என் மலர்
கர்நாடகா தேர்தல்
- ஈசுவரப்பா கட்சியை வலுப்படுத்தும் பணியை செய்துள்ளார்.
- ஜெகதீஷ் ஷெட்டர் பெரிய தலைவர்.
பெங்களூரு :
தமிழ்நாடு பா.ஜனதா தலைவரும், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா இணை பொறுப்பாளருமான அண்ணாமலை பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 2 வேட்பாளர் பட்டியலை எங்கள் கட்சி வெளியிட்டுள்ளது. அனைவரின் தகவல்களை சேகரித்து அதன் அடிப்படையில் கட்சி டிக்கெட் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து ஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
டிக்கெட் கிடைக்காதவா்கள் அதிருப்தி அடைவது சகஜம். நிறைய பேர் எதிர்பார்த்தாலும் ஒரு தொகுதியில் ஒருவருக்கு தான் டிக்கெட் வழங்க முடியும். டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு கட்சி வேறு முக்கியமான பொறுப்பு வழங்கும். இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜெகதீஷ் ஷெட்டர் பெரிய தலைவர். அவர் கட்சி மேலிட தலைவர்களுடன் பேசியுள்ளார்.
ஈசுவரப்பா கட்சியை வலுப்படுத்தும் பணியை செய்துள்ளார். தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர்கள் கட்சியை வலுப்படுத்த அளித்த உழைப்பை கட்சி எப்போதும் மறக்காது. அதிருப்தியில் உள்ளவர்களை கட்சி தலைவர்கள் சமாதானப்படுத்துவார்கள்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
- சட்டசபை தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
- பிரதமராக மோடி 2-வது தடவையாக பதவி ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் அமோக வெற்றி பெற்று பா.ஜனதா 2-வது முறையாக ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. பிரதமராக நரேந்திர மோடி 2-வது தடவையாக பதவி ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபைக்கான பதவிக்காலம் 2024-ம் ஆண்டு மே மாதம் வரை உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் கர்நாடக சட்டசபை தேர்தலை பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்க தொடங்கிவிட்டன. அதாவது கர்நாடக சட்டசபை தேர்தலை அரை இறுதி போட்டியாக கருதுகிறார்கள்.
இதனால் பா.ஜனதா, கர்நாடக சட்டசபை தேர்தலில் எப்படியாவது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பல வியூகங்களை வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது. அதுபோல் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், தங்களது செல்வாக்கு உள்ள தென்இந்தியாவின் ஒரே தொகுதியான கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது. மாநில கட்சியான ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிக்க தேர்தல் களத்தில் தேசிய கட்சிகளுடன் மல்லுக்கு நிற்கிறது.
கர்நாடகத்தை பொறுத்தவரை சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மக்களின் மனநிலை மாறி, மாறி பிரதிபலித்து வந்துள்ளது. சமீப ஆண்டுகளாக சட்டசபை தேர்தலில் ஒரு கட்சிக்கும், பாராளுமன்ற தேர்தலில் மற்றொரு கட்சிக்கும் வாக்காளர்கள் பெருவாரியான ஆதரவை வழங்கி வருவதை காண முடிகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றிக்கனியை ஈட்டியது. காங்கிரஸ் 80 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 36 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனால் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்த ஆட்சி நடத்தியது. அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் அதிருப்தியில் 17 பேர் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி ஆட்சி கலைந்து, எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது.
இதற்கிடையே சட்டசபை தேர்தல் நடந்த ஒரே ஆண்டில் அதாவது 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக வாக்காளர்கள், பா.ஜனதாவுக்கு அமோக ஆதரவு வழங்கினர். மோடி அலையால் பா.ஜனதா 25 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு இடத்திலும், ஜனதாதளம் (எஸ்) ஒரு இடத்திலும் வென்றன. சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதாவும் வெற்றி பெற்றிருந்தார்.
