என் மலர்
மேற்கு வங்காளம்
- ரோகித் சர்மா 44 பந்தில் 57 ரன்கள் அடித்தார்
- இஷான் கிஷன் 34 பந்தில் 52 ரன் விளாசல்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் ஆல்அவுட் ஆனதும், இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
விரைவாக அதிக ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய இந்திய அணி முடிவு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களான ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ரோகித் சர்மா 44 பந்தில் 57 ரன்களும், ஜெய்ஸ்வால் 30 பந்தில் 38 ரன்களும் சேர்த்தனர். அடுத்து வந்த இஷான் கிஷன் 34 பந்தில் 52 ரன்கள் விளாசினார். இந்தியா 24 ஓவரில் 181 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இந்தியா 12.2 ஓவரில் 100 ரன்களை எடுத்தது. இதன்மூலம் விரைவாக 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்குமுன் 2001-ம் ஆண்டு ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வங்காளதேச அணிக்கெதிராக இலங்கை 13.2 ஓவரில் 100 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது 22 ஆண்டு கால சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
- முதல்-மந்திரி மம்தா வீட்டில் இருக்கும்போது போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் ஒருவர் வந்தார்.
- காரில் ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, கஞ்சா, பி.எஸ்.எப். உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பெயரில் அடையாள அட்டைகள் இருந்தன.
கொல்கத்தா:
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் வீடு கொல்கத்தாவின் காளிகட் பகுதியில் உள்ள ஹரீஷ் சாட்டர்ஜி தெருவில் உள்ளது.
நேற்று காலை முதல்-மந்திரி மம்தா வீட்டில் இருக்கும்போது போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் ஒருவர் வந்தார். அவர் அந்த தெருவுக்குள் நுழைய முயன்றார். அவரது காரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது முதல்-மந்திரி மம்தாவை சந்திக்க விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளார்.
அவரது காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, கஞ்சா, பி.எஸ்.எப். உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பெயரில் அடையாள அட்டைகள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்தனர்.
காளிகட் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் பெயர் ஷேக் நூர் ஆலம் என அடையாளம் காணப்பட்டார்.
இதுகுறித்து கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் கூறும்போது, அந்த நபரிடம் இருந்து பல்வேறு போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அறிய முயன்று வருகிறோம். அந்த நபர் முதலில், தான் அனந்தபூரை சேர்ந்தவர் என்றார். பிறகு பாஸ்சிம் மெதினிபூர் என்றார். இதில் உண்மை என்ன என்பதை நாங்கள் சரி பார்த்து வருகிறோம் என்றார்.
மற்றொரு அதிகாரி கூறும்போது அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். காளிகட் காவல் நிலையத்தில் காவல் துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர். அந்த நபரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றார்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
- எதிர்க்கட்சி தலைவர்களின் இரு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
கொல்கத்தா:
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்திட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கருத்து வேறுபாடுகளை கடந்து பா.ஜ.க.வை தோற்டிக்க வேண்டும் என்பதே நம்முடைய ஒற்றை இலக்காக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் பதவியைப் பெறுவதிலோ அதிகாரத்தைப் பெறுவதிலோ காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மேற்கு வங்காளத்திற்கு பல மத்திய குழுக்களை அனுப்பிய பா.ஜ.க. அரசு, ஏன் வடகிழக்கு மாநிலத்திற்கு மத்திய குழுவை அனுப்பவில்லை?
மத்திய பா.ஜ.க. அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கம்.
பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சி அமைப்பது ஜனநாயகம் அழிந்து வருவதைக் குறிக்கும்.
எங்களுக்கு எந்த நாற்காலியும் வேண்டாம். 2024-ல் பா.ஜ.க.வை மத்தியிலிருந்து வெளியேற்றுவதைத் தவிர எங்களுக்கு வேறு எந்தக் கோரிக்கையும் இல்லை.
26 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தார்.
- எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ (இந்திய வளர்ச்சி கூட்டணி) என பெயரிடப்பட்டுள்ளது.
- மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமே பா.ஜ.க.வின் வேலை.
கொல்கத்தா :
2024 பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளன. நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' (இந்திய வளர்ச்சி கூட்டணி) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து பேசினார்.
அப்போது அவர், "கலவரம், வன்முறை, மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமே பா.ஜ.க.வின் வேலை. அவர்கள் தீர்க்கமான பதிலைப் பெறுவார்கள். தேர்தலில் அவர்களுக்கு (பாஜக) எதிராக வாக்களித்து மக்கள் பழிவாங்குவார்கள். இந்திய வளர்ச்சி கூட்டணி போரை எதிர்கொள்ளும்" என்றார்.
தொடர்ந்து, மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு சில மாதங்களுக்குள் கவிழும் என பா.ஜ.க. எம்.பி. சாந்தனு தாக்கூர் பேசியது குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, "அவர்களிடம் (பாஜக) ஒரு டம்ளரை கவிழ்க்கச் சொல்லுங்கள். பின்னர் எங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கலாம். விரைவில் மத்தியில் ஆட்சி கவிழும் என்பதை அவர்கள் உணர வேண்டும். நேற்றிலிருந்து (எதிர்க்கட்சிகள் கூட்டணியை அறிவித்தது முதல்) பா.ஜ.க. பயத்தில் நடுங்குகிறது" என கூறினார்.
- இருதரப்பு பெண்களும் ஒருவரையொருவர் கைகளாலும், செருப்பாலும் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர்.
- வீடியோ வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் பயணிகள் ரெயிலில் கூட்டம் அலைமோதி காணப்படும். கூட்ட நெரிசலில் சில நேரங்களில் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், பயணிகள் ரெயில் ஒன்றில் பெண்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு செருப்பால் அடித்துக் கொண்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
டுவிட்டரில் வைரலாகி வரும் இந்த வீடியோ கொல்கத்தாவில் பயணிகள் ரெயிலில் நடைபெற்றுள்ளது. அதில், இருதரப்பு பெண்களும் ஒருவரையொருவர் கைகளாலும், செருப்பாலும் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர். இதனால் அலறல் சத்தம் கேட்கிறது. எதற்காக இந்த சண்டை நடைபெற்றது என்று தெரியாத நிலையில், மோதலை பார்த்த சக பயணிகள் அச்சத்துடன் ஒதுங்கி நிற்கின்றனர். அதில், சிலர் சண்டையை தடுக்க முயல்கின்றனர். வீடியோவின் முடிவில், சண்டையில் ஈடுபட்ட பெண்களில் ஒருவர், தனது அருகில் நிற்கும் ஒரு பையனை அடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் பயணிகள் ரெயிலில் கூட்டம் அலைமோதி காணப்படும். கூட்ட நெரிசலில் சில நேரங்களில் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், பயணிகள் ரெயில் ஒன்றில் பெண்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு செருப்பால் அடித்துக் கொண்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
டுவிட்டரில் வைரலாகி வரும் இந்த வீடியோ கொல்கத்தாவில் பயணிகள் ரெயிலில் நடைபெற்றுள்ளது. அதில், இருதரப்பு பெண்களும் ஒருவரையொருவர் கைகளாலும், செருப்பாலும் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர். இதனால் அலறல் சத்தம் கேட்கிறது. எதற்காக இந்த சண்டை நடைபெற்றது என்று தெரியாத நிலையில், மோதலை பார்த்த சக பயணிகள் அச்சத்துடன் ஒதுங்கி நிற்கின்றனர். அதில், சிலர் சண்டையை தடுக்க முயல்கின்றனர். வீடியோவின் முடிவில், சண்டையில் ஈடுபட்ட பெண்களில் ஒருவர், தனது அருகில் நிற்கும் ஒரு பையனை அடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
- இதற்கு மேற்கு வங்காள மக்களுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதி மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகிய மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்புக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் கிராம பஞ்சாயத்து அளவில் திரிணாமுல் காங்கிரஸ் 29,665 இடங்களில் வெற்றி பெற்று 1,527 இடங்களில் முன்னிலை வகித்தது.
