என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது.
    • மவுண்ட் மராபி எரிமலை காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு அதிக வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அவசரமாக திரும்பினர். மொத்தம் 75 மலையேற்ற வீரர்கள் அங்கு சென்றிருந்திருந்தனர்.

    அவர்களில் 46 பேர் கீழே இறங்கி வந்துவிட்டனர். மற்றவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இதில் 11 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 3 பேர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் 12 பேரும் பலியானது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. மவுண்ட் மராபி எரிமலை காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு அதிக வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.

    • உலகின் ஒல்லியான ஓட்டல் என்று இந்தோனேஷியாவில் உள்ள ஒரு ஓட்டல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    • குறுகிய இடத்தின் காரணமாக கட்டிடத்தை வடிவமைப்பதில் சவாலை எதிர் கொண்டதாக கட்டிட வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    உலகின் பல்வேறு நாடுகளிலும் பிரமாண்டமான ஓட்டல்கள், அதில் உள்ள வசதிகள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

    இந்நிலையில் உலகின் ஒல்லியான ஓட்டல் என்று இந்தோனேஷியாவில் உள்ள ஒரு ஓட்டல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரிஇந்திரா என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம் 5 தளங்களை கொண்டுள்ளது. 9 அடி அகலத்துடன் 7 அறைகள் மட்டும் கொண்டுள்ள இந்த ஓட்டலில் ஒரு ஓய்வு அறையும் உள்ளது. குறுகிய இடத்தின் காரணமாக கட்டிடத்தை வடிவமைப்பதில் சவாலை எதிர் கொண்டதாக கட்டிட வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், வசதியாக வாழ்வதற்கும், நடமாடுவதற்கும் உண்மையில் எவ்வளவு சிறிய இடம் தேவை என்று விருந்தினர்கள் வியக்கும் வகையில் இந்த ஓட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

    • நிலநடுக்கத்தை தொடர்ந்து, சாத்தியமான பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு.
    • இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் அறிவிப்பு.

    இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    6.0 என்கிற ரிக்டர் அளவில் நிலநடுக்கம், இந்தோனேசியாவின் வட மலுக்கு மாகாணத்தில் உள்ள மேற்கு டோபெலோ என்கிற பகுதியில் இருந்து 94 கி.மீ., தொலைவில் 116 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் கூறுகையில், "சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. ஆனால் சாத்தியமான பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என்றது.

    கடந்த ஆண்டு மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 600 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
    • சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நுசா தெங்கரா மாகாண தலைநகரான குபாங்வுக்கு வட-வடகிழக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவானது. 36 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல கட்டிடங்கள், வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தோ-பசிபிக் மீதான ஏசியன் கண்ணோட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது
    • இந்தோ-பசிபிக் முயற்சியில் ஏசியன் முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளது

    ஏசியன் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் 20-வது ஏசியன்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய மாநாடு இந்தோனேசியாவில் இன்று நடக்கிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோவிடோடோ அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி மாநாடுகளில் பங்கேற்பதற்காக இன்று இந்தோனேசியாவுக்கு சென்றார்.

    இன்று அதிகாலை இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றடைந்த மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் மோடி, தான் தங்கும் ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டலுக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தேசிய கொடியை அசைத்தும் மோடியுடன் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கலைக்குழுவினர் நடனமாடி மோடியை வரவேற்றனர். இந்தோனேசியாவுக்கு சென்றடைந்ததும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஜகா்த்தாவுக்கு சென்றடைந்துள்ளேன். ஏசியன் தொடர்பான கூட்டங்களை எதிர்நோக்கி இருக்கிறேன். ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க பல தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்" என்று கூறினார்.

    பின்னர், இன்று காலை நடந்த 20-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த உச்சி மாநாட்டுக்கு இணைத் தலைமை தாங்குவது எனக்கு கிடைத்த பெருமை. உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோவிடோடோவுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். நமது (இந்தியா-இந்தோனேசியா) கூட்டான்மை நான்காவது சகாப்தத்தில் நுழைகிறது.

    கடந்த ஆண்டு நாங்கள் இந்தியா-ஏசியன் நட்பு தினத்தை கொண்டாடி விரிவாக கூட்டாண்மையை வழங்கினோம். நமது வரலாறு மற்றும் புவியியல் இந்தியாவையும், ஆசியாவையும் ஒன்றிணைக்கிறது.