இதில் ஒட்டுமொத்தமாக பா.ஜனதாவுக்கு 51.7 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 32.1 சதவீதமும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 9.7 சதவீத வாக்குகளும் கிடைத்தது. இதே நிலை கர்நாடக சட்டசபையில் நீடிக்குமா என்பது வாக்காளர்களின் மனநிலையை பொறுத்தது தான். இருப்பினும் பாராளுமன்ற தேர்தல் முடிவு பிரதிபலித்தால், சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 170 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரசுக்கு 36 இடங்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் சட்டசபை தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மாநில ஆட்சியில் 40 சதவீத கமிஷன், எஸ்.ஐ. தேர்வு முறைகேடு உள்பட பிரச்சினைகள் எழுந்தன. மேலும் தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கவில்லை. அத்துடன் புதுமுகங்களை களத்தில் இறக்கியுள்ளது. டிக்கெட் கிடைக்காதவர்கள் மாற்று கட்சிக்கு செல்லும் நிலை உள்ளது. இது எல்லாம் நிச்சயம் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவு, தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்குமா என்பது மே 13-ந்தேதி தெரிந்துவிடும்.
- பா.ஜனதா 65 முதல் 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.
- எனது வாழ்க்கை போராட்டத்தால் நிறைந்தது.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கனகபுரா தொகுதியில் என்னை எதிர்த்து மந்திரி ஆர்.அசோக் போட்டியிடுவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். அவருக்கு நல்லது நடக்கட்டும். அரசியல் என்பது கால்பந்து விளையாட்டு அல்ல, அது சதுரங்க ஆட்டத்தை போன்றது. சதுரங்க விளையாட்டை யார் வேண்டுமானாலும் விளையாடட்டும். அரசியலில் போட்டி இருக்க வேண்டும்.
அரசியலில் போராட்டம் என்பது எனக்கு புதிது அல்ல. 1985-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு எதிராக போட்டியிட்டேன். குமாரசாமிக்கு எதிராகவும் தேர்தல் களம் கண்டுள்ளேன். தற்போதும் போராடுகிறேன். எனது வாழ்க்கை போராட்டத்தால் நிறைந்தது. பத்மநாபநகரில் ஆர்.அசோக்கிற்கு எதிராக நாங்கள் பலவீனமான வேட்பாளரை நிறுத்தவில்லை.
அவரது தொகுதியில் ஆர்.அசோக்கிற்கு எதிராக அதிருப்தி அதிகமாக உள்ளது. அங்கு முஸ்லிம் வாக்குகள் அதிகமாக உள்ளன. அதை கருத்தில் கொண்டு நாங்கள் நாயுடு சமூகத்தை சேர்ந்த ரகுநாத் நாயுடுவை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் வெற்றி பெறுவது உறுதி. தேர்தலில் காங்கிரஸ் கட்சி 141 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.
பா.ஜனதா 65 முதல் 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். அதிருப்தியில் உள்ள பா.ஜனதாவினர் என்னை சந்தித்தது குறித்து விவரங்களை தற்போது வெளியிட மாட்டேன். பா.ஜனதாவில் இருந்து பலர் விலகி வருகிறார்கள். அவர்களை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
- பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்புக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை.
- மக்கள் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள்.
பெங்களூரு
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல் கட்டமாக 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்புக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. அதிருப்தியில் உள்ளவர்களிடம் நாங்கள் பேசி அவர்களை சமாதானப்படுத்தும் பணியையும் செய்து வருகிறோம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளோம்.
லட்சுமண் சவதிக்கும், எனக்கும் இடையே உணர்வு பூர்வமான உறவு உள்ளது. நான் அவருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். அவர் கஷ்டத்தில் இருந்தபோது, அவரை கட்சி காப்பாற்றியது. வரும் நாட்களில் அவரை கட்சி காப்பாற்றும் பணியை செய்யும். அவரது கவுரவத்தை காப்பாற்ற ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். அவருக்கு வரும் நாட்களில் நல்ல எதிர்காலம் உள்ளது.
நான் பா.ஜனதாவுக்கு வருவதற்கு முன்பு காங்கிரசில் சேர திட்டமிட்டு இருந்ததாக லட்சுமண் சவதி கூறியுள்ளார். இது தவறு. நான் வீட்டில் இருந்தபோது, பா.ஜனதா தலைவர்கள் எடியூரப்பா, அனந்தகுமார், சி.சி.பட்டீல், லட்சுமண் சவதி ஆகியோர் என்னை சந்திக்க வந்தது உண்மை தான். ஆனால் நான் காங்கிரசில் சேரும் திட்டத்தில் இருக்கவில்லை. சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
- எடியூரப்பா 2021-ம் ஆண்டு பதவி விலகினார்.
