என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகத்தில் இதுவரை ரூ.126 கோடி ரொக்கம்-பரிசு பொருட்கள் பறிமுதல்
    X

    சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

    கர்நாடகத்தில் இதுவரை ரூ.126 கோடி ரொக்கம்-பரிசு பொருட்கள் பறிமுதல்

    • கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
    • தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. சட்டவிரோதமாக எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்ய பறக்கும் படைகள், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடகத்தில் உரிய ஆவணஙகள் இல்லாமல் எடுத்து சென்றதாக இதுவரை ரூ.47 கோடியே ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் ரூ.28 கோடியே 77 லட்சத்து 97 ஆயிரத்து 340 மதிப்புள்ள மதுபானம், ரூ.12 கோடியே 92 லட்சத்து 6 ஆயிரத்து 675 மதிப்புள்ள போதைப்பொருள், ரூ.17 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 646 மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.2 கோடியே 55 லட்சத்து 83 ஆயிரத்து 97 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை மொத்தம் ரூ.126 கோடியே 14 லட்சத்து 47 ஆயிரத்து 676 மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த தகவலை தலைமை தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×