    அதனுடன் நமது பகிரப்பட்ட மதிப்புகள், பிராந்திய ஒருங்கிணைப்பு, அமைதி, செழிப்பு, பல்முனை உலகின் நம்பிக்கை ஆகியவையும் நம்மை ஒருங்கிணைக்கிறது. இந்தியாவின் கிழக்கு கொள்கையின் மையப் புள்ளியாக ஆசியா உள்ளது. இந்தியாவின் இந்தோ-பசிபிக் முன் முயற்சியிலும் இந்த பகுதி முக்கிய பங்கு வகிக்கும்.

    இந்த ஆண்டின் கருப்பொருளாக ஏசியன் விஷயங்கள் உள்ளன. அது வளர்ச்சியின் மையமாக உள்ளது. ஏசியன் கூட்டமைப்பு முக்கியமானது.

    இங்கு அனைவரின் குரல் கேட்கப்படுகிறது. ஏனென்றால் 2-வது வளர்ச்சியில் ஏசியன் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலையிலும் நமது பரஸ்பர ஒத்துழைப்பில் நிலையான முன்னேற்றம் உள்ளது.

    21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. இது நம் அனைவரின் நூற்றாண்டு. கொரோனாவுக்கு பிந்தைய உலக ஒழுங்கை உருவாக்குவது மற்றும் மனித நலனுக்காக அனைவரின் முயற்சிகளை உருவாக்குவது நம் அனைவருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார்.
    • ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெறுவதால் பிரதமர் மோடி இன்று மாலை இந்தியா திரும்புகிறார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார்.

    இந்நிலையில், இன்று அதிகாலை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அங்கு குவிந்திருந்த இந்திய வம்சாவளியினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

    ஏசியன் மாநாடுகளில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி இன்று மாலை இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருப்பதால் இது குறுகிய பயணமாக அமைந்துள்ளது.

    • இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் 20வது ஏசியான் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
    • ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் 20வது ஏசியான் உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தோனேசியா சென்றுள்ளார். அவர் இன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ரஷிய வெளியுறவுத்துறை செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

    டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புதினுக்கு பதிலாக, ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
    • கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

    இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை 7.0 ரிக்டர் அளவில் சக்சி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    பூகம்பத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் (322 மைல்) கீழேயும் இருந்ததாகவும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுவே, அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.

    இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா, பங்சல் அருகே நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அடியில் 525 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதற்கிடையில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

    • தனது தோழியான மரியானாவுக்கு தனது மகனை திருமணம் செய்து வைக்க லிசாவும் சம்மதித்தார்.
    • இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தோனேஷியாவை சேர்ந்த 41 வயது பெண் 16 வயது சிறுவனை திருமணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள மேற்கு கலிமந்தன் பகுதியை சேர்ந்தவர் மரியானா. 41 வயதான இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே வசித்து வருபவர் லிசா. இவரது மகன் 16 வயது கெவின் தின்பண்டங்கள் வாங்குவதற்காக மரியானாவின் கடைக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.

    குறிப்பாக மரியானா கெவின் மீது தீவிர காதல் கொண்டு அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் தன்னை விட 25 வயது சிறியவனை திருமணம் செய்ய அவரது தாயார் சம்மதிப்பாரா என்ற சந்தேகம் மரியானாவுக்கு ஏற்பட்டது. ஆனால் தனது தோழியான மரியானாவுக்கு தனது மகனை திருமணம் செய்து வைக்க லிசாவும் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து இந்தோனேஷியா குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார் சென்றது. அந்நாட்டை பொறுத்தவரை ஆண்களின் திருமண வயது 19 ஆகும். எனவே கெவின் 19 வயதாகும் வரை இருவரும் தனியாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    • வெற்றி பெறுபவர்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாக விளங்குகிறார்கள்
    • மேலும் பலர் தங்களுக்கு நேர்ந்ததை கூற முன் வருவார்கள் என வழக்கறிஞர் தெரிவித்தார்

    அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய 2 நாடுகளை உள்ளடக்கிய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு உலகெங்கிலும் வருடாவருடம் மிஸ் யுனிவர்ஸ் எனும் பெயரில் அழகிப்போட்டிகளை நடத்தி வருகிறது.

    தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இப்போட்டி மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாக விளங்குகிறார்கள்.