- அரசியல் அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதாவில் இருந்து மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக விலகி வருகிறார்கள். பா.ஜனதாவின் சக்தி வாய்ந்த தலைவர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டார். அவரை தொடர்ந்து நேற்று முன்தினம் இன்னொரு மூத்த தலைவர் ஈசுவரப்பாவும் தேர்தலில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர்கள் பா.ஜனதாவில் நீடிக்கிறார்கள்.
இந்த நிலையில் ராணிபென்னூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்காததால், அதிருப்தி அடைந்துள்ள சங்கர் எம்.எல்.சி. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெங்களூரு விதான சவுதாவில் நேற்று மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். ராணிபென்னூர் தொகுதியில் அவர் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் லட்சுமண் சவதி எம்.எல்.சி. லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அவர் எடியூரப்பா மந்திரிசபையில் (2019-21) துணை முதல்-மந்திரியாக பணியாற்றினார். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய பிறகும் அவருக்கு முக்கிய பதவியை பா.ஜனதா வழங்கியது. எடியூரப்பா கடந்த 2021-ம் ஆண்டு பதவி விலகினார். அதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவரது மந்திரிசபையில் லட்சுமண் சவதிக்கு இடம் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதானி தொகுதியில் தனக்கு போட்டியிட டிக்கெட் வழங்குமாறு லட்சுமண் சவதி கேட்டார். ஒருவேளை டிக்கெட் வழங்காவிட்டால், கட்சியில் நீடிக்க மாட்டேன் என்றும் கூறினார். ஆனால் அதானி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள மகேஷ் குமடள்ளிக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர். ரமேஷ் ஜார்கிகோளியின் நெருங்கிய ஆதரவாளர்.
அதானியில் தனக்கு டிக்கெட் வழங்காததால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய லட்சுமண் சவதி, பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பெலகாவியில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் பா.ஜனதாவை விட்டு விலக முடிவு செய்துள்ளேன். இது தான் எனது முடிவு. நான் யாரிடமும் சென்று பிச்சை எடுக்க மாட்டேன். எனக்கு சுயமரியாதை உள்ளது. நான் யாருடைய விருப்பத்தின்படியும் செயல்பட மாட்டேன். அதிகாரம் நிரந்தரம் இல்லை. இந்த பூமியில் பிறந்தவர்கள் நிச்சயம் ஒரு நாள் மரணம் அடைந்தே தீர வேண்டும். அதாவது மரணம் உறுதி. வானத்தை நோக்கி எறியும் கல் மீண்டும் பூமிக்கு வந்தே தீரும்.
அதே போல் அரசியல் அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல. இதை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன். எல்லாவற்றையும் விட எனது தொகுதி மக்கள் தான் எனக்கு முக்கியம். அதானி தொகுதி மக்களே எனக்கு கட்சி மேலிடம். அவர்களின் கருத்து கேட்டு அடுத்தக்கட்ட முடிவை நாளை (இன்று) மாலை அறிவிப்பேன். எனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
லட்சுமண் சவதி முன்பு எடியூரப்பா மந்திரிசபையில் (2008-13) மந்திரியாக பணியாற்றியபோது, சட்டசபை கூட்டத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த தலைவரான லட்சுமண் சவதியின் விலகல், வட கர்நாடகத்தில் குறிப்பாக பெலகாவி மாவட்டத்தில் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அவர் விரைவில் காங்கிரசில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது மீனவர் நலன் மற்றும் துறைமுகங்கள் துறை மந்திரியாக உள்ள எஸ்.அங்கார், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சுள்ளியா தொகுதியில் அவர் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை நடைபெறும் தேர்தலில் அதே தொகுதியில் டிக்கெட் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அங்கு அவருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அவர், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியலில் நேர்மைக்கு இடம் இல்லை என்று கூறியுள்ள அவர், இந்த தேர்தலில் பா.ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்ய மாட்டார் என்று சொல்லப்படுகிறது.
- வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20ம் தேதி கடைசி நாள் ஆகும்.
- வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை.
வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது, உடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவார்கள். வேட்புமனு படிவம் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தகவல்களை நிரப்பி, அதன் அச்சு பிரதி எடுத்து தேர்தல் அதிகாரியிடம் அதை மனுவாக தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் ஆன்லைனிலேயே நிரப்பி அதன் அச்சு பிரதி எடுத்து, அதில் நோட்டரி வக்கீலின் கையெழுத்து பெற்று தாக்கல் செய்யலாம்.
பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ஆன்லைன் மற்றும் நேரிலும் டெபாசிட் தொகையை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20ம் தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. 24-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
வேட்பாளருடன் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பா.ஜ.க. 189 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மனுதாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
- தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
- வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ஆன்லைன் மற்றும் நேரிலும் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது, உடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவார்கள்.
வேட்புமனு படிவம் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தகவல்களை நிரப்பி, அதன் அச்சு பிரதி எடுத்து தேர்தல் அதிகாரியிடம் அதை மனுவாக தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் ஆன்லைனிலேயே நிரப்பி அதன் அச்சு பிரதி எடுத்து, அதில் நோட்டரி வக்கீலின் கையெழுத்து பெற்று தாக்கல் செய்யலாம்.
வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ஆன்லைன் மற்றும் நேரிலும் டெபாசிட் தொகையை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20-ந் தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. 24-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வேட்பாளருடன் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
பா.ஜ.க. 189 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மனுதாக்கல் நாளை தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
- மூத்த தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- லக்ஷ்மன் சவடி மூன்று முறை அடானி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
பெலகாவி:
கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பாஜக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், மூத்த தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் உள்ள முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சவடி, பாஜகவில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
லக்ஷ்மன் சவடி மூன்று முறை பெலகாவி மாவட்டம் அடானி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். 2018ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குமட்டல்லியிடம் தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற குமத்தல்லி பாஜகவில் இணைந்தார். அவருக்கு மீண்டும் அடானி தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியிருக்கிறது.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள சவடி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளார். அவர் காங்கிரசில் இணையலாம் என பேசப்படுகிறது.
2019இல் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை வீழ்த்தி, பாஜக ஆட்சியமைக்க உதவிய அதிருப்தி எம்எல்ஏக்களில் குமட்டல்லியும் ஒருவர்.
- உள்துறை மந்திரி அமித்ஷா வெளியூர் பயணத்தில் உள்ளார்.
- இந்த பட்டியல் குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம்.
பெங்களூரு
கர்நாடக பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளோம். இந்த பட்டியல் இன்று (நேற்று) அடுத்த சில மணி நேரத்தில் வெளியாகும். உள்துறை மந்திரி அமித்ஷா வெளியூர் பயணத்தில் உள்ளார். அவர் டெல்லி திரும்பியதும், அவருடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இந்த பட்டியல் குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம்.
அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவு எடுத்துள்ளோம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அவரது அனுபவம் எங்களுக்கு தேவை. அவர் தொடர்ந்து தீவிர அரசியலில் இருப்பார்.
ஜெகதீஷ் ஷெட்டருக்கு நாங்கள் தொலைபேசி மூலம் பேசி புதிய நபர்களுக்கு வழிவிடுமாறு கூறினோம். அதற்கு அவர், நான் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பாக்கி உள்ளது, அதனால் இன்னொரு முறை வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். இதுகுறித்து கட்சி மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
- கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. சட்டவிரோதமாக எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்ய பறக்கும் படைகள், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடகத்தில் உரிய ஆவணஙகள் இல்லாமல் எடுத்து சென்றதாக இதுவரை ரூ.47 கோடியே ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ரூ.28 கோடியே 77 லட்சத்து 97 ஆயிரத்து 340 மதிப்புள்ள மதுபானம், ரூ.12 கோடியே 92 லட்சத்து 6 ஆயிரத்து 675 மதிப்புள்ள போதைப்பொருள், ரூ.17 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 646 மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.2 கோடியே 55 லட்சத்து 83 ஆயிரத்து 97 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை மொத்தம் ரூ.126 கோடியே 14 லட்சத்து 47 ஆயிரத்து 676 மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவலை தலைமை தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
- ஜே.பி.நட்டா வீட்டில் நடைபெற்ற கூட்டத்திலும் எடியூரப்பா கலந்து கொள்ளவில்லை.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 2 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜனதா தளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால் ஆளும் பா.ஜனதா இதுவரை ஒரு தொகுதிக்கு கூட வேட்பாளரை அறிவிக்கவில்லை. பா.ஜனதா தலைவர்கள் கடந்த 4, 5 நாட்களாக வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
பா.ஜனதாவில் முக்கியமான தலைவர்கள் தங்களின் மகன்களுக்கும் டிக்கெட் கேட்கிறார்கள். ஆனால் இதுவரை அதுகுறித்து இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. கடந்த 9-ந் தேதி பா.ஜனதா உயர்நிலை குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த குழுவின் உறுப்பினர்கள் மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதா முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே டிக்கெட் வழங்க வேண்டும் என்றும், தந்தை-மகனுக்கு டிக்கெட் வழங்க கூடாது என்றும் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பா.ஜனதா மேலிடம், வாரிசுகளுக்கு டிக்கெட் வேண்டுமெனில் அவர்களின் தந்தைகள் தேர்தல் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளது.
