என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
    • இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பச்சரிசி, வெல்லம், உளுந்து, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசி பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட 10 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதுபற்றி பேசிய புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.

    • உணவகத்தில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
    • சமையலறைக்கு வரும் எலிகளை பிடிக்க பாம்பு பின்புறம் உள்ள வாய்க்கால் வழியாக வந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைப்பில்ளை சாவடியில் எலும்பு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனை உள்ளது.

    இங்குள்ள உணவகத்தில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை கண்டு அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறையிலிருந்து வந்த ஊழியர் கண்ணன் சமையல் அறை அருகே விளம்பர பேனர் பின்புறம் மறைந்திருந்த பாம்பை போராடி பிடித்தார். பெண் செவிலியர் பாம்பை பிடிக்க உதவினார். பிடிபட்டது 5 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பாகும்.


    • கோடியக்கரை தென்கிழக்கே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • படகில் இருந்து மீன், வலை, மீன்பிடி சாதனங்கள் மற்றும் படகையும் பறிமுதல் செய்து இலங்கை கொண்டு சென்றனர்.

    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராஜ்குமார் (வயது40) என்பவரது விசைப்படகில் அவருடன் தங்கவேல் (48), ஆறுமுகம் (47), பிரபு (42), மணிவேல் (50), மதன் (27) மற்றும் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் என மொத்தம் 11 மீனவர்கள், கடந்த 17-ந் தேதி வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நேற்று காலை கோடியக்கரை தென்கிழக்கே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக துப்பாக்கி முனையில் 11 மீனவர்களையும் சுற்றி வளைத்தனர். மேலும் படகில் இருந்து மீன், வலை, மீன்பிடி சாதனங்கள் மற்றும் படகையும் பறிமுதல் செய்து இலங்கை கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவகிராம பஞ்சாயத்தார், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தருமாறு, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

    இலங்கை கடற்படையினரின் தொடர் அடாவடி மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அவர் மாற்றுத்திறனாளி என்பதும், தன்னால் உடனடியாக சாலையை கடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
    • பரவி வரும் வீடியோவால் போக்குவரத்து போலீ சாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில், முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முடியாமல் வெகு நேரமாக சாலையில் நடுவே காத்திருந்தார். போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மகேஸ்வரன், இதைப் பார்த்து அந்த முதியவர் அருகில் சென்று விசாரித்த பொழுது, அவர் மாற்றுத்திறனாளி என்பதும், தன்னால் உடனடியாக சாலையை கடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

    அதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் மகேஸ்வரன், உடனடியாக அருகில் இருந்த ஒருவரின் உதவியுடன், அந்த முதியவரை கை தாங்கலாக, தூக்கிச் சென்று சாலையை கடக்க உதவி செய்தார். இதை அருகில் இருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவால் போக்குவரத்து போலீ சாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

    • காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள செல்போன் கடைக்கு தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளது.
    • மற்ற கடைகளை விட விலை குறைவாக வழங்குவதாகவும் பல்வேறு புகார் வந்ததது.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு சாலையில் பிரபல செல்போன் கடை. இயங்கி வருகிறது. இந்த செல்போன் கடைக்கு தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளது. இந்த செல்போன் கடையில் உரிய கணக்கு மற்றும் வரி செலுத்தாமல் செல்போன்களை விற்பதாகவும், மற்ற கடைகளை விட விலை குறைவாக வழங்குவதாகவும் பல்வேறு புகார் வந்ததது. 

    இதனை தொடர்ந்து புதுச்சேரி வணிகவரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர், கடையில் திடீரெ ன நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத செல்போன் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் சுமார்6 மணி நேரத்துக்கு மேலாக சோதனை செய்து, சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள திருநள்ளாறு சாலை கடைவீதியில் வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார்.
    • முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கும்பகோணம் சுவாமிமலை மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் விஜயக்குமார்(வயது32). கார் டிரைவரான இவர், காரைக்கால் அருகே கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார். மேலகாசாகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையோரம் இருட்டில் நிறுத்தப்பட்ட காரில் தெரியாமல் மோதியதில், தூக்கியெறியப்பட்ட விஜயக்குமார் தலையில் பலத்த காயமுற்றார். உடனே அருகில் இருந்தோர், விஜயக்குமாரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் விஜயக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய போலீசார், சாலையோரம் காரை நிறுத்திய நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தை எதிர்க்கட்சித் தலைவர் முற்றுகை.
    • உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை நிறுத்தி வைப்பதாக அதிகாரி விளக்கம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியல் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வில்லியனூர் தொகுதியில் உள்ள கொம்பாக்கம் வார்டு பகுதியை சேர்ந்த 40 பேருக்கு முதியோர் உதவித்தொகை எம்.எல்.ஏ. பரிந்துரை இன்றி வழங்கப்பட இருந்தது.

