்றிதழ் இணைத்து எழுத்து மூலமாக மனு கொடுத்துள்ளார். இந்த மனுவை முதலமை ச்சருக்கும், அரசுதுறை அதிகாரி களுக்கும், வங்கி உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி யுள்ளார்.இந்நிலையில் அரியலூரில் உள்ள சப்கோர்ட்டில் திருமழ ப்பாடியில் உள்ள வங்கி நிர்வாகம் அரவிந்த் அவரது தந்தை பன்னீர்செல்வம் மீது கல்விகடன் வசூல் செய்ய வழக்கு தொடர் ந்துள்ளனர். கல்வி கடன் வாங்கியது ரூ.2லட்சம், ஆனால் அசல் வட்டி எனக்கணக்கிட்டு ரூ.5லட்சம் கேட்டு சாலை விபத்தில் இறந்த அரவிந்தனுக்கு கோர் ட்டிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரனை ஜீன் 7-ந் தேதி போடப்பட்டுள்ளது. கல்வி கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுக்கப்ப ட்டாலும், கல்வி கடன் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைத்தாலும், இறந்தவர் மீது கல்வி கடன் வசூல் செய்ய நேட்டிஸ் அனுப்பியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- திமுக முன்னோடிகளுக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டது
அரியலூர்,
கங்கை கொண்ட சோழபுரம் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு " மாபெரும் இரத்த தான முகாம்" மற்றும் " நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா" நடைபெற்றது.ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா. மணிமாறன், அவர்கள் தலைமையில் மாவட்ட கழக பிரதிநிதி எஸ்.கே.பி. சங்கரன், வரவேற்புரை ஆற்றனார்.தலைமை செயற்குழுஉறுப்பினர் எம். பி.பாலசுப்ரமணியன், முன்னிலையில் மாநில சட்ட திட்ட திருத்தகுழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர்.நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்."இரத்த தான முகாம்" விழாவில் கழக முன்னோடிகளுக்கு புத்தாடை வழங்கி, மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் கொண்டு பொது மக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.முகாமில் பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.எம். பொய்யாமொழி. மாவட்ட பொருளாளர் கு. இராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் வி.எம். ஷாஜகான் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீர (சிவா) என்கிற சிவகுருநாதன், நன்றி உரை ஆற்றி விழாவினை நிறைவு செய்தார்.
- போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்
- செல்போன்கள், பணம் பறிமுதல்
ஆலங்குடி,
ஆலங்குடியில் திருட்டு லாட்டரி சீட்டுகள் விற்பதாக ஆலங்குடி போலீ க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்தைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சித்தி விநாயகர் கோவில் அருகில் கம்பர் தெருவை சேர்ந் ராஜா மகன் அய்யனார் (வயது 21) செட்டிகுளம் வடகரையில் லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்தனர்,அப்போது அங்கு வந்த தனிப்படை போலீஸ் சார் கைது செய்தும் மே லும் அவரிடமிருந்து மொபைல் 2, ரூபாய் 7,350 இவைகளை பறிமுதல் செய்த போலீசார் ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்டைத்தனர்.பின்னர் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- திருவையாறில் நடந்த சாலை விபத்தில் அரவிந்த் எதிர்பாராத விதமாக இறந்தார்.
- கல்வி கடன் வசூல் செய்ய இறந்த மாணவனுக்கு நேட்டிஸ் அனுப்பியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:
அரியலூர் அருகே திருமானூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் விவசாயி. இவரது மகன் அரவிந்த். இவர் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற பின்பு கரூரிலுள்ள தனியார் கல்லூரியில் என்ஜீனியரிங் படிப்பில் சேர்ந்தார்.
அப்போது பன்னீர்செல்வம் மகனை தொடர்ந்து படிக்க வைக்க திருமழப்பாடியில் உள்ள வங்கியில் 2013-ம் ஆண்டு ரூ.2 லட்சம் கல்வி கடன் பெற்றுள்ளார். பின்னர் படிப்பை முடித்த அரவிந்தனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்துவந்தார்.
இதற்கிடையே 2022ம் ஆண்டு திருவையாறில் நடந்த சாலை விபத்தில் அரவிந்த் எதிர்பாராத விதமாக இறந்தார்.
