என் மலர்
கர்நாடகா தேர்தல்
- கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
- தினமும் வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் 3 மணி வரை நடைபெறும்.
பெங்களூரு :
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திட்டமிட்டபடி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும். அதனால் அந்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது, உடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவார்கள்.
ஆளும் பா.ஜனதா இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மூன்று கட்சிகளும் முழுமையாக வேட்பாளர் பட்டியலை அறிவிக்காததால் கர்நாடக தேர்தல் களம் இதுவரை மந்தநிலையில் உள்ளது.
மனுதாக்கல் நாளை தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மனு தாக்கல் தொடங்கினாலும், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் தான் மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
- முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பாரம்பரிய தொகுதியான ஷிகான் தொகுதியில் களமிறங்குகிறார்.
- கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து அமைச்சர் அசோகா போட்டியிடுகிறார்.
பெங்களூரு:
கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை தொடங்கிய நிலையில், ஆளும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்களில் பலருக்கு வாய்ப்பு கொடுக்காமல், புதுமுகங்களை களமிறக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்ததால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் பாஜக தேர்தல் குழு சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்தது.
இந்நிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 52 பேர் புதுமுகங்கள், 8 பேர் பெண்கள். பல எம்எல்ஏக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. 32 வேட்பாளர்கள் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பட்டியல் சமூகத்தையும், 16 பேர் பழங்குடியினர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
அமைச்சர் அசோகா தனது சொந்த தொகுதியான பத்மநாபநகர் மற்றும் கனகபுரா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பாரம்பரிய தொகுதியான ஷிகான் தொகுதியில் களமிறங்குகிறார். கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, தந்தையின் பாரம்பரிய தொகுதியான சிகாரிபுரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தனது பாரம்பரிய தொகுதியான சிக்மகளூர் தொகுதியிலும், மாநில அமைச்சர் சோமண்ணா, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து வருணா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
கர்நாடக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.
- ஹூப்ளி தொகுதி எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷெட்டர், இதுவரை 6 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.
- தேர்தலில் இருந்து ஒதுங்கும் பேச்சுக்கே இடமில்லை என ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டமாக கூறினார்.
பெங்களூரு:
கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏவும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர், கட்சிக்கு எதிராக தேர்தலில் குதிக்க உள்ளார். மற்றவர்களுக்கு வழிவிடும்படி கட்சி தலைமை கேட்டுக் கொண்டதால் வருத்தம் அடைந்ததாகவும், தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்றும் ஏற்கனவே அவர் கூறியிருந்தார்.
தற்போதைய ஹூப்ளி தொகுதி எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷெட்டர், இதுவரை 6 தேர்தல்களில் வெற்றிவாகை சூடி உள்ளார். 2018ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் நல்வாட் என்பவரைவிட 21000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தனது முடிவு குறித்து செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில், 'கடந்த 6 தேர்தல்களில் நான் 21,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய மைனஸ் பாயின்ட் என்ன? கட்சியின் முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நான் ஏற்கனவே எனது தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிவிட்டேன். அதை மேலும் தீவிரப்படுத்துவேன். தேர்தலில் இருந்து ஒதுங்கும் பேச்சுக்கே இடமில்லை' என திட்டவட்டமாக கூறினார்.
- பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
- வேட்பாளர் தேர்வில் தனது பெயர் இடம்பெறாது என ஈஸ்வரப்பா சூசகமாக தெரிவித்திருந்தார்.
பெங்களூரு:
கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஆனால், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் வியாழக்கிழமை முடிவடைய உள்ள நிலையில், பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதாகவும், பாஜக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி பாஜக ஆட்சியமைக்க உதவி செய்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா (வயது 74) தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். வேட்பாளர் தேர்வில் தனது பெயர் இடம்பெறாது என கடந்த மாதம் அவர் சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதுதொடர்பாக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
- ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் களத்தில் இருப்பதால் 3 முனை போட்டி நிலவுகிறது.