    அமைச்சர் நமச்சிவாயம் பயனாளிகளுக்கு இந்த உதவித் தொகையை வழங்குவார் என பயனாளிகளுக்கு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. தகவலறிந்த எதிர்கட்சித்தலைவர் சிவா, தொகுதி தி.மு.க. நிர்வாகிகள், ஆதரவாளர்களோடு வந்து குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டார்.

    அப்போது இயக்குனர் முத்துமீனா அலுவலகத்தில் இல்லை. அவருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வரச்சொல்லும்படி ஊழியர்களிடம் சிவா வலியுறுத்தினார். அரை மணி நேரத்திற்கு பிறகு இயக்குனர் முத்துமீனா அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் தொகுதி எம்.எல்.ஏ. பரிந்துரையின்றி உதவித்தொகை வழங்க எப்படி முடிவு செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

    நியமன எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில், இறப்பு காலியிடங்களை வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நியமன எம்.எல்.ஏ.க்கு தொகுதியே இல்லாத போது எந்த அடிப்படையில் இறப்பு காலியிடம் அளிக்க முடியும்.? என சிவா கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளிக்க முடியாமல் இயக்குனர் முத்துமீனா திணறினார். உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை நிறுத்தி வைப்பதாக கூறினார். இதன்பின் எதிர்கட்சி த்தலைவர் சிவா அங்கிருந்து, ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

    • முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான்,பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கம்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தில் உள்ளூர் கலைஞர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் அரங்குகள் அமைத்து கைவினை பொருட்கள் உருவாக்கப்படுகிறது.

    இங்கு சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தனி அரங்கு உள்ளது. இங்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    அழிந்து வரும் காடுகள், வனவிலங்குகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், மீட்கும் முயற்சியாக சிற்பங்கள் உருவாக்கப்பட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான், பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது. இவை புதுவைக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர். மேலும் தங்கள் வீடுகளிலும், நிறுவனங்களிலும் சிற்பங்கள் அமைக்க தேவையான சிற்பங்களை ஆர்டர் கொடுத்தும் செல்கின்றனர்.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த ஆர்டர்கள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது விலங்கு மற்றும் பறவை சிற்பங்களுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் இரவு பகலுமாக கலைஞர்கள் ஆர்வத்துடன் சிற்பங்களை செய்து வருகின்றனர்.

    மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மிருகங்களின் சிலைகளையும் அரங்கில் அமைக்க ஏற்பாடும் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு உருவான விலங்குகளின் சிலைகள் ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    தற்போது பறவை, விலங்குகள் என 100 சிற்பங்கள் தயாராகி வருகிறது. இவை ஆந்திரா மாநிலத்தின் உள்ள நகர்வனம் பூங்காவில் வைக்கப்பட உள்ளது. இதேபோல் பிற மாநில பூங்காக்களுக்கும் புதுவையில் தயாராகும் சிற்பங்கள் செல்ல உள்ளது.

    முருகப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த வனவிலங்குகளின் சிலைகள் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்தும், வாங்கியும் செல்கின்றனர்.

    • 13 வயது சிறுமி, கடை வீதிக்கு வந்துவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
    • செல்போனில் உள்ள ஆபாச வீடியோ ஒன்றை போட்டு காட்டினார்.

    புதுச்சேரி: 

    காரைக்கால் அருகே திருநள்ளாறு நகர் பகுதியைச்சேர்ந்த 13 வயது சிறுமி, கடை வீதிக்கு வந்துவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது திருநள்ளாறு சுப்புராயபுரம் ெரயில்வே லைன் அருகே, 18 வயதுள்ள ஊர் பெயர் தெரியாத இளைஞர் ஒருவர், சிறுமியை வழிமறித்து, தன் செல்போனில் உள்ள ஆபாச வீடியோ ஒன்றை போட்டு காட்டினார். அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார். உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. விபரம் அறிந்த சிறுமியின் தந்தை, இது குறித்து, திருநள்ளாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இளைஞரை தேடிவருகின்றனர்.

    • ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கேலி செய்கின்றனர்.
    • எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில்தான் புதுவையின் ஒவ்வொரு நகர்வும் இருப்பதால் மாநில அந்தஸ்து அவசியம் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாக முதல்வர் ரங்கசாமி வேதனையுடன் கூறி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தக்கூடாது என அதிகாரிகள் உள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் செய்வதில் சிரமம் உள்ளது என ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கேலி செய்கின்றனர். புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகுமார் காரைக்காலில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்து போனார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது57). இவர், காரைக்காலில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார்.இவர் சம்பவத்தன்று மின்சாரம் தாக்கி காயம் அடைந்தார். உடனே காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்து போனார். இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
    • போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி, கடற்கரைச் சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரமோகன் மற்றும் கடலோர காவல் படை, தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்று நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    ×