என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவியுடன் உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றியவர் கைது
    X

    கல்லூரி மாணவியுடன் உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றியவர் கைது

    • திருமண ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொடர்பு
    • போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை

    அரியலூர்

    இருகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (வயது 24). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த கல்லூரி மாணவி (21) ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த மாணவி பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் போது அஜித் குமார் காதல் வலை விரித்தார்.தொடக்கத்தில் மாணவி காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.அப்போது அஜித், நீ என்னை காதலிக்கவில்லை என்றால் நான் செத்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதுபோன்ற தொடர் டார்ச்சரால் அந்த மாணவி காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். அதன் பின்னர் அஜித் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார்.வேறு பெண் பார்க்கிறார்கள்இதற்கிடையே அஜித்துக்கு அவரது பெற்றோர் வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவி அஜித்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தார். தனது பெற்றோரின் பேச்சை என்னால் மீற முடியாது எனக் கூறியதாக தெரிகிறது.இதனால் காதல் தொலைபேசி தனது கற்பை சூறையாடிய அஜித் மீது பாதிக்கப்பட்ட மாணவி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தான் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×