- 170 முதல் 180 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலில் வெளியிடப்படும்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் களத்தில் இருப்பதால் 3 முனை போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி முதல்கட்டமாக 124 தொகுதிக்கும், 2-வது கட்டமாக 41 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. மதசார்பற்ற ஜனதாதளம் 93 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரியான எடியூரப்பா தெரிவித்துள்ளார். 170 முதல் 180 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலில் வெளியிடப்படும் என்று அவர் டெல்லியில் இன்று காலை நிருபர்களிடம் கூறினார்.
பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
- காங்கிரஸ் கட்சிக்கு முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா மட்டுமே பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
- பிரபல நடிகர், நடிகைகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதால் கர்நாடகா அரசியலில் பா.ஜ.க. முந்தி செல்வதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க போராடி வருகிறது.
கர்நாடகாவில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் பொம்மையை பிரபல நடிகர் சுதீப் திடீரென சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுதீப் வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். பா.ஜ.க. சார்பில் எங்கும் போட்டியிட போவதில்லை கட்சியிலும் சேரப் போவதில்லை என்றார்.
நடிகர் சுதீப்பின் முடிவிற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சக நடிகரான பிரகாஷ்ராஜ் மற்றும் ரசிகர்கள் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சுதீப் சித்ரா துர்கா மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர். இவர் வால்மீகி நாயக்கர் இனத்தை சேர்ந்தவர். வால்மீகி நாயக்கர் இனத்திற்கு கர்நாடகாவில் 4 சதவீத ஓட்டு வங்கி உள்ளது. இந்த ஓட்டுகள் பா.ஜ.க.வுக்கு கை கொடுக்கும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முந்தைய கால கட்டங்களில் நடிகர் சுதீப் பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்ததால் முதலில் காங்கிரஸ் கட்சி சுதிப்பை தன் பக்கம் இழுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வந்தது.
அவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால் இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த காங்கிரசார் சற்று கலக்கமடைந்துள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகர் நடிகைகளிடம் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர் தேர்தல் பிரசாரத்திற்கு நடிகர் நடிகைகளை வரவழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் பிரபலமாக உள்ள இளைய தலைமுறை நடிகர்கள் சுமலதாவின் மகன் அபிஷேக் அம்ரித், தர்ஷன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா மட்டுமே பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர், நடிகைகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதால் கர்நாடகா அரசியலில் பா.ஜ.க. முந்தி செல்வதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
- காங்கிரஸ் கட்சி 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை முடுக்கிவிட்டுள்ளது.
- மாநிலத்தில் அடிப்படை மற்றும் அரசியல் குறித்த தெளிவு காங்கிரசுக்கு இல்லை என பொம்மை விமர்சனம்
சிவமோகா:
கர்நாடக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும் காங்கிரஸ் கட்சி, மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை முடுக்கிவிட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சிவமோகாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் நியமித்துள்ள வேட்பாளர்களில் 60 வேட்பாளர்கள் பொருத்தமான வேட்பாளர்கள் இல்லை. எனவே, எங்கள் கட்சியில் இருந்து தலைவர்களை இழுக்க முயற்சிக்கின்றனர். நான் ஏற்கனவே கூறியபடி, டிகே சிவக்குமார் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும்போது எங்கள் எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு, சீட் கொடுப்பதாக கூறி கட்சியில் இணையும்படி கேட்டிருக்கிறார். மாநிலத்தில் அடிப்படை மற்றும் அரசியல் குறித்த தெளிவும் காங்கிரசுக்கு இல்லை. எனவே, கடந்த தேர்தலை விட இந்த முறை அவர்கள் (காங்கிரஸ்) மோசமான தோல்வியை சந்திப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக எம்எல்ஏக்களுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்ததாகவும், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத தொகுதிகளில் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் பசவராஜ் பொம்மை சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் 2019ல் பாஜக தலைவர்கள்தான் தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை இழுத்ததாக டி.கே.சிவக்குமார் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
- அமித்ஷா, ஜே.பி.நட்டா இருவரையும் இன்று பிற்பகலில் அண்ணாமலை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதால் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
சென்னை:
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலை பா.ஜனதா, காங்கிரஸ் மத சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக சந்திக்கின்றன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை 2 கட்டங்களாக வெளியிட்டுள்ளது. ஒரு கட்டமாக 100 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலையும், 2-வது கட்டமாக 42 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கி விட்டது.
