என் மலர்
புதுச்சேரி
- அரசு மற்றும் தனியார் நிகழ்வுகளுடன் வழிபாட்டு தலங்களிலும் இந்த முறை சுதந்திர தின விழா களைகட்டியது.
- லாஸ்பேட்டை சிவசுப்ரமணியன் கோவிலில் 110 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
புதுச்சேரி:
நாட்டின் 76-வது சுதந்திர தின விழா புதுவையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
அரசு மற்றும் தனியார் நிகழ்வுகளுடன் வழிபாட்டு தலங்களிலும் இந்த முறை சுதந்திர தின விழா களைகட்டியது.
அனைத்து கோவில்களிலும் கொடி ஏற்ற வேண்டும் என்று அரசின் இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது.
இதன்படி லாஸ்பேட்டை சிவசுப்ரமணியன் கோவிலில் 110 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதமாக தேசிய கொடி நிறத்தில் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
- செல்வ ஹேமாவதி காரைக்கால் அடுத்துள்ள தனியார் ஆஸ்பத்தரியில் வேலை பார்த்து வருகிறார்.
- காரைக்கால் கடற்கரை சாலை அருகில் உள்ள பாரதி நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச்சங்கியை பறித்து சென்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் அடுத்த நிரவி பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் காரைக்காலில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வ ஹேமாவதி. இவர் காரைக்கால் அடுத்துள்ள தனியார் ஆஸ்பத்தரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது காரைக்கால் கடற்கரை சாலை அருகில் உள்ள பாரதி நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச்சங்கியை பறித்து சென்றனர். இதுகுறித்து ஹேமாவதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தேடி வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 28) மற்றும் மன்னார்குடி பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (27) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டத்தில் அவர்கள் ஹேமாவதியிடம் செயிைன பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
- சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய விடுதலை வீரர்களின் தியாகத்தால் அடிமை விலங்கை உடைத்தெறிந்தோம்.
- தேசத்தின் மாண்பை கட்டிக்காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுவை எப்போதும் முன்னணியில் இருந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரையின் முக்கியம்சங்கள் வருமாறு:-
நாடு முழுவதும் அமுத பெருவிழாவை கொண்டாடி வரும் இத்தருணத்தில் 75 ஆண்டுக்கு முன் நம் தேசம் இருந்த நிலையை எண்ணிப்பார்க்கிறேன். தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் திறமை இந்தியர்களுக்கு இல்லை என்றும், ஆங்கிலேயர் ஆட்சி மறைந்தால் அவர்கள் உருவாக்கிய முற்போக்கு நாகரீம் ஓர் இரவில் அழிந்துவிடும் என்றும் விடுதலைக்கு முன்பு நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூறினார்கள்.
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய விடுதலை வீரர்களின் தியாகத்தால் அடிமை விலங்கை உடைத்தெறிந்தோம். நம் உணர்வில் ஊறிய தேசபக்தியால் இந்திய திருநாட்டை தனித்தன்மை மிக்க நாடாக உலகரங்கில் உயர்த்தியுள்ளோம்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திர சொல் நம்மிடையே சமுதாய கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டுறவினால்தான் எந்த ஒரு கற்பனையாலும், செயற்கையான சூழ்ச்சியாலும் பிரிக்கவோ, பிளக்கவோ முடியாத ஒரு பொது சாதனையாக இந்தியாவை வளமாக்கியுள்ளோம்.
நாடு சுதந்திரம் பெறுவதற்காக தன் இன்னுயிரை ஈந்து அரும்பாடுபட்ட ஆயிரக்கணக்கான விடுதலை வீரர்களின் வீர தியாகத்தையும், நாட்டை உலகரங்களில் ஒப்பற்ற நாடாக உயர்த்த அயராது பாடுபட்ட தேச தலைவர்களையும் நன்றியோடு நினைத்து போற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.
அதனடிப்படையில்தான் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்றி உள்ளம்தோறும் தேச பக்தியை வெளிப்படுத்தினோம். தேச பக்தி என்பது நம் ஒவ்வொருவரின் உணர்விலும், கலந்தது என்பதை பெருமிதத்தோடு உலகிற்கு உணர்த்தியுள்ளோம்.
தேசத்தின் மாண்பை கட்டிக்காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுவை எப்போதும் முன்னணியில் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாது, வளர்ச்சியில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது. அந்த சாதனையை எமது அரசு எப்போதும் போல முன்னெடுத்துச்செல்வதில் பெருமிதம் கொள்கிறது.
புதுவை மக்களின் ஏகோபித்த ஆதரவோடு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை புதுவையில் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியோடு, பொறுப்பேற்ற எனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஓராண்டில் ஆக்கப்பூர்வமான பல வளர்ச்சி பணிகளை செய்துள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க சீர்மிகு வேளாண்மைக்கு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
அனைத்து சுகாதார வசதிகளும் மக்களுக்கு எளிதாக கிடைக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதியும், நிதியும் மத்திய அரசிடம் கோரியுள்ளோம். பள்ளி, கல்லூரி தரவரிசையில் புதுவை 4-ம் இடத்தில் உள்ளது.
ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக 12 திட்டங்களும், அந்த சமுதாய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த 12 திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.மீன் உற்பத்தியை பெருக்கவும், மீனவர் நலனை மேம்படுத்தவும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செம்மையாக செயல்படுத்தி வருகிறது.
மகளிர் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நிலமற்ற ஏழை மக்களுக்கு கடந்த ஓராண்டில் 115 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இலவச அரிசி திட்டத்தின் நேரடி பண பரிமாற்றம் மூலம் அரிசிக்கு பதிலாக பணமாக மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு சுற்றுலா, விருந்தோம்பல் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.
பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான தளத்தை விரிவுபடுத்த தமிழக பகுதியிலிருந்து 395 ஏக்கர் நிலமும், புதுவை பகுதியில் 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்த வேண்டும்.
இதற்காக ரூ.425 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம். இத்திட்டம் நிறைவேறும்போது உலக வரைபடத்தில் புதுவை ஒரு முக்கிய இடத்தை பெறும். மாநில அமைதிக்கு மகத்தான காவல்சேவையை அரசு வழங்கி வருகிறது. காவலர் பணியிடங்கள் வெளிப்படையாக, நேர்மையாக நிரப்பப்பட்டுள்ளன.
அரசு எந்திரம் தொய்வின்றி இயங்க அரசு ஊழியர்கள் நலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். 7-வது ஊதியக்குழு சம்பளம், நிலுவைத்தொகை, காலகட்ட பதவி உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கியுள்ளோம். மக்களின் நலன் கருதியும், மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லவும் எனது அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வரும்காலத்திலும் இதுபோன்ற புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு முனைப்பாக உள்ளது. மீண்டும் ஒரு முறை மாநில மக்கள் அனைவருக்கும் என் உளம்நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க பாரதம், வளர்க புதுவை மாநிலம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அரவிந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி அரவிந்தர் ஆசிரமம் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
- உலக மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் என்பது அரவிந்தரின் கனவு.
புதுச்சேரி:
1872-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர் அரபிந்த கோஷ்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலைக்கு பின்னர் புதுவைக்கு வந்து ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
அவரின் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஆசிரமம் அமைத்து மகான் ஸ்ரீ அரவிந்தர் என அழைத்தனர். அரவிந்தர் 1950-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி 78 வயதில் மறைந்தார். அவரது உடலை ஆசிரமத்திலேயே சமாதி வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் புதுவை நகரின் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், அரவிந்தர் பயன்படுத்திய அறை பக்தர்களின் தரிசனம் செய்ய திறக்கப்படும்.
இன்று அரவிந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி அரவிந்தர் ஆசிரமம் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 6 மணிக்கு தியான நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அரவிந்தர் பயன்படுத்திய அறையை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
உலக மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் என்பது அரவிந்தரின் கனவு. அதனை ஆரோவில்லில் சர்வதேச நகரை உருவாக்கி செயல்படுத்தியவர் அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை மீரா.
அரவிந்தரின் பிறந்த நாளை யொட்டி ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் அதிகாலை 4.30 மணியிலிருந்து 6. 30 மணி வரை போன் பயர் எனப்படும் தீபமேற்றி கூட்டு தியானம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள், ஆரோவில்வாசிகளும் பங்கேற்றனர்.
- கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டு மாடியில் 2 தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்கம் போல் ஒரு தேசியகொடியை ஏற்றியுள்ளனர். அங்கன்வாடி மூலம் கொடுத்த கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி புதுவையில் பல வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டு மாடியில் 2 தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது. போலீசார் வழக்கம் போல் ஒரு தேசியகொடியை ஏற்றியுள்ளனர். அங்கன்வாடி மூலம் கொடுத்த கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.
இதனை இன்று காலை பால்கனிக்கு மேல்சட்டையின்றி கைலியுடன் வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.
இதனை படமெடுத்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் படம் வைரலாகி வருகிறது.
- பக்தர்கள் பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
- எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக புகழ் மிக்க சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது, இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இன்று சனிக்கிழமை என்பதாலும், தொடர்ந்து ஞாயிறு | சுதந்திர தின விடுமுறை என தொடர் விடுமுறையாக இருப்பதால் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறு நளன் குளத்தில் புனித நீராடி சனீஸ்வரனை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சில பக்தர்கள் பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்தனர். எள் தீபம் ஏற்றி தங்களது தோஷங்கள் நீங்க வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் வருகை காரணமாக திருநள்ளாறு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா, கடந்த ஜூலை 11-ந் தேதி தொடங்கியது.