எதிர்க்கட்சியான பா.ஜ.க. 8,021 இடங்களில் வெற்றி பெற்று 406 இடங்களில் முன்னிலை வகித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,472 இடங்களில் வெற்றி பெற்று 239 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2,094 இடங்களிலும் வெற்றி பெற்று 131 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு மேற்கு வங்காள மக்களுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மம்தா வெளியிட்டுள்ள பேஸ்புக் செய்தியில், கிராமப்புற வங்காளத்தில் அனைத்து வழிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தான் உள்ளது. திரிணாமுல் மீதான மக்களின் அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாநில மக்களின் இதயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
- வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 696 வாக்குச்சாவடி களில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது.
- ஆளுங்கட்சிக்கு கடும் போட்டியாக விளங்கிய பாஜக 3,790 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர் வன்முறைகளுக்கு மத்தியில் கடந்த 8-ந்தேதி சனிக்கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வன்முறைக்கு இடையிலேயும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார்கள். 80.71 சதவீத ஓட்டுகள் பதிவானது. வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கு உள்ளிட்ட 696 வாக்குச்சாவடிகளில் நேற்று பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் இந்த மறுவாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பிய போதிலும் 69.85 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்படுகின்றன.
காலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மதியத்திற்கு பிறகு முடிவுகள் வெளியாகத் தொடங்கின. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது.
மாலை நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 23,344 இடங்களில் 16,330 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. மேலும் 3,002 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. கடும் போட்டியாக விளங்கிய பாஜக 3,790 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 802 இடங்களில் முன்னிலை பெற்றது. மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
இடது முன்னணி 1365 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டும் 1206 இடங்களை பிடித்தது. இடது முன்னணி 621 இடங்களில் முன்னிலை0யில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 886 இடங்களில் வெற்றி பெற்றதுடன், 256 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்திய மதச்சார்பற்ற முன்னணி 937 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 190 இடங்களில் முன்னிலையில் இருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் உள்ளிட்ட சுயேட்சைகள் 418 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 73 இடங்களில் முன்னிலையில் இருந்தனர்.
ஜில்லா பரிசத் முடிவுகளைப் பொருத்தவரை இதுவரை 18 ஜில்லா பரிசத் முடிவுகள் வெளியிடப்பட்டன. அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 30 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 928 ஜில்லா பரிஷத் இடங்கள் உள்ளன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தல் முடிவுகளால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியானது, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மாநில அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாகவும், பாஜகவின் பிரித்தாளும் அரசியலையும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்மறை அரசியலையும் மக்கள் நிராகரித்ததை காட்டுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிய இரண்டு நாட்கள் ஆகலாம் என்றும், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளை தொகுத்து வெளியிடுதற்கு அதிக நேரம் ஆகும் எனவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 22 மாவட்டங்களில் உள்ள 339 மையங்களில் இந்த ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
- மேற்கு வங்காள மாநிலத்தை பொறுத்தவரை வங்க புலி என அழைக்கப்படும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 22 ஜில்லா பரிஷத் 9,730 பஞ்சாயத்து சமிதி 63,229 கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட மொத்தம் 73,887 பதவிகளுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 6 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதில் இருந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாரதியஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கட்சி தொண்டர்கள் இடை யே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. இதில் சிறுவன் உள்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் வாக்குப்பதிவு நாளில் வன்முறை சம்பவங்களை தடுக்க 70 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் 65 ஆயிரம் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆனாலும் இதனை மீறி தேர்தல் நாளில் வரலாறு காணாத வகையில் கலவரம் மூண்டது. வாக்குச்சாவடிக்கு தீ வைப்பு, ஓட்டுச்சீட்டுகள் தீ வைத்து எரித்தல், வாக்குச் சாவடி சூறை , துப்பாக்கி சூடு, மறியல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ், பாரதியஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொண்டர்கள் உள்ளிட்ட 20 பேர் பலியானார்கள்.