இருப்பினும் வங்கி நிர்வாகம் கல்வி கடன்களை வசூலிக்க தீவிரம் காட்டியது. இதையடுத்து பன்னீர்செல்வம் வங்கிக்கு சென்று கல்வி கடன் செலுத்த வசதி இல்லை, எனது மகனும் இறந்து விட்டான், கல்வி கடனை ரத்து செய்யவேண்டும் என கோரி மகனின் இறப்பு சான்றிதழ் இணைத்து எழுத்து பூர்வமாக மனு கொடுத்துள்ளார். இந்த மனுவை முதலமைச்சருக்கும், அரசுதுறை அதிகாரிகளுக்கும், வங்கி உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் அரியலூரில் உள்ள சப்-கோர்ட்டில் திருமழப்பாடியில் உள்ள வங்கி நிர்வாகம் இறந்த அரவிந்த் அவரது தந்தை பன்னீர்செல்வம் மீது கல்விகடன் வசூல் செய்ய வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அசல் வட்டி எனக்கணக்கிட்டு ரூ.5லட்சம் கேட்டு சாலை விபத்தில் இறந்த அரவிந்தன் மற்றும் அவரது தந்தைக்கு கோர்ட்டிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கல்வி கடன் வசூல் செய்ய இறந்த மாணவனுக்கு நோட்டீஸ் அனுப்பியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
- 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் மகள் மோகனா(வயது 21). இவர் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
- நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகளில்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகளில் பொதுமக்களிடம் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, வரியில்லா இனம் மற்றும் குத்தகை இனம் உள்ளிட்ட வரிகள் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.5 கோடி வரி வசூல் பாக்கி உள்ள நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் நகராட்சி ஆணையர் மூர்த்தி, மேலாளர் அன்புச்செல்வி, பொறியாளர் ராஜகோபாலன் மற்றும் நகராட்சி குடிநீர் பொருத்துனர் பாண்டியன் உள்ளிட்ட பணியாளர்கள் சேர்ந்து அதிரடியாக வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வரியில்லா இனம், குத்தகை இனம் செலுத்த வேண்டியவற்றை தற்போது நகராட்சி நிர்வாகம் அதிரடியாக தீவிர வசூலில் இறங்கி உள்ளது. நேற்று சின்னவளையம் மற்றும் கீழக்குடியிருப்பு பகுதிகளில் வரி செலுத்தாத 18 பேரின் குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளனர். மேலும் இதுபற்றி நகராட்சி ஆணையர் கூறும்போது, வரி செலுத்த தவறுவோர் மீது ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட மேல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் ஜெயங்கொண்டம் அண்ணாசிலை பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத வீடுகளில் உடனடியாக குடிநீர் இணைப்புகளை துண்டித்து அதிரடி வரி வசூல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.fil
- வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செந்துறை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
- தொடர் திருட்டில் ஈடுபட்ட
அரியலூர்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் புரட்சித்தமிழன் (வயது 27). இவர் கடந்த 15.10.2022 அன்று பரணம் கிராமத்தை சேர்ந்த மாடு மேய்க்கும் பெண் ஒருவரிடம் இருந்து 4½ பவுன் தாலிச்சங்கிலியை பட்டப்பகலில் பறித்து சென்றார். இந்த வழக்கில் இரும்புலிக்குறிச்சி போலீசார் புரட்சித்தமிழனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே அரியலூர் மாவட்டம் முழுவதும் 11 திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த 20.12.22 அன்று வழக்கம்போல் நீதிமன்ற காவலுக்காக செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புரட்சித்தமிழனை போலீசார் அழைத்து வந்தனர். அவரை பார்க்க அவரது மனைவி லோகபிரியா கோர்ட்டிற்கு வந்துள்ளார். திடீரென தனது கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து லோகபிரியா தற்கொலைக்கு முயன்றார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் வக்கீல்கள் அவரை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் இந்த வழக்கை செந்துறை குற்றவியல் நீதிபதி ஏக்னஸ் ஜெபகிருபா தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார். 5 மாதத்தில் அனைத்து சாட்சிகளையும் விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு அளித்தார். தீர்ப்பில், புரட்சித்தமிழனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு அளி த்து உத்தரவிட்டார்.