    அவ்வகையில், மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டிகள் இம்மாதம் 3ம் தேதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது.

    ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

    தற்போது 3 பெண்கள் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில் மேலும் பலர் தங்களுக்கு நேர்ந்ததை கூற முன் வருவார்கள் என அவர்களின் வழக்கறிஞர் மெல்லிஸா அங்க்ரேனி கூறினார்.

    அவர் இது சம்பந்தமாக கூறியதாவது:

    ஆகஸ்ட் 3 ஆம் தேதி இறுதிப்போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு, 'உடல் சோதனை' மற்றும் புகைப்படங்களுக்காக போட்டியிடும் பெண்களை மேலாடைகளை கழற்றுமாறு கூறியுள்ளனர். போட்டியில் பங்கு பெற்ற பெண்களின் உடலில் ஏதேனும் தழும்புகள், செல்லுலாய்ட் அல்லது பச்சை குத்தப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் இதற்கு காரணம் கூறியுள்ளனர்.

    இவ்வாறு அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

    செய்தியாளர் சந்திப்பில் ஒரு போட்டியாளர் கூறுகையில், "எனது உரிமைகள் மீறப்பட்டதாக நான் உணர்கிறேன். இது என்னை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது. நான் தூக்கத்தை இழந்து விட்டேன்." என்றார்.

    "ஒரு மூடிய அறையில் உடல் சோதனைகள் செய்யப்பட்டது. அங்கு சில ஆண்களும் இருந்தனர். கதவு முழுவதுமாக மூடப்படவில்லை, இதனால் வெளியில் உள்ளவர்களுக்கும் உள்ளே நடைபெறுவதை பார்க்க முடிந்தது" என மற்றொரு போட்டியாளர் தெரிவித்தார்.

    தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா அமைப்பு இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் என்று அதன் உரிமையாளர் பாப்பி கபெல்லா தெரிவித்துள்ளார்.

    உலக மிஸ் யுனிவர்ஸ் அமைப்பும் இந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து வருவதாகவும், பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை, 'மிகவும் தீவிரமாக' எடுத்துக் கொள்வதாகவும் கூறியது.

    போட்டியாளர்களின் வயது, உடல் எடை மற்றும் உயரத்தின் விகிதாசாரத்தை சரி பார்க்க உடல் பரிசோதனைகள் இயல்பானவை என்றாலும் போட்டியாளர்கள் நிர்வாணமாக இருக்குமாறு கேட்கப்படுவதில்லை என முன்னாள் மிஸ் இந்தோனேசியா மரியா ஹர்ஃபான்டி கூறியுள்ளார்.

    • படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்கள்.
    • அதிக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ஜகார்த்தா:

    இந்தோனேஷியா நாட்டில் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய தீவுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.

    இங்குள்ள முனா தீவில் இருந்து சுலவேசி தீவுக்கு நேற்று ஒரு படகு சென்றது. இந்த படகில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர். தெற்கு சென்சாஷி பகுதியில் சென்ற போது திடீரென அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்கள். இது பற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    படகு கவிழ்ந்ததில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். படகில் வந்த பலர் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    அதிக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • பலத்த காயமடைந்த ஜஸ்டினை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • பாரடைஸ் பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஞ்சலி.

    இந்தோனேசியா, பாலியில் பாரடைஸ் பாலி என்கிற உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார் ஜஸ்டின் விக்கி (33). இவர், கடந்த 15ம் தேதி அன்று ஜிம்மில் சுமார் 210 கிலோ எடையை பார்பெல்லில் வைத்து தோல்களில் சுமந்தடி ஸ்குவாட் செய்ய முயன்றார்.

    அப்போது, எடை தாளாமல் ஜஸ்டினால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. இதில், பேலன்ஸ் இன்றி பார்பெல் ஜஸ்டினின் கழுத்தில் வேகமாக விழுந்துள்ளது.

    இதில் பலத்த காயமடைந்த ஜஸ்டினை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் கழுத்தின் எலும்பிலும், இதயம் மற்றும் நுரையீரல் செல்லும் நரம்பிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, ஜஸ்டினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், பாரடைஸ் பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவில், "ஜஸ்டின் ஒரு உடற்பயிற்சி நிபுணர் என்பதை விட மேலானவர். அவர் உத்வேகம், ஊக்கம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவின் கலங்கரை விளக்கமாக இருந்தார்" என்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளது.

    ×