இந்த வன்முறைக்கு இடையிலேயும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார்கள். இதனால் சனிக்கிழமை நடந்த உள்ளாட்சி தேர்தலில் 80.71 சதவீத ஓட்டுகள் பதிவானது.
வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கு உள்ளிட்ட 696 வாக்குச்சாவடி களில் நேற்று பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் இந்த மறுவாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பிய போதிலும் 69.85 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. 22 மாவட்டங்களில் உள்ள 339 மையங்களில் இந்த ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.
இன்று காலை நிலவரப்படி மேற்கு மெதினிபூரில் உள்ள 211 கிராம பஞ்சாயத்துகளில் 26 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அவுராவுக்கு உட்பட்ட 157 பஞ்சாயத்துகளில் 29 இடங்களில் அக்கட்சி முன்னணி பெற்று உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளனர்.
சில இடங்களில் மற்ற கட்சிகளை விட அக்கட்சி வேட்பாளர்கள் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி முகத்தில் உள்ளனர். பாரதிய ஜனதா, காங்கிரஸ். கம்யூனிஸ்டு கட்சிகள் பின் தங்கி உள்ளன. இது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.
இந்த தேர்தலில் ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டதால் ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது முன்னிலை நிலவரம் மட்டுமே வந்துள்ளது.
ஓட்டு எண்ணிக்கை முழுமையாக முடிய இன்னும் 2 நாட்கள் ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னணியில் உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.பட்டாசுகள் வெடித்து அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஒட்டு எண்ணிக்கையின் போது சில பகுதியில் அசாம்பாவித சம்பவங்களும் நிகழ்ந்தது. டைமண்ட் ஹர்பர் பகுதியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் மீது குண்டு வீசப்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த குண்டு வீச்சில் யாரும் காயம் அடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
மேற்கு வங்காள மாநிலத்தை பொறுத்தவரை வங்க புலி என அழைக்கப்படும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். அவரை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்பதில் பாரதியஜனதா வெறித்தனமாக உள்ளது.
இதன் காரணமாக தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது.
அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இது முன்னோட்டமாக கருதப்பட்டதால் யார்? வெற்றி பெறுவார்கள் என்பதில் நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரபரப்பு தொற்றியது.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.. ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து பதவிகளில் 90 சதவீத இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.
பாரதியஜனதாவால் 2-வது இடத்தை தான் பிடிக்க முயன்றது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க தொண்டர்கள் இருந்தனர். ஆனால் இன்று நடந்த தேர்தல் முடிவு அவர்கள் கனவை தகர்த்துவிட்டது.
உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் தனது செல்வாக்கை நிரூபித்து உள்ளது.
- தேர்தல் வன்முறையில் 20-க்கும் மேற்பட்டோர் பலி
- 697 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது
மேற்கு வங்காளத்தில் கடந்த 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின்போது பெரும்பாலான இடங்களில் வன்முறை வெடித்தது. வாக்குப்பெட்டிகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. தேர்தல் அதிகாரிகள் தாக்கப்பட்டனர். பல்வேறு கட்சி தொண்டர்கள் கொல்லப்பட்டனர். தேர்தல் வன்முறையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வன்முறை நடைபெற்ற 697 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுதேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப்படை வீரர்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். தொண்டர்கள் காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு முன் கும்பலாக திரண்டனர்.
ஹவுராவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வெளியே கூடியிருந்த கும்பல் திடீரென வாக்கு மையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது பாதுகாப்புப்படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அந்த கும்பல் கேட்காததால், பாதுகாப்புப்படையினர் தடியடி நடத்த தொடங்கினர். பின்னர், கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
3 அடுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதிகளில் 73,887 இடங்ளிலும் வாக்குப் பதிவு நடந்தது. இதில் ஊராட்சி வார்டுகள் 63,229 ஒன்றிய வார்டுகள் 9730, மாவட்ட ஊராட்சி வார்டுகள் 928 ஆகும். இந்த தேர்தலில் 2.06 லட்சம் பேர் போட்டியிட்டனர். 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாக்குப்பதிவின்போது சுமார் 65,000 மத்திய காவல் படையினர், மாநில காவல் துறையை சேர்ந்த 70,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- பல்வேறு மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளுக்குள் புகுந்த கும்பல் ஓட்டு பெட்டிகளை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.
- போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று முன்தினம் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்லில் 61,636 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப் பதிவு நடைபெற்றது.
ஓட்டுப்பதிவின் போது பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளுக்குள் புகுந்த கும்பல் ஓட்டு பெட்டிகளை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். சிலர் வாக்குச்சீட்டுகளை தீ வைத்து கொளுத்தினார்கள்.
அரசியல் கட்சி தொண்டர்களும் ஒருவருக்கொருவர் வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தேர்தல் வன்முறை சம்பவங்களில் 17 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில், வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற 697 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற தேர்தல் செல்லாது என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதை தொடர்ந்து 697 வாக்குச்சாவடிகளிலும் இன்று மீண்டும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையடுத்து பொதுமக்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டு வருகிறார்கள். அதிக அளவில் வன்முறை நடந்த முர்ஷிதா பாத் மாவட்டத்தில் அதிக பட்சமாக 175 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது.
மால்டா மாவட்டத்தில் 109 வாக்குச்சாவடிகளிலும், நாடியா மாவட்டத்தில் 89 வாக்குச்சாவடிகளிலும், கூச்பெகர் மாவட்டத்தில் 53 வாக்குச்சாவடிகளிலும், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் 46 வாக்குச்சா வடிகளிலும், உத்தர் தினாஜ் பூர் மாவட்டத்தில் 42 வாக்குச்சாவடிகளிலும், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் 36 வாக்குச்சாவடிகளிலும், பூர்பா மேதினியூர் மாவட்டத்தில் 31 வாக்குச்சாவடிகளிலும், ஹூக்ளி மாவட்டத் தில் 29 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது.
மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகள் ஒவ்வொன்றிலும் மாநில போலீசாருடன் 4 மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், மறுவாக்குப்பதிவு நடை பெறும் வாக்குச்சாவடிகளில் வன்முறை நிகழாத வண்ணம் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று தெரிவித்தனர்.
- வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
- அதன்படி, புருலியா, பிர்பும், ஜல்பாய்குரி, சவுத் 24 பர்கானா ஆகிய மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவு.
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. தொண்டர் களுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.
ஜூலை 8-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு பல்வேறு பகுதிகளிலும் மோதலும், வன்முறைகளும் ஏற்பட்டன.
இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
முர்ஷிதாபாத், கூச் பெகர், வடக்கு தினாஜ்பூர் தெற்கு 24 பர்கான்ஸ், நாடியா ஆகிய மாவட்டங்களில் உச்சக்கட்ட வன்முறை ஏற்பட்டது. பல இடங்களில் வாக்கு சாவடிகள் சூறை யாடப்பட்டது. வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. கூச்பெஹரின் தீன்ஹகா பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு சாவடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
பிர்புரம் பகுதியில் உள்ள வாக்குசாவடி அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றது. அப்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 62 வயது முதியவர் உயிரிழந்தார். தம்சா பகுதியில் ஒரு கும்பல் வாக்குப்பெட்டிகளை ஆற்றில் வீசி எறிந்தன.
திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜ.க. தொண்டர்கள் மோதலுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது. டியமாட்கார் பகுதியில் ஓட்டுப்பெட்டிகளை எடுத்து வந்து ஒரு கும்பல் வெளியே வீசியது. இதனால் அப்பகுதி முழுவதும் வாக்கு சீட்டுகள் சிதறி கிடந்தன. முர்ஷிதாபாத்தில் ஒரு கும்பல் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்து கொளுத்தியது.
இந்நிலையில், வன்முறை எதிரொலியால் மேற்கு வங்கத்தில் 4 மாவட்டங்களில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, உள்ளாட்சித் தேர்தலில் ஏராளமான பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, புருலியா, பிர்பும், ஜல்பாய்குரி, சவுத் 24 பர்கானா ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமா்ா 600 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது.
- தேர்தல் வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. தொண்டர் களுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்துவருகிறது.
ஜூலை 8-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் 8-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே அங்கு பல்வேறு பகுதிகளிலும் மோதலும், வன்முறைகளும் ஏற்பட்டன. இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. ஊரக பகுதிகளில் 73,887 இடங்ளிலும் வாக்குப் பதிவு நடந்தது. இதில் ஊராட்சி வார்டுகள் 63,229 ஒன்றிய வார்டுகள் 9730, மாவட்ட ஊராட்சி வார்டுகள் 928 ஆகும். இந்த தேர்தலில் 2.06 லட்சம் பேர் போட்டியிட்டனர். 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
வாக்குப்பதிவின் போது சுமார் 65,000 மத்திய காவல் படையினர், மாநில காவல் துறையை சேர்ந்த 70,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் உள்ளாட்சி தேர்தலில் பயங்கர வன்முறை நிகழ்ந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
முர்ஷிதாபாத், கூச் பெகர், வடக்கு தினாஜ்பூர் தெற்கு 24 பர்கான்ஸ், நாடியா ஆகிய மாவட்டங்களில் உச்சக்கட்ட வன்முறை ஏற்பட்டது. பல இடங்களில் வாக்கு சாவடிகள் சூறை யாடப்பட்டது. வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. கூச்பெஹரின் தீன்ஹகா பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு சாவடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
பிர்புரம் பகுதியில் உள்ள வாக்குசாவடி அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றது. அப்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 62 வயது முதியவர் உயிரிழந்தார்.
தம்சா பகுதியில் ஒரு கும்பல் வாக்குப்பெட்டிகளை ஆற்றில் வீசி எறிந்தன. திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜ.க. தொண்டர்கள் மோதலுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது.
டியமாட்கார் பகுதியில் ஓட்டுப்பெட்டிகளை எடுத்து வந்து ஒரு கும்பல் வெளியே வீசியது. இதனால் அப்பகுதி முழுவதும் வாக்கு சீட்டுகள் சிதறி கிடந்தன. முர்ஷிதாபாத்தில் ஒரு கும்பல் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்து கொளுத்தியது.
அரசியல் கட்சி தொண்டர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். துப்பாக்கியாலும் சுட்டுக் கொண்டனர்.
பயங்கர வன்முறை காரணமாக மத்திய பாதுகாப்பு படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துமாறு மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூச்பெஹர் மாவட்டத்தின் பாலிமரி கிராம பகுதியில் பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர் மதாப் விஸ்வாஸ் கொல்லப்பட்ட தாக அந்த கட்சி குற்றம் சாட்டியது. இதே போல திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் பாபர் அலி, சபிருதீன், கணேஷ் சர்கர் ஆகியோரும் வன்முறையில் கொல்லப்பட்டனர். அவர்களது உயிரிழப்புக்கு பா.ஜனதாவே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
மேற்கு வங்காளத்தில் நடந்த தேர்தல் வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்10 பேரும், பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியில் இருந்து தலா 3 பேரும், கம்யூனிஸ்ட்டு கட்சியைச் சேர்ந்த 2 பேரும் வன்முறைக்கு பலியானார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட தினத்தில் இருந்து மேற்கு வங்காளத்தில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் வன்முறை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நடந்த வன்முறை தொடர்பாக அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