எடியூரப்பா ஏற்கனவே தேர்தல் அரசியலில் இருந்து விலகிவிட்டார். நேற்று பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈசுவரப்பாவும், தேர்தல் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதே போல் வீட்டு வசதி மந்திரி சோமண்ணா தேர்தல் அரசியலில் இருந்து விலகினால், அவரது மகனுக்கு டிக்கெட் வழங்க பா.ஜனதா தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் சோமண்ணா இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் மவுனமாக உள்ளார்.
பா.ஜனதா உயர்நிலை குழு கூட்டத்தை தொடர்ந்து அதன் பிறகு மறுநாள் 10-ந்தேதி அதாவது நேற்று முன்தினம் உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் வீடுகளில் 5 ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒன்றில் மட்டுமே எடியூரப்பா கலந்து கொண்டார். அமித்ஷா எடியூரப்பாவை தவிர்த்துவிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அதே போல் ஜே.பி.நட்டா வீட்டில் நடைபெற்ற கூட்டத்திலும் எடியூரப்பா கலந்து கொள்ளவில்லை. உள்துறை மந்திரி அமித்ஷாவும், ஜே.பி.நட்டாவும் எடியூரப்பாவை தவிர்த்துவிட்டு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவர்கள் தங்களின் வாரிசுகளுக்கு டிக்கெட் கேட்பதால் தான் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதுபோல் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை கொண்டு சென்ற வேட்பாளர் பட்டியலில் 40 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு திருப்தி இல்லை எனவும் கூறப்படுகிறது. அத்துடன் நீண்டகாலமாக எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களுக்கு பதிலாக புதுமுகங்களை களமிறக்கவும் மேலிட தலைவர்கள் விரும்புகிறார்கள். இதனால் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஆனது.
இதுகுறித்து மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில், "224 தொகுதிகளுக்கும் வேட்பாளா்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். சில தொகுதிகளில் கூடுதல் தகவல்களை மேலிட தலைவர்கள் கேட்டுள்ளனர். தேர்தல் பிரசாரம் குறித்தும் விவாதித்தோம். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் பிரசார பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். எடியூரப்பா ஆலோசனை வழங்கிவிட்டு கர்நாடகம் புறப்பட்டு சென்றார்" என்றார்.
- ஹாசனில் வலுவான கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
- சில சகுனிகள் தேவகவுடா குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்கள்.
உப்பள்ளி :
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஹாசன் தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தேவேகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா தனது மனைவி பவானிக்கு ஹாசன் தொகுதியில் டிக்கெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் தேவேகவுடாவின் மற்றொரு மகன் எச்.டி.குமாரசாமி தனது ஆதரவாளரான ஸ்வரூப் என்பவருக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால் அக்கட்சிக்குள் பனிப்போர் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் உப்பள்ளியில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.டி.குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹாசனில் வலுவான கட்சி நிர்வாகிகள் உள்ளனர். ஹாசன் தொகுதியில் வேட்பாளர் யார் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள். அது தான் இறுதி முடிவு. நான் அந்த தொகுதியின் யதார்த்தத்தை பற்றி அறிந்துள்ளேன். பவானி ரேவண்ணா ஹாசனில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது.
நான் நடத்திய கள ஆய்வில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதனால் தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சாதாரண கட்சி தொண்டருக்கு ஹாசனில் டிக்கெட் கொடுக்கும்படி கூறி வருகிறேன். சில சகுனிகள் தேவகவுடா குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தான் ஹாசன் தொகுதி விவகாரத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