அதே போல் பா.ஜனதா கட்சியும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. கர்நாடக மாநில பா.ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளார். பெங்களூர் புறநகரில் உள்ள ஒரு ஓட்டலில் பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழுகூட்டம் நடைபெற்றது. அதில் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை 10.30 மணிக்கு அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அவர்களிடம் கர்நாடக பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை காண்பித்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்கிறார்.
அமித்ஷா, ஜே.பி.நட்டா இருவரையும் இன்று பிற்பகலில் அண்ணாமலை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதால் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில் தான் அண்ணாமலை அவசரமாக இன்று பா.ஜனதா வேட்பாளர் பட்டியலுடன் டெல்லிக்கு சென்றுள்ளார்.
- சட்டவிரோதமாக யார் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் தான் பயப்பட வேணடும்.
- முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது.
பெங்களூரு :
பெங்களூருவில் மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததும், அதற்காக ஒரு காரணத்தை கூறுவார்கள். பொதுவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரியில்லை என்பார்கள். தேர்தல் ஆணையமே சரியில்லை என்றும் கூட காங்கிரஸ் தலைவர்கள் சொல்லி இருக்கின்றனர். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர்கள் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் பேச்சு மூலமாகவே தெளிவாகி இருக்கிறது. ஏனெனில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்த தயாராக இருப்பதாக சுர்ஜேவாலாவும், சித்தராமையாவும் கூறி இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போதே பயம் வந்துள்ளது.
தேர்தலில் தோல்வி அடைந்தால், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை காரணம் என்று கூறி தப்பிக்க முயற்சிப்பார்கள். சட்டவிரோதமாக யார் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் தான் பயப்பட வேணடும். சுர்ஜேவாலா எதற்காக பயப்பட வேண்டும். கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டனர்.
கர்நாடகத்தில் புதிதாக 12 லட்சம் இளம் வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். அந்த இளம் வாக்காளர்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தயாராகி விட்டனர். முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. பதவிக்கான போட்டி ஒரு போதும் நிற்க போவதில்லை. இதுவே அவர்களது தோல்விக்கான மற்றொரு காரணமாக அமைய போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நானும், தேவகவுடாவும் நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை.
- பஞ்சரத்னா யாத்திரைக்கு மக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பெங்களூரு :
பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பா.ஜனதா ஆட்சியில் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வளர்ச்சி பணிகள் செய்திருந்தால் தான் சட்டசபை தேர்தலில், தங்களது ஆட்சியில் செய்த பணிகள் குறித்து மக்களிடம் கூறி பிரசாரம் செய்ய முடியும். அதனால் பிரசாரத்திற்காக நடிகர்கள், நட்சத்திர பேச்சாளர்களை பா.ஜனதாவினர் அழைத்து வருகின்றனர்.
நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது, அவரது தனிப்பட்ட விஷயமாகும். இதற்காக நடிகர்கள் பற்றி நான் கீழ்மட்டமாக பேச விரும்பவில்லை. நடிகர்கள் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்ப கூடியவர்கள். அவர்களை ஒரு கட்சிக்கு மட்டும் தேவைப்படுவராக மாற்றக்கூடாது.