- பிரகாரப் புறப்பாடு நடைபெற்றது. அதேபோல், அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, பிரகார வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால்:
காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா, விடை யாற்றி உத்ஸவ நிகழ்ச்சி யுடன் நிறைவு பெற்றது. இறைவனின் திருவா யால் 'அம்மையே' என்ற ழைக்கப்பட்ட பெரு மைக்குரிய காரைக்கால் அம்மையார் கோவில், காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டு தோறும் நடைபெறும் காரைக்கால் அம்மையார் மாங்கனித்தி ருவிழா, கடந்த ஜூலை 11-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து, திருக்கல்யா ணம், பிச்சாண்டவர் வீதி யுலா, மாங்கனி இறைப்பு, அமுது படையல் மற்றும் புஷ்பபல்லாக்கு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மை யார் மணிமண்டபத்தில், தினந்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. நேற்று காலை 9 மணிக்கு விடையாற்றி உத்ஸவ நிகழ்ச்சி நடை பெற்றது.
அதுசமயம், கைலாச நாதர் கோவிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆரா தனை செய்யப்பட்டு, பிரா காரப் புறப்பாடு நடை பெற்றது. அதேபோல், அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, பிரகார வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன், அறங்காவல் வாரியத்தலைவர் வக்கில் வெற்றி செல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முக சுந்தரம், உறுப்பி னர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள், திரளான பக்கதர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- காரைக்காலில் 2-ம் கட்ட குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
- நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை யொட்டி, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒன்று முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அங்கன்வாடி, பள்ளி, கல்லூரியை சார்ந்த மாணவர்களுக்கு, 2-ம் கட்ட குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி, காரைக்கால் மேடுபக்கிரிசாமி உயிர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார்.நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரராசு, பொதுசுகாதார செவிலிய அதிகாரி மகேஸ்வரி, நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்சி ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள், சுகாதார உதவியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
- காரைக்கால் அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் கொள்ளையடிக்கப்பட்டது.
- 3 மின் விசிறிகள், காப்பர் ஒயர்கள், மரபலகைகள் மற்றும் செப்புப் பட்டைகள் திருடு போனது தெரிய வந்தது.
காரைக்கால்:
காரைக்காலை அருகே செருமாவிளங்கை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் உபயோகப்படுத்தாத விடுதி கட்டி டங்கள் பூட்டிக் கிடக்கின்றன. கட்டிடத்தை பழுது நீக்கும் எண்ணத்தில், கல்லூரி நிர்வாகம் அவ்வப்போது விடுதி பூட்டைத் திறந்து, துப்புரவு பணியை மேற்கொண்டுவந்தது. வழக்கம் போல் துப்புரவு பணி மேற்கொள்ள விடுதிக்குள் ஊழியர்கள் சென்றபோது, விடுதி பூட்டு உடைந்திருப்பது கண்டு, கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் குமார் விடுதியில் ஆய்வு நடத்தியபோது, விடுதியிலிருந்து 3 மின் விசிறிகள், காப்பர் ஒயர்கள், மரபலகைகள் மற்றும் செப்புப் பட்டைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து, அவர் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, கல்லூரி விடுதியில் காப்பர் மற்றும் மின்விசிறையை திருடிசென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.
- புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டதொடர் இன்று காலை தொடங்கியது.
- புதுவையில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டதொடர் இன்று காலை தொடங்கியது. கவர்னர் தமிழிசை உரையாற்றினார். கூட்டத்தில் இருந்து தி.மு.க-காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கவர்னர் உரை மீது நாளையும், நாளை மறுநாளும் விவாதம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதுவை சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.
கவர்னர் உரை மீதான விவாதம் வேறு தேதியில் நடைபெறுமெனவும் அவர் கூறினார். புதுவையில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் சட்டசபை காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- கவர்னர் தமிழிசை உரை நிகழ்த்த தொடங்கியதும் அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- புதுவை சட்டசபையில் வருகிற 17-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் தமிழிசை உரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்க வந்த தி.மு.க. - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
கவர்னர் தமிழிசை உரை நிகழ்த்த தொடங்கியதும் அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவர்களை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஆனால் கவர்னர் தமிழிசை தொடர்ந்து உரை நிகழ்த்தினார். நாளை மற்றும் நாளை மறுநாள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. இதில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.
புதுவை சட்டசபையில் வருகிற 17-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
- அஸ்வின் தனது நண்பர்கள் 6 பேருடன் புதுவையை சுற்றி பார்க்க வந்தார்.
- 6 பேர் மீட்கப்பட்ட நிலையில் அஸ்வின் மட்டும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டார்.
பாகூர்:
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன். இவரது மகன் அஸ்வின் (வயது 18). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு கல்லூரியில் சேர தயாராகி இருந்தார்.
இந்த நிலையில் அஸ்வின் தனது நண்பர்கள் 6 பேருடன் புதுவையை சுற்றி பார்க்க வந்தார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர்கள் புதுவை நகரப் பகுதியை சுற்றிப்பார்த்து சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு இன்று காலை வாடகை சைக்கிளில் வந்தனர். அவர்கள் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி 7 பேரும் சிக்கிக் கொண்டனர்.
இதில் 6 பேர் மீண்ட நிலையில் அஸ்வின் மட்டும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டார். அவரை அப்பகுதி மீனவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அஸ்வினை பிணமாகவே மீட்க முடிந்தது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