சினிமா நடிகர்களை பார்க்க மக்கள் கூடுவார்கள், ஆனால் அது ஓட்டுக்களாக மாறுவதில்லை. நடிகர்களை பார்க்க வரும் மக்கள், அந்த கட்சிக்கு தான் ஓட்டுப்போடுவார்கள் என்று சொல்ல முடியாது. ஜனதாதளம் (எஸ்) கட்சியை பொறுத்தவரை நானும், தேவகவுடாவும் நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை. எங்கள் கட்சியில் இருக்கும் அனைத்து தொண்டர்களும் நட்சத்திர பேச்சாளர்கள் தான். அதற்கான திறமை எங்களது கட்சி தொண்டர்களிடம் இருக்கிறது.
பஞ்சரத்னா யாத்திரைக்கு மக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலை சந்திக்க எங்கள் கட்சி பஞ்சரத்னா திட்டங்களை கொண்டுள்ளது. அந்த திட்டங்களை மக்களிடம் கூறி பிரசாரம் செய்வோம். எங்கள் கட்சிக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை அழைத்து வருவது குறித்து இன்னும் முடிவாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
- சித்தராமையா முதல்-மந்திரி ஆகி விடலாம் என்று கனவு காண்கிறார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணியில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. மாவட்ட அளவில் உள்ள கட்சியின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அவர்களது கருத்துகள் கேட்டு அறிந்தவுடன், பா.ஜனதாவின் தலைமை தேர்தல் குழுவுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்படும். எனவே இன்னும் வாரத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் இருக்கிறது. பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
சித்தராமையா முதல்-மந்திரி ஆகி விடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது. 2013-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தார். 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எதற்காக அவரை மக்கள் புறக்கணித்தனர். முதல்-மந்திரியாக இருந்த போது மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்திருந்தால், மக்கள் புறக்கணித்திருக்க மாட்டார்கள்.
தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் சித்தராமையாவை மக்கள் புறக்கணிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியில் எதற்காக இடஒதுக்கீடு வழங்கவில்லை. நான் தற்போது திடமான முடிவை எடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் விதமாக இடஒதுக்கீடு வழங்கி அறிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
- அரசியலுக்கும் வர மாட்டேன்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா கட்சி தயாராகி வருகிறது. இந்தநிலையில், பிரபல கன்னட நடிகர் சுதீப்பை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்தது.
இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். காங்கிரஸ் கட்சியும் சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கிடையில், நடிகர் சுதீப் பா.ஜனதாவில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், நடிகர் சுதீப்பும் இணைந்து நிருபர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் சுதீப் கூறியதாவது:-
நான் சினிமாவில் கஷ்டப்பட்ட காலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எனக்கு ஆதரவாக இருந்திருந்தார். கஷ்டமான நேரத்தில் எனக்கு உதவிகளையும் செய்துள்ளார். தனக்கு ஆதரவாக சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்யும்படி பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டார்.
அதன்படி, பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். அவர், எந்த தொகுதிகளில் எல்லாம் பிரசாரம் செய்ய சொல்கிறாரோ, அங்கு நான் பிரசாரம் செய்வேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. கட்சியை பார்த்து பிரசாரம் செய்ய செல்லவில்லை. பசவராஜ் பொம்மை என்ற ஒரு நபருக்காக பிரசாரம் செய்ய உள்ளேன்.
சட்டசபை தேர்தலில் எக்காரணத்தை கொண்டும் போட்டியிடவில்லை. அரசியலுக்கும் வர மாட்டேன். வேறு கட்சியில் இருந்து யாராவது பிரசாரத்திற்காக அழைத்தாலும், அவர்களுக்காகவும் பிரசாரம் செய்வேன்.
நான் கஷ்ட காலத்தில் இருந்த போது உதவியவர்களுக்காக (பசவராஜ் பொம்மை), அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன். இதில் எந்த தவறும் இல்லை. நான் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், அதுபற்றி கண்டிப்பாக தெரிவிப்பேன்.
இவ்வாறு நடிகர் சுதீப் கூறினார்.






